மஞ்சுளா நவநீதன்
கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று.
ஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் என்பது, ஒரு கிருஸ்துவன் சிறந்த் கிருஸ் துவன் ஆக வேண்டும் என்பதும் தான் ஒரு ஹிந்துவின் ஆவல் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது முழு உண்மை அல்ல.
“கிருஷ்ண உணர்வு” இயக்கம் (ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பலவிதங்களிலும் மக்களை ஹிந்து வாழ்முறைக்கு மாற்றியுள்ளது. உளவியல் ரீதியாக இதில் முதலில் இணைந்தவர்கள் கிருஸ்துவ மதப் பரப்பு மனநிலையினை மேற்கொண்டவர்கள் எனலாம். அந்த மன நிலையே அவர்களுக்கு மதப் பாரப்புதம் என்பது மதத்தை பாவிக்கும் ஒருவருக்கு கடமை என்று உணர்வு ஊட்டியிருக்கலாம்.
ஆனால் இந்தியாவிலேயும் தனிப்பட்ட முறையில் ஹிந்து மதத்திற்கு மதம் மாறுவது நிகழ்ந்து வந்திருக்கிறது. கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் போல்,மத மாற்றத்தை ஓர் இயக்கமாக ஹிந்து மதம் பாவிக்க வில்லை எனினும், முழுக்க ஹிந்து மதத்திற்கு மாறுவது நின்று விடவில்லை. , இந்தியாவிலேயே ஒரு நூற்றாண்டாக வேறு மதத்திற்குச் செல்வதும், பிறகு ஹிந்து ஆகிவிடுவதும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அந்தந்த ஊரில் எந்த மதம் மேனிலை பெற்றிருந்தது , எந்த மதத்தின் பிரதிநிதி வாக்கு வன்மை பெற்றிருந்தார் என்பதைப் பொறுத்து மதச் சார்புகள் உருவாவதும் பிறகு கலைவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அச்சுறுத்தல்கள், ஒருமைப் பட்ட மத அடையாளங்கள் மூலமாக வழி வந்த பின் சந்ததியினர் திரண்டு நின்றனர்.
விவேகானந்தர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிகாகோவில் நிகழ்த்திய உரையிலும் நான் உங்களை மதம் மாற்றுவதற்காக வரவில்லை என்று தெரிவிக்கிறார். ரஜனீஷ் ஆசிரமம் ஆகட்டும், மாதா அமிர்தானந்த மயி ஆகட்டும், ஸ்ரீ ரவிசங்கர் ஆகட்டும் மதமாற்றம் என்ற ஒன்றை முன்வைப்பதில்லை. அது அவசியம் இல்லை, மக்களின் மன மாற்றம் ஒன்றே போதும் என்பது அவர்களின் வழி.
ஆனால் இன்றைய நிலையில் இது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.
துரதிர்ஷ்ட வசமாக கடந்த சில நூற்றாண்டுகளில் மதம் என்ற நிறுவனத்தின் “விளையாட்டு” விதிகள் பெருமளவு மாறி விட்டன. கிருஸ்துவம் மற்றும், இஸ்லாம் வெளிப்படையாக ஏகாதிபத்தியத்தின் எழுச்சியிலும், பரவலிலும் வெளிப்படையான மத அடையாளங்களுடன் முன் வந்து யுத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இதன் பலி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய நம்பிக்கைகளும் மதங்களும், கலாசாரங்களும் தான்.
ஏகாதிபத்தியம் வெறும் பொருளாதாரப் போரை மட்டும் நிகழ்த்தவில்லை. கலாசாரத்தை சிதைத்து, பாரம்பரிய வழிபாட்டினை ஏளனம் செய்து, பாரம்பரிய மொழிகளை மெல்ல பேச்சிலிருந்தும், புழக்கத்திலிருந்தும் விலக்கியது. இதற்கு மதம் துணை நின்றது. அராபிய நாடுகளாக என்றுமே இருந்திராத நாடுகளிலும் அரபு மொழி இன்று புழங்குகிறது. பிரெஞ்சும், ஆங்கிலமும் கிருஸ்துவ ஏகாதிபத்தியம் வேர் ஊன்றிய நாடுகளில் பிற பாரம்பரிய மொழிகளை விரட்டியது அல்லது, எழுத்துருவை ஆங்கிலமாக்கியது. அதனால் இந்து மதமாற்ற இயக்கம் என்பது பாரம்பரிய மொழி வளங்களை பாதுகாக்கிற இயக்கமும் கூட.
இந்தப் போக்கு பற்றிய உணர்வு மத ரீதியான ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வுகளையும் அதற்கான எதிர்ப்பு உணர்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும் அனால் அது நிகழவில்லை. ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை வெறும் பொருளாதார யுத்தமாகப் பார்க்கும் பார்வை மதவாதிகளுக்கு மிகச் சாதகமான பார்வை. மார்க்சியர்கள் இந்த ஆய்வினை நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால் அவர்களால் அது கூடவில்லை. உடனடி அரசியல் லாபங்கள் அவர்களின் ஆய்வு நேர்மையை பலி கொண்டு விட்டது.
ஹிந்து மதத்தினுள் பிரிவுகளுக்குள் முரண்பாடுகள் நிகழ்ந்தன எனபது உண்மை தான். வைணவமும், சைவமும் மோதியதுண்டு., ஆனால் இன்று இந்து என்ற அடையாமல் மிக வலுவாக ஒருமை கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்குள் துணைப்பிரிவு மோதல்கள் வன்முறையின் பெரும் துணை கொண்டு நிகழ்த்தப் படுகின்றன., கிருஸ்துவப் பிரிவுகளுக்குள்ளும் இந்த மோதல்கள் ஓய்ந்தபாடில்லை.
இந்து மதமாற்ற இயக்கம் வலிமையாக எழ வேண்டிய தருணம் இது. இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல. இந்தியாவின் ஜனநாயகத் தன்மையையும்,மத சுதந்திரத்தையும் மற்ற மதத்தினருக்கும் மீட்டுத் தரும் ஒரு பணி இது. இது வெறுமே அரசியல் இயக்கமாய் இருந்து பயனில்லை. கலாசார இயக்கமாக மலர வேண்டும்.
இன்று இந்து இயக்கங்கள் இந்த உண்மையை உணரவேண்டும். அரசியல் சார்பு தாண்டி, திமுக, அதிமுக, காங்கிரஸ் அல்லது பாஜக எந்தக் கட்சியானாலும் ஹிந்து என்ற உணர்வு கொண்டவர்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனால் கிருஸ்துவர், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்பதும் ஒரு அனுமானம் தானே தவிர இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
இந்து மத மாற்ற இயக்கம் வெறும் இந்து மதத்தினை முன்னிலைப் படுத்தியதல்ல . பிற மதங்களில் இல்லாமற் போன விசாரணை மனநிலையையும், ஜனநாயகத் தன்மையையும் மீட்டுத் தருகிற இயக்கமாய் மலர வேண்டும்.
பிற மதத்தில் உள்ள ஜனநாயக மரபு பேணுவோரும் , திறந்த விவாதத்திற்கு மதக் கோட்பாடுகளை ஆட்படுத்த வேண்டும் என்று எண்ணுவோரும், இந்து மத மாற்ற முயற்சியை திறந்த மனதுடன் ஆதரிக்க வேண்டும்.
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25