ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

This entry is part 17 of 33 in the series 4 ஜனவரி 2015

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேசித்தோம் அவளை ஒருமுறையென

நெடுநாள் நினைவைத் தாண்டி

நீ எனக்கு நடுக்கம் தரும்படிச்

சொல்வாயா இந்தக்

கல்லறைக் களிமண் பூமியில் ?

உடன்பட மறுக்கும் உதடுகள்

ஊமை யாய்ப் போகும் !

வாழ்வின் பாப விடுவிப்பு

அப்படி இல்லை; அப்போ தில்லை !

குன்றிய அளவே !

மேலுலகில் உனை நேசித்து

வாழ்வோர்க்கு

மரணத்தின் பூரிப்பு முழுதும்

தரப் பட்டுள்ளது !

நவிலாதே ஒருபோதும்,

நாமெல்லாம் ஒருமுறை தான் அவளை

நேசித்ததாய் !

ஒருபோதும் சொல்லாய் நான்,

ஒருமுறை தான்

நேசித்தேன் என்று !

வெகு அருகில் உள்ளது இறை

கீழிருக்கும் நமது

புதைகுழிக்கு மேலே ! அம்மொழிக்கு

பிறப்பிலும் இறப்பிலும்

மர்மங்கள் நம் கால மெல்லாம்

விரைந்து மூச்சு விடும் !

நிரந்தர மானவை

நேர்மையாய் மெய்ப்பிக்கும் நமது

நேச உறவுகளை;

மாற்றத்தை நியாயப் படுத்தவோர்

மாற்றம் வராது !

எந்த எதிர்ப்பு வந்த போதினும்

நேசித்தேன் ஒருமுறை !

ஒருமுறையே என்னும் அந்த

ஒரே ஒரு சொல்தான்,

மனித சமூகம் ஏற்கும் ஒரு வார்த்தை,

மன்னர் உரைத்தனர் :

ஒருதரம் தான் அரசாண்டோம் என்று !

முடிசூடாத் தலை அசைப்பு அது !

வாழக் கற்றுக் கொடுத்தோம்;

வழி காட்டினோம் ஒருமுறை தான் என்பது,

கட்டு மீறியப் பற்றைக் காட்டும் !

ஒருமுறையே நேசித்த தாகக்

கனவு காண்போ ருக்கு,

காதல் வசப்படா தவருக்கு,

ஆயினும் மணிச் சத்தம் கேட்கும்

ஒரு கணத்தில்

நேயம் வந்த தென்று.

Series Navigationபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்றுகாலச்சுவடு வெளியீடுகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *