கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.

This entry is part 1 of 33 in the series 4 ஜனவரி 2015

மஞ்சுளா நவநீதன்

gandhiquoteகர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று.

ஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் என்பது, ஒரு கிருஸ்துவன் சிறந்த் கிருஸ் துவன் ஆக வேண்டும் என்பதும் தான் ஒரு ஹிந்துவின் ஆவல் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது முழு உண்மை அல்ல.

“கிருஷ்ண உணர்வு” இயக்கம் (ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பலவிதங்களிலும் மக்களை ஹிந்து வாழ்முறைக்கு மாற்றியுள்ளது. உளவியல் ரீதியாக இதில் முதலில் இணைந்தவர்கள் கிருஸ்துவ மதப் பரப்பு மனநிலையினை மேற்கொண்டவர்கள் எனலாம். அந்த மன நிலையே அவர்களுக்கு மதப் பாரப்புதம் என்பது மதத்தை பாவிக்கும் ஒருவருக்கு கடமை என்று உணர்வு ஊட்டியிருக்கலாம்.

ஆனால் இந்தியாவிலேயும் தனிப்பட்ட முறையில் ஹிந்து மதத்திற்கு மதம் மாறுவது நிகழ்ந்து வந்திருக்கிறது. கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் போல்,மத மாற்றத்தை ஓர் இயக்கமாக ஹிந்து மதம் பாவிக்க வில்லை எனினும், முழுக்க ஹிந்து மதத்திற்கு மாறுவது நின்று விடவில்லை. , இந்தியாவிலேயே ஒரு நூற்றாண்டாக வேறு மதத்திற்குச் செல்வதும், பிறகு ஹிந்து ஆகிவிடுவதும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அந்தந்த ஊரில் எந்த மதம் மேனிலை பெற்றிருந்தது , எந்த மதத்தின் பிரதிநிதி வாக்கு வன்மை பெற்றிருந்தார் என்பதைப் பொறுத்து மதச் சார்புகள் உருவாவதும் பிறகு கலைவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அச்சுறுத்தல்கள், ஒருமைப் பட்ட மத அடையாளங்கள் மூலமாக வழி வந்த பின் சந்ததியினர் திரண்டு நின்றனர்.

விவேகானந்தர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிகாகோவில் நிகழ்த்திய உரையிலும் நான் உங்களை மதம் மாற்றுவதற்காக வரவில்லை என்று தெரிவிக்கிறார். ரஜனீஷ் ஆசிரமம் ஆகட்டும், மாதா அமிர்தானந்த மயி ஆகட்டும், ஸ்ரீ ரவிசங்கர் ஆகட்டும் மதமாற்றம் என்ற ஒன்றை முன்வைப்பதில்லை. அது அவசியம் இல்லை, மக்களின் மன மாற்றம் ஒன்றே போதும் என்பது அவர்களின் வழி.

ஆனால் இன்றைய நிலையில் இது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.

துரதிர்ஷ்ட வசமாக கடந்த சில நூற்றாண்டுகளில் மதம் என்ற நிறுவனத்தின் “விளையாட்டு” விதிகள் பெருமளவு மாறி விட்டன. கிருஸ்துவம் மற்றும், இஸ்லாம் வெளிப்படையாக ஏகாதிபத்தியத்தின் எழுச்சியிலும், பரவலிலும் வெளிப்படையான மத அடையாளங்களுடன் முன் வந்து யுத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இதன் பலி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய நம்பிக்கைகளும் மதங்களும், கலாசாரங்களும் தான்.

ஏகாதிபத்தியம் வெறும் பொருளாதாரப் போரை மட்டும் நிகழ்த்தவில்லை. கலாசாரத்தை சிதைத்து, பாரம்பரிய வழிபாட்டினை ஏளனம் செய்து, பாரம்பரிய மொழிகளை மெல்ல பேச்சிலிருந்தும், புழக்கத்திலிருந்தும் விலக்கியது. இதற்கு மதம் துணை நின்றது. அராபிய நாடுகளாக என்றுமே இருந்திராத நாடுகளிலும் அரபு மொழி இன்று புழங்குகிறது. பிரெஞ்சும், ஆங்கிலமும் கிருஸ்துவ ஏகாதிபத்தியம் வேர் ஊன்றிய நாடுகளில் பிற பாரம்பரிய மொழிகளை விரட்டியது அல்லது, எழுத்துருவை ஆங்கிலமாக்கியது. அதனால் இந்து மதமாற்ற இயக்கம் என்பது பாரம்பரிய மொழி வளங்களை பாதுகாக்கிற இயக்கமும் கூட.

இந்தப் போக்கு பற்றிய உணர்வு மத ரீதியான ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வுகளையும் அதற்கான எதிர்ப்பு உணர்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும் அனால் அது நிகழவில்லை. ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை வெறும் பொருளாதார யுத்தமாகப் பார்க்கும் பார்வை மதவாதிகளுக்கு மிகச் சாதகமான பார்வை. மார்க்சியர்கள் இந்த ஆய்வினை நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால் அவர்களால் அது கூடவில்லை. உடனடி அரசியல் லாபங்கள் அவர்களின் ஆய்வு நேர்மையை பலி கொண்டு விட்டது.

ஹிந்து மதத்தினுள் பிரிவுகளுக்குள் முரண்பாடுகள் நிகழ்ந்தன எனபது உண்மை தான். வைணவமும், சைவமும் மோதியதுண்டு., ஆனால் இன்று இந்து என்ற அடையாமல் மிக வலுவாக ஒருமை கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்குள் துணைப்பிரிவு மோதல்கள் வன்முறையின் பெரும் துணை கொண்டு நிகழ்த்தப் படுகின்றன., கிருஸ்துவப் பிரிவுகளுக்குள்ளும் இந்த மோதல்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்து மதமாற்ற இயக்கம் வலிமையாக எழ வேண்டிய தருணம் இது. இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல. இந்தியாவின் ஜனநாயகத் தன்மையையும்,மத சுதந்திரத்தையும் மற்ற மதத்தினருக்கும் மீட்டுத் தரும் ஒரு பணி இது. இது வெறுமே அரசியல் இயக்கமாய் இருந்து பயனில்லை. கலாசார இயக்கமாக மலர வேண்டும்.

இன்று இந்து இயக்கங்கள் இந்த உண்மையை உணரவேண்டும். அரசியல் சார்பு தாண்டி, திமுக, அதிமுக, காங்கிரஸ் அல்லது பாஜக எந்தக் கட்சியானாலும் ஹிந்து என்ற உணர்வு கொண்டவர்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனால் கிருஸ்துவர், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்பதும் ஒரு அனுமானம் தானே தவிர இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்து மத மாற்ற இயக்கம் வெறும் இந்து மதத்தினை முன்னிலைப் படுத்தியதல்ல . பிற மதங்களில் இல்லாமற் போன விசாரணை மனநிலையையும், ஜனநாயகத் தன்மையையும் மீட்டுத் தருகிற இயக்கமாய் மலர வேண்டும்.

பிற மதத்தில் உள்ள ஜனநாயக மரபு பேணுவோரும் , திறந்த விவாதத்திற்கு மதக் கோட்பாடுகளை ஆட்படுத்த வேண்டும் என்று எண்ணுவோரும், இந்து மத மாற்ற முயற்சியை திறந்த மனதுடன் ஆதரிக்க வேண்டும்.

Series Navigationதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
author

மஞ்சுளா நவநீதன்

Similar Posts

29 Comments

  1. Avatar
    BS says:

    suppressio veri suggestio falsi என்பார்கள். பொருள்: உண்மையை மறைப்பது பொய்யைப் பரப்புதலாகும்.
    Half truth is a full lie. பொருள்: பாதி உண்மையென்பது முழுப்பொய்யாகும்.

    இக்கட்டுரை கூறும் பாதியுண்மையென்ன?

    –>வீடுதிரும்பதல் இயக்கம் வெறும் கலாச்சார மாற்றம் மட்டுமே.

    ஏன்?

    ஒரு கிருத்துவனோ மூஸ்லீமோ வீடு திரும்பதல் நிகழ்ச்சியில் பங்கேற்று மதமாறினார்கள் என்றால், அது வெறும் கலாச்சார மாற்றம் என்பது பொய். ஏனெனில், கிருத்துவரிடையேயும் முசுலீம்களிடையேயும் இந்துக்கலாச்சாரம் ஊடுருவித்தானிருக்கிறது. வெளிப்படையாகத் தெரியும் ஹிந்துமத அடையாளங்கள் முசுலீம்கள் தவிர்க்கலாம். ஆனால் முசுலீம் பெண்கள் பூ வைப்பார்கள்; பொட்டு தவிர்க்கலாம். கிருத்துவப்பெண்களோ இரண்டையும் செய்வார்கள். தமிழக அமைச்சராக இருந்த ஜென்னிஃபரும், மத்திய அமைச்சரும் இராஜஸ்தான் ஆளுநருமாக இருந்த மார்க்ரேட் ஆல்வா பெரிய பொட்டுக்களுடந்தான் காட்சியளிப்பார்கள். நேற்று ஒரு கிருத்துவர் என் அலுவலகத்தில் வந்து மணவிழா (அவர் மகளுக்கு) அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப்போனார். அதைப்பார்த்தால் நான்மூலைகளிலும் மஞ்சள் வைத்திருந்தார். உடை, நடை, பாவனை, மொழி, அம்மொழியில் ஊடுருவிக்கிடக்கும் இந்துமதக்கருத்துகள் (பாரம்பரியமாக வருபவை – முசுலீம்கள் தர்கா வழிபாடு என்று சொல்லி இறந்த முன்னோர்களை இந்துக்கள் போல வழிபடுகிறார்கள். ), விழாக்கள், உணவருந்தல், – private and public life of Indians, especially in South – is common i.e.. Hinduised culture – என்று ஒரே கலாச்சாரத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.

    சரி, பின்னென்ன வேறுபாடுகள்? இறை வழிபாட்டிலும் மதத் தொடர்பான பண்டிகைகளைக் கொண்டாடுவதிலுமே (அக்கொண்டாட்டம் கூட அப்பட்டமான இந்துக்காப்பியாகத்தானிருக்கும் :-). கிருத்துவரும் இசுலாமியரும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். மதுரையில் மிக விசேசம். மசூதி தொழுகை மட்டுமே வித்தியாசத்தைக்காட்டும்.

    வீடு திரும்பதல் என்பது இந்துமதக் கொள்கைகள் – கர்மா, மறுபிறவி, கடவுளை பல அவதாரங்களில் உருவங்களிலும் வைத்து வணங்குதல், கோயில் வழிபாட்டு முறைகள், வடமொழியில் சொல்லப்படும் மந்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல், சாதிகளை ஏற்று அவரவர் சாதிக்குள் அடங்குதல், வருணக்கொள்கையை ஏற்றல், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக வேண்டும், வைதிக மதக்கருத்துகளை எதிர்க்காமலிருத்தல், பெரியாரைக் கருத்துக்களை – பிராமண எதிர்ப்பு _ எதிர்த்தல் – இவையெல்லாமே கலாச்சார மாற்றத்தில் வாரா. மதமாற்றத்தில் மட்டுமே வரும்.

    வீடுதிரும்புதல் என்பது முழுக்கமுழுக்க மதமாற்றம். அதில் எஞ்சி விலகி நின்ற கலாச்சார வேறுபாடுகள் அழிந்து கலாச்சார மாற்றம் முழுமையடையுமென என்று மட்டுமே சொல்லலாம்.

    If not, can she say, if a muslim comes and is accepted in GHAR VAPASI, he or she can continue to attend Masjit prayers five times? a christian continue to worship the Holy Cross and read the Bible?

    பொய்யை திறமையாக பத்திபத்தியாக அழகாகப் பிரித்து இக்கட்டுரை முன்வைக்கிறது.

    1. Avatar
      paandiyan says:

      //If not, can she say, if a muslim comes and is accepted in GHAR VAPASI, he or she can continue to attend Masjit prayers five times? a christian continue to worship the Holy Cross and read the Bible//

      very first can you understand better before you type the above?

      1. Avatar
        BS says:

        I don’t understand you. Can you write in Tamil? To make you understand about how this essay conceals some vital points, I explain again in Tamil:

        கலாச்சார மாற்றம் மட்டுமே என்றால், ஒரு கிருத்துவர் இந்துக்கலாச்சாரத்தை ஏற்கனவே பேணிக்கொண்டுதானிருக்கிறார். அப்படியே பேணவில்லையென்று எடுத்தாலும் – எ.கா பெந்தேகோஸ்தர்கள் – அவர்கள் வீடு திரும்புதல் மூலம் கலாச்சார மாற்றத்தை மட்டுமே அடைவார்கள் என்றால், வீடு திரும்புதலுக்குப் பின் அவர்கள் பையிள் படிக்கலாமா? சர்ச்சுக்குப் போகலாமா?

        இக்கேள்விகள் பொருள் பொதிந்தவை. கத்தோலிக்கச் சபை தென்னிந்தியாவிலும் வடக்கில் பழங்குடியினரிடம், நீங்கள் உங்கள் வழியிலேயே வாழங்கள்; கடவுள் மட்டும் கிருத்துவக்கடவுள். அவரை சர்ச்சுக்கு வந்து வழிபடுங்கள் என்று மட்டுமே சொல்வது அவர்கள் உபாயம்.

        இவர்களுக்கு என்ன கலாச்சார மாற்றம் வரும்? எனவே தான் வீடுதிரும்புதல் கலாச்சார மாற்றம் மட்டுமே என்பது பொய். இந்துமதக்கொள்கைகளை ஏற்றலே என்பதுதான் உண்மை. ஏற்றுவிட்டால் மட்டுமே கலாச்சாரம் தானாகவே வந்துவிடும். முதலில் வருவது ஏற்றல். பின்னால் தன்னாலேயே வருவது மாற்றல்.

        கட்டுரையாளர், இதை மறைத்து, வெறும் கலாச்சார மாற்றமே வீடு திரும்புதலில் இருக்கிறது என்பதாக அறிய வைக்கிறார்.

        வீடு திரும்பிய பின், கண்டிப்பாக –

        –கர்ம வினையை நம்ப வேண்டும்;
        –கடவுளை எல்லாப்பொருள்களிலும் காணவேண்டும். (அப்படிக்காண்பதுதான் இந்துமதம் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் அஹமதாபாத் கூட்டத்தில் இரு நாட்களுக்கு முன் சொன்னார்) விலங்குகள், அஃறிணைப்பொருள்கள் இவற்றிலெல்லாம் கண்டு கல்லை, மரத்தை, பாம்பை, பசுவை தொழ வேண்டும். (கிருத்துவமும் இசுலாமும் இதை ஏற்பதில்லை. எனவே ஒரு கிருத்துவர், இசுலாமியர் வீடு திரும்பலை ஏற்றுக்கொண்டால், இப்படி இறைக்கொள்கையை ஏறக வேண்டும்);
        –மறுபிறவியை நம்பவேண்டும்;
        –கடவுள் பல அவதாரங்கள். ஆயிரக்கணக்கான வடிவங்கள். ஆயிரக்கணக்கான பெயர்கள்; கடவுள் வந்து மனிதரைப்போல வாழ்வார்; தவறும் செய்வார். பின்னர் தண்டிக்கப்படுவார்.
        –ஒரு கடவுள் அல்ல, மும்மூர்த்திகள். இவை போக, அம்மன். எந்த வகையாக இருந்தாலும் மனித உருவிலேயே கடவுள் வழிபடப்படுவார் என்பதை ஏற்க வேண்டும். சிலை வழிபாடு ஏற்கப்படவேண்டும்.

        சுருக்கமாக, ஆறுவகை இறைவழிகளைச் சரியென்று, அவையனைத்தையும் அல்லது ஒன்றை ஏற்க வேண்டும்.
        –சாதிகளை நம்ப வேண்டும். (வீடு திரும்பியவர்கள எந்த ஜாதியில் சேர்க்க என்ற கேள்வியை வைத்த்போது, அவர்கள் முன்னோர்கள் ஜாதியிலேயே அடங்கலாம் எனப் பதில் சொன்னார் பிர்பல சாமியார்கள்)
        –வருணாஷ்ரதர்மத்தை ஏற்றுப் பிராமணர்கள் என்பவர் உண்டு அவர் இறைவனின் தலையிலிருந்து வந்தார் என்பதை ஏற்க வேண்டும். குலத்தொழிலகள உள. அவரவ்ர் ஜாதிக்கு குலத்தொழில் உண்டு எனபதை ஏற்க வேண்டும். (இக்கொள்கை இன்று அமலில் இல்லையென்றாலும், கொள்கையளவில் ஏறக வேண்டும்.)

        இன்னும் பல உண்டு. அவற்றில் மேலே சொன்னவை இன்றியமையாதவை. இந்து ஒருவன் என்றால் அவன் இவற்றை ஏற்க வேண்டும். வீடுதிரும்புதலில் ஒரு இசுலாமியனோ, கிருத்துவனோ சேர்ந்தால், இந்து மதத்தில் முக்கிய கொள்கைகள ஏற்க வேண்டும். அதாவது இசுலாமியர் அல்லவை விட்டுவிட வேண்டும். குரானையும் விட்டுவிட வேண்டும். காரணம் அது ஒரே கடவுள் கொள்கையைக்கொண்டது)

        (If anybody differs from one or two points I’ve listed above, I am glad to accept the difference, provided my basic point namely, the returnees should accept Hindu religious theology, is unshaken)

        இப்போது சொல்லுங்கள். வீடு திரும்புதல் வெறும் கலாச்சார மாற்றமே என்று மஞ்சுளா நவநீத கிருஸ்ணன் சொல்வதை ஏற்க முடியுமா?

  2. Avatar
    paandiyan says:

    இதற்க்கு விமர்சனம் பண்ணும் முன்னால் jo di குரூஷ் அவர்களின் வீடியோ வையும் ஒரு தரம் youtube இல் பார்த்துவிடுங்கள்.

  3. Avatar
    ESSARCI says:

    அய்யா, கடவுள் மறுப்பாளனும் இந்து மதத்தில் வேத காலத்திலிருந்தே உண்டு. நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லையா.ராமர் படம் வைத்து சேலத்தில் செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தியவர்கள் எல்லோரும் இந்து மதத்தவர்கள் தான். பெரியார் இந்து மதத்தை விமர்சனம் செய்தாலும் அவர் இந்து என்பது மட்டுமே உண்மை. வீடு திரும்பியவர்கள் எல்லோரும் பழனிக்கு பால் காவடி எடுக்கவேண்டும் என்று கட்டாயமா? ‘நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமுணு க்கும் மூடு மந்திரம் ஏதடா’ என்ற சித்தந்தான் முத்ல் இந்து…
    -எஸ்ஸார்சி

  4. Avatar
    Rama says:

    BS, are you for banning all conversions, especially where money, inducements and threats are involved? Yes,Ghar Wapasi is conversion back to Hinduism. Indian Christians did not exactly came from Europe and neither the Indian Muslims came from Arabia.They were all Hindus once and the term ” Returning to their ancestral faith and CULTURE” is very apt. What is your problem here? Either ban conversion across the board, IRRESPECTIVE OF ANY REASON OR ALLOW HINDUS DO WHAT THE ABRAHAMIC FAITHS HAVE BEEN DOING FOR YONKS. Oh, don’t worry about which Jati or caste these converts will belong to. We Hindus will do the worrying and we will sort it out, thank you. See, it is OUR problem.Spend more of your time and effort on caste in your Christianity.

    1. Avatar
      BS says:

      //Oh, don’t worry about which Jati or caste these converts will belong to. We Hindus will do the worrying and we will sort it out, thank you. See, it is OUR problem.Spend more of your time and effort on caste in your Christianity.//

      ஆபத்தான சிந்தனை. வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்துவோர் சார்பாக எழுதினால் வி ஹிந்து என்றெழுதுவது பிழை. ஹிந்துக்கள் என்றால் ஹிந்துத்வாவினர்கள் மட்டுமல்ல என்பதை ஹிந்துத்வாவினர் நடாத்தும்தளங்களில் மறுக்கலாம். இங்கு செல்லாது. ஹிந்துக்களுக்கு மட்டும்; இசுலாமியருக்கு மட்டும்; கிருத்துவருக்கு மட்டும் என்று எந்த கட்டுரையும் இங்கு போடப்படவில்லை. எல்லாக் கட்டுரைகளும் திறந்து வைக்கப்பட்ட விவாதப்பொருள்கள். நினைவிருக்கட்டும். கட்டுரையாளர்களும் விமர்சனங்களை எதிர்நோக்க தயாராக வேண்டும். If there is a right to free speech, implicit within it there has to be a right to offend.

      நாங்கள் கவனித்துக்கொள்வோம் என்னும் இந்த ராமா வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்துவோர் சார்பாக பேசுகிறாரா? மஞ்சுளா நவநீதந்தான் கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் எழும் ஐயங்களை அவர்தான் தீர்க்கவேண்டும். ராமா என்ற இவரும் முடிந்தால் தீர்க்கலாம். ஆனால் தவிர்க்க முயலுகிறார்: Not only he attempts to flee but dares to stop others writing.

      எந்த ஜாதியில் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டார்கள் – அவரவர் முன்னோர் ஜாதிகளிலேயே சேர்க்கப்படுவார்கள். அதாவது, தலித் கிருத்துவர்களும், மீனாட்சி புரம் தலித் இசுலாமியரும் இந்த நிகழ்ச்சிக்குப்புறம் தலித்துகளாகவே இருப்பர். கிருத்துவ பிராமணர்கள் (திருச்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள்), கிருத்துவ பிள்ளைகள், நாடார்கள் (கன்யாகுமரி, நெல்லை மாவட்டங்கள்) கிருத்துவ தேவர்கள் (மதுரை), கிருத்துவ வன்னியர்கள், முதலிகள் (வடமாநிலங்கள், மற்றும் புதுச்சேரி) – அப்படியே பிராமணர்களாகவும், நாடார்களாகவும், தேவர்களாகவுமே இருப்பர். ஆக, ஜாதிகள் அப்படியே தொடரும். இது ஏற்கப்பட்டவொன்று. எனவே ஐயமில்லை.

      பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள்;

      –வீடு திரும்புதல் நிகழ்ச்சி வெறும் கலாச்சார மாற்றத்துக்கு மட்டுமே என்றெழுதுகிறார் மஞ்சுளா நவநீதன். அப்படியென்றால், நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர், நிகழ்ச்சிக்குப்பின் மஜுதிக்குப்போய் ஐந்து வேளைகள் தொழலாமா? குரான் ஓதலாமா? பைபிளைப்படிக்கலாமா? சர்சுக்குப் போகலாமா?

      இங்கு போடப்படும் கட்டுரைகளே விவாதப்பொருள்கள். அதைப்பற்றி எவரும் பேசக்கூடாதென்று சொல்லிக்கொண்டு இங்கு எழுதவராதீர்கள். உங்களால் முடியாவிட்டால் விலகிக்கொள்ளுங்கள். வி ஹிந்துஸ் என்று சொல்ல ஹிந்துமதம் எவருக்கும் தனி உரிமை வழங்கவில்லை. இம்மதம் ஒரு பொதுச்சொத்து.

      மஞ்சுளா நவநீதன் விளக்கம் கொடுக்கட்டும். The onus to clarify all doubts is upon her, first and foremost. You can join also.

    2. Avatar
      BS says:

      People do worry about jati factor in converting back to Hinduism.

      ஹிந்து தலைவர்கள் – அதாவது சில சாமியார்களும், வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்தும் சங்க் பரிவாரங்களும் – அவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று. தலித்துகள் இந்துமதத்தைவிட்டு விலகக்காரணம் தீண்டாமைக்கொடுமையே. ஜாதியினால் வந்தது. இந்து மதத்துக்குத் திரும்ப வேண்டுமானால், மீண்டும் ஜாதி உண்டு என்றால், ஏன் அவர்கள் திரும்பவேண்டும்?

      1. Avatar
        BS says:

        @அவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று.

        அவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று சொல்லிவிட்டார்கள் – இப்படி திருத்தி வாசிக்கவும்.

  5. Avatar
    BS says:

    1.பயமுறுத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, பசியை நீக்க‌ கொடுக்கப்படும் ரொட்டித் துண்டுகளுக்காக, பிற வாழ்க்கை வசதிகளைப் பெற ஒருவன் இன்னொரு மதத்துக்குச் செல்கிறானென்றால், அதை மதமாற்றம் என்று சொல்வது தவறு. மதமாற்றங்கள் என்ற பெயரில் இப்படி நடைபெறுபவைதான் அதிகம். இவை போலி மதமாற்றங்கள். இப்படி பிறமதங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தால் அதை நான் தட்டாமல் அமைதியாக ஏற்பேன்.

    2.தான் பிறந்த மதத்திற்கு அவன் மனமாறத் திரும்பவேண்டும். பிறந்த மதத்தைவிட்டுவிட்டுப் பிறமதத்திற்கு சென்றதற்காக வருந்தி வரவேண்டும்.

    — காந்தி.

    இக்கட்டுரையின் முகப்பில் போடப்பட்டிருக்கும் காந்தியின் பேச்சை தமிழாக்கம் பண்ணினால் இப்படித்தான் எனக்கு வருகிறது. (இரண்டாவது பத்தியில் எடிட்டிங் தவறு நிகழ்ந்திருக்கிறது. சில சொற்கள் நீங்கியிருந்திருக்க வேண்டுமாதலால், குழப்பமாக எழுதப்பட்டிருக்கிறது. காந்தி தெளிவான ஆங்கிலத்துக்கு உலகப்புகழ் பெற்றவர். எடிட்டிங் பண்ணினவர் அரைகுறை போலும்.)

    காந்தியின் இக்கருத்தை தன் முகப்பிலேயே போட்டு தம் கட்டுரைக்கு வலிமை சேர்க்க ஆசைப்பட்டிருக்கிறார். எவ்வளவு தூரம் அதைச்சாதித்திருக்கிறார் எனபது வாசகர்கள் முடிவுசெய்வர். இங்கே காந்தியின் இக்கருத்தை இக்கட்டுரையோடு சேர்த்துவைத்து ஆராயுங்கள். மனமாறத் திரும்பினார்களா? பிறமதத்துக்கு சென்றதற்காக வருந்தி திரும்பினார்களா?

    (இந்த கேள்விகளை வைத்து ஒரு தனிக்கட்டுரை அனுப்புகிறேன்.)

    சிந்திக்க விரும்பும் சிலர் மேலும் வாசிக்கலாம்:

    இதே காந்தியின் இன்னொரு பேச்சும் உலகப்புகழ் வாயந்தது>

    //There are people in the world so hungry, that God cannot appear to them except in the form of bread//

    தமிழாக்கம்: //பசியை நீக்க வரும் ரொட்டித்துண்டின் வடிவைத்தவிர, பசியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இறைவன் வேறுவடிவில் தோன்ற மாட்டான் !//

    ஹிந்துத்வாவினரின் இன்றைய நாயகராக எடுக்கப்படும் சுவாமி விவேகானந்தர் சொன்னது: மக்கள் சேவையே மகேசன் சேவை.

  6. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு B.S. அவர்களே,

    தாங்கள் “கலாசார மாற்றம்” என்ற ஒரு சொற்றொடரைப் பிடித்துத் தொங்குவதாக எனக்குப்படுகிறது.

    சமய கலாசாரத்தைப் பொறுத்தவரை, ஆபிரஹாமிய சமயங்களும், இந்து சமயங்களும் (இதில் சமண, புத்த, சீக்கிய சமயங்களும் அடங்கும்) வேறுபட்டவையே. இந்து, சமண புத்த சீக்கிய சமயங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலாசாரம் உடையவை, நம்பிக்கையும் உடையவை.

    ஆனால், அபிரகாமிய சமயங்கள் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் வேறுபட்டவையே! இதில் சந்தகமே இல்லை.

    இந்து சமயமோ, அச்சமயத்திலிருந்து பிரிந்த மற்ற சமயங்களோ, தாங்கள் பரவும்போது பரவும் நாட்டின் கலாச்சாரத்தையோ, அவர்கள் அடையாளத்தையோ அழிக்க முயலவில்லை.

    இந்து சமயம் மட்டற்ற சமயங்களை எதிரியாகப் பார்க்காத தன்மை உடையதால்தான் — அந்த கலாச்சாரம் இந்தியக் கிறித்தவர்கள், முகமதியர்களிடம் இருப்பதால்தான் — அது ஒரேயடியாக அழிந்துபோகாததால்தான் –தாங்கள் சொல்லும் இந்துக் கலாசாரம் (இந்தியக் கலாசாரம் என்று அழைக்கபடுகிற கலாசாரம்) அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

    இங்கு அமெரிக்காவில் சமயங்களைப்பற்றிக் கட்டுரை எழுதிய ஒருவர் (அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) “Chiristianity and Isalam are the most distruptive religions in the world; they want to destroy other cultures/religions and wipe them out.) என்று எழுதினார். அவருடைய அந்தக் குறிப்பில் யூதசமயம் இடம்பெறவில்லை.

    இலட்சக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும்போது எழாத கேள்விகள், திருவள்ளுவரையும், சிவபெருமானையும், சைவ சமயகுரவர்கள் நால்வரையும் கிறித்தவர்கள் என்று கட்டுரைகள் எழுதி வெளிவரும்போது எழாத மறுப்புகள், இந்தச் சிறிய கட்டுரைக்கு எழவேண்டிய அவசியம்தான் என்ன?

    போப் ஆண்டவரே புனித தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை, அவர் சென்னையை அடுத்த புனித தாமஸ் மலையில் இயற்கை எய்தவில்லை என்னும்போது, அப்படி ஒரு உண்மையற்ற செய்தியை பல நூறு ஆண்டுகளாகப் பரப்பிவரும்போது — இந்தக் கட்டுரையில் அப்படி என்ன குற்றம் இருக்கிறது?

    ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் நூற்றுக்கணக்கான இந்துக்கள் பீகாரில் கிறித்தவர்களாக சமயமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. அதைப்பற்றி எந்தவித எதிர்ப்பும் வரவில்லையே, அது ஏன்?

    ஊருக்கு இளைத்த ஆண்டி, இந்து சமயத்தானா?

  7. Avatar
    BS says:

    //தாங்கள் “கலாசார மாற்றம்” என்ற ஒரு சொற்றொடரைப் பிடித்துத் தொங்குவதாக எனக்குப்படுகிறது.//

    கலாச்சார மாற்றம் என்ற ஒரு சொற்றொடரைப்பிடித்துக்கொண்டு இக்கட்டுரைத் தொங்குவதாகச் சொல்வதே என் வாதம். மாற்ற முயல வேண்டாம்.

  8. Avatar
    BS says:

    ஓர் அரிசோனன் ! (தமிழ் இலக்கணப்படி, ஓரு அரிசோனன் என்பது இலக்கணப்பிழை. ஓர் அரிசோனன் என்பதே சரி. வருமொழியில் உயிரெழுத்து முதலெழுத்தாக இருந்தால், ஓர் என்றே வரும். எ.கா: ஓர் இசுலாமியர்; ஒரு கிருத்துவர். ஓர் இந்து)

    கொஞ்சம் தேவலை ரகம் என்று நினைத்திருந்த எனக்கு ஓர் அரிசோனனும் அவ்வாறே என்று நினைக்கும்படி பின்னூட்டம் போட்டுவிட்டார். அமெரிக்காவில் அறிஞர் ஒருவர் என்ன எழுதினார்? செமிட்டிக் மதங்களுக்கும் இன்டிக் மதங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது இங்கே யார் கேட்டார்கள்? கட்டுரையை எவரும் தாக்கவில்லை. கட்டுரை முழுவதும் வீடு திரும்புதல் கலாச்சார மாற்றத்துக்கே என்று மஞ்சுளா நவநீதன் சொல்கிறார். அப்படியென்றால்,

    1. ஓர் இசுலாமியர் வீடு திரும்புதலுக்குப் பின் அல்லாவை வணங்கலாமா, மசூதிக்குப் போகலாமா? குரான் ஓதலாமா?

    2. ஒரு கிருத்துவர் இயேசுவை, மரியாளை, யோசேப்புவை வணங்கலாமா? பொரட்டஸ்டெண்ட் (சி எஸ் ஐ), சிலுவை முன் மண்டியிட்டுத்தொழலாமா?

    சீக்கியர், ஜயினர், பவுத்தர்கள் தமிழகத்தில் இல்லை. எனவே அவர்களைப்பற்றி நான் கேட்கவில்லை.

    (பீஹாரில் பத்துநாட்களுக்கு முன் 1700 பேர் இந்துமதத்தை விட்டுவிலகினார்கள். ஆனால் நீங்கள் அவர்கள் இந்துக்கள்; கிருத்து மதத்துக்கு மாற்றப்பட்டார்கள் என்றும் மிசுநோரிகளே அதைச்செய்தவர்கள் என்றும் செய்தித்தாள்களைச் சரியாகப் படிக்காமல் பொய்களை அடுக்கியிருக்கிறீர்கள். பீஹாரில் கிட்டத்தட்ட 4 கிராமங்களிலிருந்து ஒன்று கூடி பவுத்த மதத்தைத் தழுவினார்கள். (http://www.firstpost.com/india/bihar-around-1700-hindus-convert-buddhism-2030339.html) 15,000 க்கும் மேல் குல்பர்காவில் (கருநாடகாவில்) இந்துமதத்திலிருந்து விலகி பவுத்த மதத்தில் சேர்ந்தார்கள். அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிவர்களுள் ஒருவர் கர்கே (பாராளுமன்ற காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர். (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/15000-people-convert-to-buddhism-in-gulbarga/article3061193.ece) ஒரு லட்சத்துக்கும் மேலாக தலித்துகள் மஹாராட்டியத்தில் இந்துமதத்திலிருந்து விலகி பவுத்தத்தில் சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தமதத்தில் சேர்ந்தபிறகு சிவன், விஷ்ணு, சரசுவதி, இலட்சுமி என்று இத் தெய்வங்களை அவர்கள் வணங்கவில்லை. புத்தரை மட்டுமே வணங்குகின்றனர். அக்னி சாட்சியாக எல்லாவற்றையும் ஹோமம் வளர்த்துச்செய்வார்கள். அப்படியா? உங்களைப்பொறுத்தவரை, இந்துமதம் என்றால் பிராமணீயமே. வீடு திரும்புதல் நிகழ்ச்சியில் ஹோமம் வளர்ப்பது மட்டுமே செய்யப்படுகிறது. )

    வீடு திரும்புதலை வரவேற்போம் என அழைக்கும் இவர், ஏன் அது மதமாற்றமா, இல்லை கலாச்சார மாற்றம் மட்டுமா என்று விளக்கவில்லை. புத்தமதத்துக்கு எல்லா தலித்துகளும் மாறிவிட்டால் ஏற்பாரா?

    It is not religion but politics. You lack courage to admit that! If I am wrong, explain why I am wrong.

  9. Avatar
    BS says:

    @நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தமதத்தில் சேர்ந்தபிறகு சிவன், விஷ்ணு, சரசுவதி, இலட்சுமி என்று இத் தெய்வங்களை அவர்கள் வணங்கவில்லை. புத்தரை மட்டுமே வணங்குகின்றனர்.

    — நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தத்தில் சேர்ந்த பிறகும் சிவன், விஷ்ணு, சரஸ்வதி, இலட்சுமி, போன்ற இந்துத் தெய்வங்களை அவர்கள் வணங்குகிறார்கள். புத்தரை மட்டுமன்று. உண்மையா?

    என்று திருத்தி வாசிக்கவும்.

  10. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //(தமிழ் இலக்கணப்படி, ஓரு அரிசோனன் என்பது இலக்கணப்பிழை. ஓர் அரிசோனன் என்பதே சரி. வருமொழியில் உயிரெழுத்து முதலெழுத்தாக இருந்தால், ஓர் என்றே வரும்//

    ஒப்புக்கொள்கிறேன். ஒரு அரிசோனன் என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லுக்கு இலக்கணம் பார்ப்பதில்லை. ஒரு ஏழைப் பையன் என்பார்கள். இலக்கணப்படி ஓர் ஏழைப் பையன் என்று எழுதவேண்டும் என்று குறிப்பிடலாம். பெயர்தானே! விட்டுவிடுங்கள். நான் ஒரு அரிசோனனாக இருந்துவிட்டுப்போகிறேனே!

    //இன்டிக் மதங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது இங்கே யார் கேட்டார்கள்? //

    இழைக்குத் தொடர்பு உள்ள செய்திதான் நான் பகிர்ந்துகொண்டது. கேட்டு எழுதவில்லை.
    உங்களுக்குத் எழுதத் தோன்றுவதை நீங்கள் எழுதுகிறீர்கள். எனக்கு எழுதத் தோன்றியதை நான் எழுதினேன்.

    1. Avatar
      BS says:

      அவரவருக்குத் தோன்றியதை எழுதுவது தடுக்கப்படவில்லை. ஆனால் விவாதத்தின் கேள்விகள் வைக்கப்பட்டால் எதிர்கருத்துகொண்டோர் பதிலகள் போட்டால் இறுதியில் தெளிவு பிறக்கும். என் கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்லுங்கள். மேலும் பேசலாம்.

  11. Avatar
    meenal says:

    கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று.
    இந்து மற்ற மதங்களைத்க் தழுவது நீண்ட காலமாக நடைமுறையிலுள்ளதுதான் எனக்கு விரவம் தெரிந்த காலக் கட்டத்தில் இந்துகள் கிறிஸ்துவ அமைப்புகளால் மதம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி மாறிய இந்துகள் வாழ்வுக்குத்அடி தேவையான அடிப்படை வசதி இல்லாதவர்களே ஆவர் இதுதான் அவர்கள் மதம் மாறக்காரணமாக இருந்தது ஆனால் இந்து மதத்தவர்களுக்கு மறற்வர்களைப் பற்றிய போதுநோக்குச்சிந்தனையில்லை. யாரோ எபப்டியோ வாழட்டும் என்ற மெத்தனப் போக்குடன் வாழ்ந்தனர். ஏழைமற்றவர்க இந்துகளுக்க உதவி கரம் நீட்டவுமில்லை. இந்த நிலை மற்ற சமயத்தினருக்கு வாய்ப்பாய் அமைந்துவிட்டது. ஏழைகளுக்கு கல்விநிந உதவி மருத்துவ உதவி போன்றவற்றைக் கொடுத்து மதம் மாற்றினர்.

  12. Avatar
    paandiyan says:

    //வீடு திரும்புதலை வரவேற்போம் என அழைக்கும் இவர், ஏன் அது மதமாற்றமா, இல்லை கலாச்சார மாற்றம் மட்டுமா என்று விளக்கவில்லை. புத்தமதத்துக்கு எல்லா தலித்துகளும் மாறிவிட்டால் ஏற்பாரா?

    It is not religion but politics. You lack courage to admit that! If I am wrong, explain why I am wrong.
    //
    I don’t understand why you are explaining in tamil and also bottom of text in English? any reason behind this?

  13. Avatar
    BS says:

    இப்போது பொதுவாக எழுதுகிறேன். மீனாளின் ‘நச்சுக்கருத்துகள்’என்ற சொற்றொடரும், ராமா என்பவரின் நாங்கள் இந்து, நீங்கள் யார் கேட்பதற்கு என்ற தீவிரவாதப்பேச்சும் இப்பொது மடலுக்கு உடனடி காரணிகள்.

    திண்ணையில் மதம் ஜாதி சம்பந்தமாக கட்டுரைகள் போடப்படுகின்றன. கட்டுரையாளர்கள் பலர் உள்ளோக்கத்துடன் போடுகிறார்கள் என்பதும் அச்செய்தியினறிவைப்பரப்புரை செய்து அதனைப்பற்றிய அறியாமை போக்க விழையும் நோக்கத்துடனும் பலர் எழுதுகிறார்கள் என்பதும் தெரிந்ததே. எவர் எப்படி எழுதினாலும், வாசகரைப்பொறுத்தவரை அஃது ஒரு கட்டுரை, கட்டுரையாளர் எதற்காக எழுதுகிறார் என்று ஆராய்ச்சி அவருக்கு இல்லை.

    வாசகர்கள் அக்கட்டுரையை அடியொட்டி விவாதங்கள் செய்வதற்கே பின்னூட்டக்களம். விவாதத்தின் நோக்கம் எங்கள் கருத்தே சரி என்று இருசாராரும் முழங்குவதற்கன்று. அது ஈகோக்கள் உரசிக்கொள்ளும் அசிங்கமான சாக்கடை. அது நமக்குத் தேவையில்லை. அதற்கென்று தளங்கள் இருக்கின்றன.

    எனவே எக்கருத்தும் நச்சுக்கருத்து இங்கில்லை. எக்கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் பதில் சொல்ல வேண்டும். விவாதங்களில் இறுதி வெற்றி ஒரு தெளிவான முடிவு. நாமெல்லாரும் இக்கட்சி, அக்கட்சி என்ற நிலைகளில் இருந்து குரங்குத்தனமாக, மூர்க்கத்தனமாக நிற்பதைத் தவிர்த்தால் நன்று. நின்றால், இக்கட்டுரைகள் ஏன் நான் திண்ணையில் போய்ப்படிக்கவேண்டும். மதவெறியாளர்களும் தீவிரவாதிகளும் நடாத்தும் தளங்களில் போய்ப்படித்துக்கொள்ளாலாமே?

    எனவே வீடு திரும்புதல் என்ற கட்டுரை எதற்காக, எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

    ஏழைகள்தான் வீடு திரும்புதலின் இலக்குகள் என்று மீனாள் சொல்வது சாலப்பொருத்தம். அந்த ஏழைகளை எப்படி வீடு திரும்புதல் பண்ணுகிறார்கள்? ஏன் ஏழைகள் வருகிறார்கள்; போகிறார்கள் என்ற நமக்கெல்லாம் தெரிந்ததைச்சொல்கிறார் மீனாள். We are all living in TN. We know Caldwell, G U Pope and other missionaries and also, current heros Lazers and others. Should Meenal tell us these? W/o possessing elementary knowledge Tamil religious history, please don’t come here to discss. And, don’t dare to imagine the readers don’t posses such elementary knowledge. I am not opposing anything. I am just exposing.

    எவரெல்லாம், ஏன், எப்படி, பண்ணுகிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும்.

    வீடுதிரும்புதல் ரொட்டித்துண்டுகளுக்காக என்கிறார் மீனாள். தெரிந்ததே. மிசுநோரிகள் இங்கு விவாதம் பண்ணவரவில்லை. நாந்தான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்குச் சொல்லவேண்டாம்.

    அன்று மிசுநோரிகள். இன்று இந்துத்வாதிகள். இருவரும் செயவது ஒன்றே. (மீனாள் சொன்னது இது) ஆக, வீடு திரும்புதல் ரொட்டித்துண்டுகளுக்கு என்றால் மத மாற்றமே அங்கில்லை. அப்படி வீடுதிரும்பும் இசுலாமியர், கிருத்துவர் தங்கள்தங்கள் மதங்களை மாற்றிக்கொள்ளவில்லையென்றுதானே வருகிறது? அப்படியென்றால், வீடு திரும்பியபின்னரும் அவர்கள் தங்கள்தங்கள் மதங்களை, மத வழிபாட்டு முறைகளை தொடரலாமா? இந்துமதக்கடவுளர்களை, இந்து வழிபாட்டு முறைகளை ஏற்காமல் விடலாமா?

    பாண்டியன், மீனாள், மஞ்சுளா நவநீதன், க்ருஷ்ணகுமார், ஓர் அரிசோனன், ராமா – இவர்களுள் ஒருவராவது எனக்குப் பதில் சொல்லாமே? I shall drag thid debate to a consensus opintion. It is possible.:-)

  14. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    “வீடு நோக்கி ஓடி வந்த உன்னையே…”
    =========================================ருத்ரா

    நாடி நிற்கட்டும் அனேக நன்மைகள் !
    கூரையில்லாத் வீட்டிலிருந்து
    சுவர்களே இல்லாத வீட்டுக்கு வந்திருக்கலாம்.
    அடுப்பே இல்லாத வீட்டிலிந்ருது
    அரிசி இல்லாத வீட்டிற்கு வந்திருக்கலாம்.
    எதைக்கண்டு அச்சமுற்று ஓடினீர்களோ
    அதே அச்சம்
    அதோ அந்த அறையில் ஒளிந்திருக்கலாம்.
    எப்படி வேண்டுமானாலும் சரி….
    உங்கள் உயிர்ப்பறவையின்
    பஞ்சுச்சிறகுக்குள்
    எந்த துடிப்புகள் இருந்தாலும் சரி..
    மீண்டும் உங்களுக்கு என்ன வர்ணம் அடிக்கலாம்
    என்று
    இந்த “மட்டைகள்”
    எந்த சாயத்தை முக்கிக்கொண்டு வந்தாலும் சரி…
    இப்போதைக்கு
    இந்த சப்பளாக்கடையைப்பிடி
    சாப்பாடு பின்னே வரும் என்று
    தாளங்கள் போட்டுக்கொண்டிருந்தாலும் சரி…
    உன் கைகளை
    உன் கால்களை
    உன் அறிவை
    அதன் தீர்ப்பை
    தீர்க்கமான கண்களை
    மீண்டும் உற்றுப்பார்த்துக்கொள்.
    கண்ணை விற்றுக்கூட சித்திரம் வாங்கியிருக்கலாம்.
    விற்றிருந்தால் கூட ஏதோ
    ஒரு விலை கிடைத்திருக்கலாம்.
    பிடுங்கப்பட்டிருந்தால்…
    உன் பிரதி எங்கே?
    உன் பிம்பம் எங்கே?
    தடவிக்கொண்டிரு
    விரல்களில் முத்திரையிட்டு
    விலை தரலாம்…
    வேண்டுமென்றால் கேள்.
    இல்லையென்றால்
    காதுகளில் பஞ்சை அடைத்துக்கொள்.
    “பாரத மாதா கி ஜெய்”
    இந்திய அன்னை உன்
    இதயத்தில் இருக்கும் போது
    அவள் தரும் நம்பிக்கையை
    சம்மட்டி ஆக்கிக்கொள்..
    இந்த இருட்டுகள்
    தவிடு பொடியாகட்டும்!

    ================================================

  15. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //ஓர் அரிசோனன்//

    நான் ஒரு அரிசோனன் என்று அழைக்கபடுவதையே விரும்புகிறேன். “ஓர் அரிசோனன்” என்றால் அரிசோனாவில் இருக்கும் எவனோ ஒருவன் என்று பொருள். “ஒரு அரிசோனன்” என்பது அரிசோனாவில் இருக்கும் ஒருவன் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள சூட்டிக்கொண்ட பெயர். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. திரு(வாரூர்) வி.க. என்றமாதிரித்தான் ஒரு அரிசோனனும்.

  16. Avatar
    smitha says:

    Ghar Wapsi should be encouraged. It is high time people who converted realized its futility & returned to their home religion.

  17. Avatar
    BS says:

    கர் வாபசி என்பது இந்தி. வீடு திரும்புதல் என்பதே தமிழ்.

    வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற என் கேள்விக்கு இன்னும் பதிலில்லை! அதாவது அது வெறும் கலாச்சாரமாற்றமா அன்றி, மதமாற்றமா?

    இந்த வீடு திரும்புதல் நிகழ்ச்சியை எல்லாரும் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். சிமிதா சொல்லலாம். வீடு திரும்புதல் என்றால், கலாச்சார மாற்றமா இல்லையா? மதமாற்றமில்லையென்றால், ஏன் ஹோமம் வளர்த்து அந்நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். சாமியார்களும் வருகிறார்கள்? வேதமந்திரங்கள் ஓதுகிறார்கள்.

    சும்மா ஒரு மாட்டுவண்டியோ, மோட்டார் வண்டியையோ கொண்டு வந்து இதில் ஏறிக்கொள்ளுங்கள் வீட்டிற்குப்போகலாமென்றால், மதமாற்றமில்லை அல்லவா?

    இந்துமதம் தாய்வீடு என்பது எதைக்குறிக்கிறது? மதத்தைக் குறிக்கவில்லையா? வெறும் கலாச்சாரத்தை மட்டுமே குறிக்கிறதா?

    வெறும் கலாச்சாரம் என்றால், கிருத்துவர் வீடுதிரும்பி அவர்கள் கிருத்துவ சாமிகளை மட்டுமே வழிபட்டு வாழலாமா? சர்சுக்குப் போகலாமா?

    இசுலாமியர் வீடு திரும்புதலுக்குப்பின் அல்லாவையே தொழலாமா? மசூதிக்குப்போகலாமா? ஆண்டிற்கொருமுறை மெக்காவுக்குப் போகலாமா?

    சுமிதா, வாருங்கள்; சொல்லுங்கள். உங்கள் பதில்கள் இது மதமாற்றமா அல்ல வெறும் கலாச்சார மாற்றமா என்று தெளிவுபடுத்தட்டும். பின்னர் விவாதிக்கலாமே!

  18. Avatar
    mahakavi says:

    I would characterize the Ghar vApasi movement as “returning to your ancestral roots”. It will include regaining of lost cultural heritage as well as religious features. Personally I don’t care who does what. But the people who are behind this movement perhaps express their anguish of the forced conversions of Hindus of yore into other religions and hence would like a partial remedy. I guess it is next to impossible to convert all the Muslims and Christians back to Hinduism even if the government spent a fortune on this effort.

    Those who favor reversion are only interested in reconverting the recent converts. I don’t think there is any politics involved here. The voting bloc will not change one iota by this measure. It is just a pent-up frustration that is finding an expression here. To clarify on the “religious” aspect of the re-conversion I’d agree that those behind the movement favor a total conversion—both religious and cultural. If you say to a Christian/Muslim to “reconvert but go to your church/mosque”, that is self-defeating. The Christian missionaries did not tell the converts to go to their favorite Hindu temples after converting to Christianity.

    So, to conclude, the re-conversion process involves both components–religious and cultural.

    Ultimately it is all revolving around material comfort. The spiritual part is secondary. When the primary factor is established the secondary factor is amenable.

  19. Avatar
    ரமேஷ் says:

    ஐயா வணக்கம் தாய் மதம் திரும்புவதற்கு தமிழ்நாட்டில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் தொலைபேசி எண் இருந்தால் கொடுத்து உதவ வும் நான் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவன் நன்றி…

  20. Avatar
    BS says:

    ரமேஷ்

    இட ஒதுக்கீடு பெற முறையாக மதம் மாறவேண்டும். அதாவது பதிய வேண்டும். கோட்டயத்தில் நடாத்தியவர்களால் நிகழ்ச்சிக்கப் புறம் அரசேட்டில் பதிய வைத்து உதவ அத்தலித்துக்களுக்கு அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீடு பெற சான்றிதழ்களும் தரப்பட்டன. முன்னர் நடாத்தியவர்கள் அதைச் செய்யவில்லையென்பதால் தலித்துக்கள் மீண்டும் மதம் மாறுதலைச்செய்தனர். இப்படி உங்களை இந்து என அரசேட்டில் பதிவுசெய்து இட ஒதுக்கீடு பெற முடியும்படி யார் செய்கின்றார்களோ அவர்களையே நீங்கள் அணுகவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பிரயோஜனமில்லை. கண்டவர்கள் வாக்குறுதிகளைக்கேட்டு ஏமாற வேண்டாம். இட ஒதுக்கீடு அம்போ.

    நானறிந்தவரையில் தலித்துக்கள் இவ்வீடு திரும்புதல் நிகழ்ச்சி பிரபலமாகும் முன்பேயே இந்துக்களாகி இட ஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். அது சுலபம். தமிழகத்தில் பெருங்கோயில்களுக்கு இவ்வதிகாரம் தரப்பட்டிருக்கிறது. பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி, நெல்லையப்பர், கபாலீசுவரர் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி – இப்படிப்பட்ட அரசு பெருங்கோயில்கள் அவை.

    அங்கு நீங்கள் சென்று இந்துவாக விரும்புகிறேன் என்று சொன்னால், உங்கள் பெயரைப் பதிவு செய்து ஒரு பூஜை நடாத்தியபின் ஒரு சான்றிதழைக்கொடுப்பார்கள். ஃபீஸ் உண்டு. திருமணம் கோயில்களில் நடாத்துவதும் இப்படியே. ஒரு காலத்தில் கோயிலில் நடைபெறும் மணங்கள் பதிவு செய்யப்படமாட்டா. இன்று கட்டாயம்.

    பெற்றச் சான்றிதழைக்கொண்டு போய், தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்து, இந்து தலித்து என்று சான்றிதழ் பெற்றுக்கொள்க. பின்னர் அச்சான்றிதழ நகலை வேலை தேடித்தரும் அலுவலகத்தில் கொடுத்து அங்குள்ள உங்கள் தொடர்பான ஆவணங்களில் இந்து தலித்து எனப்பதியச்செய்யச்சொல்லவும். வீடு திரும்புதல் நிகழ்ச்சி யாராவது நடாத்துவார்கள் எனக்காத்திராமல். விரையுங்கள் திருவாரூரில் உள்ள பெரிய அரசுக்கோயிலுக்கு. கோயிலில் சென்று மாறுவதுதான் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை சேமம்.

    சான்றிதழ்தான் முக்கியம். பெற்ற பின் நீங்கள் என்ன சாமி கும்பிடுகிறீர்கள் என்று அரசு ஆளையனுப்பிச் சோதிக்காது. இந்துவாகிய தலித்துக்கள் இன்னும் கிருத்துவசாமிகளைத்தான் கும்பிடுகிறார்கள். எந்த சாமியைக் கும்பிடலாம். கும்பிடாமலும் இருக்கலாம். எனவேதான் என் கேள்வி இங்கு போடப்பட்டது.

    உங்கள் பேரே இந்து. பின் எந்த மதத்திலிருந்து மாறப் போகிறீர்கள்?

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ உங்கள் பேரே இந்து. பின் எந்த மதத்திலிருந்து மாறப் போகிறீர்கள்? \\

    ஏன் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஹிந்துவாக இருக்கலாம். ரமேஷ் க்றைஸ்தவராக இருக்கக்கூடாதோ.

    பேஷ் பேஷ்.

  22. Avatar
    BS says:

    இதிலும் ஓருண்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள் இந்துப் பெயர்களையே வைத்துக் கொள்வது வழக்கம். மற்ற மாநிலங்களில் ஜாதிப்பெயர்களை கிருத்துவப்பெயர்களோடு வைத்துக்கொள்வார்கள். மணிப்பூரில் கிருத்துவப் பெயர்களில்லாமல், ஆதிவாசி (ட்ரைபல்) பெயர்களையே வைத்துக்கொள்வார்கள். மற்ற வடகிழக்கு மாநிலங்களில் ட்ரபைல் பெயரோடு கிருத்துவபெயர் வரும். எ.கா. நாகலாந்து.

    ரமேஷ் கிருத்துவரா இல்லையா என்பதை அவர்தான் சொல்லவேண்டும். எப்படி கிருஸ்ணகுமார் கண்டிபிடிக்கிறார் ?

    நான் படித்த கல்லூரியில் என் கூட கால்பந்து விளையாடிவர்கள் கத்தோலிக்க மதத்து இளைஞர்கள். அனைவரும் மீனவ குடும்பத்தினர். கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா போனவாரம் நடந்ததல்லவா? அதைப்போல ஒரு கத்தோலிக்க சர்ச் ஒரு தீவில் இருக்கிறது எங்களூர்ப்பக்கம். என் இறுதியாண்டில் அத்தீவில் சர்ச் திருவிழாவுக்கு சென்ற கத்தோலிக்க இளைஞர்கள் ஓவர்லோடால் வல்லம் கடலில் மூழ்கி 24 பேர் மரணித்தார்கள். அதில் என் கல்லூரித்தோழர்கள் இருவர். ஒருவன் பெயர்தான் க்ருஷ்ணகுமார் அடிக்கடிச் சொல்லியுருகும் பெயர். அவருக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். அவன் நன்கு நீச்சல் தெரிந்தவன். பிறரை கரைசேர்க்கும்போது மூழ்கி இறந்தான். அவனை அடிக்கடி நினைவு படுத்துவதற்காக. நான் விளையாடிய கால்பந்து கல்லூரி அணியில் இவனே கேப்டன். தமிழக‌ப் பலகலைக்கழகங்கள் கல்லூரி கால்பந்து விளையாட்டுப்போட்டியில் வின்னர் நாங்கள். கல்லூரி காலபந்து விளையாட்டிற்கு பேர்போனது நான் படித்த வருடங்களில். இந்திய அணியிலும் இடம்பெற்றவன். என்னோடு கல்லூரி விட்ட மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் கிரவுண்டில் என்னோடு எப்போதுமே இருந்தவன். இப்படியாக கத்தோலிக்கர்கள் நன்கு பரிச்சயம்.

    இதைப்போலவே நான் மேனிலை வகுப்பு வரை படித்த சிற்றூரில் (உடங்குடி) இசுலாமியர் 50 விழுக்காட்டிற்கும் மேலே. என் இசுலாமிய நண்பர்கள் ஏராளம். அவர்கள் வாழ்க்கையில் பல சோகங்கள். என் பள்ளியில் எனக்கு பல வகுப்புகள் மேலே படித்த எம்.ஹைச். ஜலால் ஐ ஏ எஸ். திருச்சி கலெக்டராக இருக்கும்போதே மாரடைப்பில் மரணித்தார். அப்பள்ளி கால்டுவெல்லால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. ஆனால் ஜலால் நினைவாக அவர்கள் பல செய்தார்கள். எம்.ஜி.ஆராலும் மத்திய அரசாலும் பலபட பாரட்டப்பட்ட கலெகடர் ஜலால் எனபது திருச்சி மாவட்டக்காரகளுக்குத் தெரியும். எனக்குத் தமிழில் மீது ஆர்வத்தை ஊட்டியவர் ஜலால். அவரைவிட பல‌ வயது சிறியவனானதால் அவரோடு ஒட்டிக்கொண்ட பல சிறுவர்களில் நானும் ஒருவன். என் தமிழ்க்கட்டுரைகள் பலவற்றைத் திருத்திச் செம்மைப்படுத்தி ஆர்வமூட்டியவர். ஜலாலின் அகால மரணம் என்னை மட்டுமன்றி, தமிழக ஐ ஏ எஸ் கம்யூனிட்டியை மட்டுமன்றி, உடங்குடி ஊரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. ஜாதி, இன, மத பேதமில்லாமல் மக்கள் அழுதார்கள். மு உ ஜலாலில் பெயரை நான் வைத்து எழுதிவிட்டேனென்றால், கிருண்ஷ்குமார் என்னை விட்டுவிடுவாரா? பிறமதமென்றால், பேர் என்றாலும்கூட போட்டுத் தாக்கத்தானே வேண்டும்? அதுதானே நம் வள்ளல்பெருமாள் நமக்கிட்ட கட்டளை?

    வாழ்க்கை சின்னச்சின்ன நினைவுகளால் கட்டப்பட்டது. பல நினைவுகள் நம்மைவிட்டு விலகிவிடாமல் நாம் காக்க ஆசைப்படுகிறோம். இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *