ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !

This entry is part 25 of 28 in the series 12 ஏப்ரல் 2015

 

[Question & Answer]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

நீ தேடும் நேசம் முன்னூ கிக்கும்

வேனில் வெப்பம்; பரிதி வெளிச்சம்;

நீயே சொல் !

பனிக்குளிரில் மொட்ட விழ்ந்து பூக்கும்

ஈர மண் ரோஜா மலர்களைப்  

பார்க்கி றாயா ?

அழிக்கப் படும் ரோஜா மர வேர்கள்

பனிக் காலத்தில் !

அகற்றி விடு அதை உடனே

பாதத் திலிருந்து,

அல்லா விடில் பாதகம் செய்யும் !

 

பச்சைப் படர்க்கொடி இலைமேல்

கரும் புள்ளி குத்தி

சாம்பலாய்ப் போன அழிவுக் குள்ளே

கல்லுக்குப் பின் கல்லைத்,

தேடுவது நீ ஆப்பிளா அல்லது

திராட்சையா ?

அல்லது

வாடிப் போன வெறும் பச்சை

இலைகள் மட்டுமா ?

பறித்துக் கொள் ஒன்றிரண்டு

இலைகள் மட்டும்

நெறி விதிக்காக,

நீ உறுதியுடன் பாது காப்பாய்  

நீங்கும் போது !

 

++++++++++++++++++++++

Series Navigationஒரு பழங்கதைஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *