Posted inகவிதைகள்
பயணங்கள் முடிவதில்லை
மனிதர்களுக்கென்ன ரயிலேறிப் போய்விடுகிறார்கள் கசிந்த கண்ணீருக்கும் குலுக்கிய கைகளுக்கும் மென்தழுவலுக்கும் மௌன சாட்சியாய்க் கிடக்கும் நடைமேடையையும் உயரத் தூண்களையும் கழிப்பறை வாடை கருதாமல் பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி நிற்கும் பெயர் தெரியா இம்மரத்தையும் என்ன செய்வது..... -உமாமோகன்