மழையின்
நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.
மழை
வலுத்தாலும்
வலுக்கலாம்.
பிசு பிசுத்தாலும்
பிசு பிசுக்கலாம்.
அது
அதன் இஷ்டம்.
வலுத்தாலும்
வலுக்கட்டாயமில்லை.
நீ
நனையலாம்.
நனையாமலும் இருக்கலாம்.
உனக்கென்ன
கவலை?
உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும்.
இல்லையானால்
ஒதுங்க ஒரு கூரையிருக்கும்.
ஒரு
மரத்தடியாவது இருக்கும்.
ஓடிப் போக முடியாமல்
ஒற்றைக் காலில் மரம் தான் நனையும்.
மழை மேல் மழை வீழ்ந்து
மழை நனையும்.
ஒரு சொட்டுமில்லாமல் ஓயும் வரை ஒரு பற்றுமில்லாமல்
சித்தம் போக்கில் பெய்யும்.
மழையின் சித்தம் முதலிலிருந்து கடைசி வரை நனையும்
மரத்திற்கே தெரியும்.
கு.அழகர்சாமி
- என்னவைத்தோம்
- மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்
- காணாமல் போகும் கிணறுகள்
- வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்
- ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !
- சிறு ஆசுவாசம்
- சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு
- வேற என்ன செய்யட்டும்
- பொன்பாக்கள்
- வர்ணத்தின் நிறம்
- சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்
- காணவில்லை
- தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.
- அவள் பெயர் பாத்திமா
- மழையின் சித்தம்
- இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்
- கயல் – திரைப்பட விமர்சனம்