இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

author
4
0 minutes, 7 seconds Read
This entry is part 5 of 26 in the series 10 மே 2015

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை
Vol 2 Issue 31

வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன.

சிங்களமும், சிங்களமயமாக்கலும் இன்று வட இலங்கையின் தமிழ் பகுதிகளில் முக்கிய வார்த்தைகளாக ஆகியிருக்கின்றன. வவுனியா தொடங்கி, தமிழ் பகுதிகளுக்குள் நுழையும்போதே இது முகத்தில் அறைவது போல காணக்கிடக்கிறது.
aug5-11-lanka Kanagarayankulam Buddhist stupa

கனகராயன்குளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள புத்த ஸ்தூபம்.

வடக்குக்குச் செல்ல நுழையும் ஒவ்வொருவரும் ஓமந்துரையை கடந்துதான் செல்லவேண்டும். இப்போது அந்த இடத்துக்கு சிங்கள பாணியில் ஓமந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது A9 தேசிய சாலையில் ஒரு முக்கிய சாவடி. இந்த இடத்தில் கடந்து செல்லும் பயணிகளில் 90 சதவீதத்தினர் தமிழ் பேசுபவர்களே. ஆனால், யாராவது சிங்களம் தெரிந்த ஒருவரோடு சென்று சிங்கள ராணுவ வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், சிங்கள வெற்றிகுரலை உணர முடிகிறது.

தமிழ் பகுதிகளில் ராணுவ முகாம்களும், சிங்கள ராணுவ வீரர்களும் எங்கும் காணக்கிடைக்கிறார்கள். 65619 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 18.880 சதுர கிலோமீட்டரில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மே 2009க்கு பிறகு ராணுவம் இந்த தமிழ் பிரதேசங்களில் சுமார் 7000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது.

சுமார் 2500 இந்து கோவில்களும் சுமார் 400 சர்ச்சுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிங்கள ராணுவம் இந்த கோவில்களை கட்ட அனுமதி தருவதில்லை. ஆகையால் பெரும்பாலானவை சிதிலமடைந்து கிடக்கின்றன.

இதன் மறுபுறத்தில், இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கும் சிங்களர்கள் சிங்கள ராணுவ வீரர்களே என்றாலும், சுமார் 2500 புத்த ஸ்தூபங்களும், சிலைகளும் தமிழர்கள் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
???????????????????????????????

முந்தைய தமிழ் போராளிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியில் இருக்கும் பெரிய புத்தர் சிலை.

மன்னார் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கேத்தீஸ்வரம் கோவிலுக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் மஹாதோதா ராஜ மஹா விஹாரா என்ற புத்த விஹாரம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்கேத்தீஸ்வரத்தின் பழைய பெயர் மஹாதோட்டம்.

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் (சிங்களத்தில் உதுரு வசந்தயா) தமிழ் பகுதிகளில் அரசாங்கம் வளர்ச்சி திட்டங்களை செய்வதாக பெரும் விளம்பரம் செய்யப்படுகிறது.

உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் துப்புரவு, விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் வளர்ச்சி திட்டம், உள்நாட்டு மீன் வளர்ப்பு, சுகாதாரம், திடக் கழிவு அகற்றுதல், கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன என்று அரசாங்கம் கூறுகிறது.

இருப்பினும், இந்த திட்டங்களின் உண்மையான பயனாளர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. வேலையில்லா சிங்கள இளைஞர்களே இந்த திட்டங்களின் கீழ் சிங்கள ஒப்பந்தக்காரர்களால் வேலை தரப்படுகிறார்கள்.

எளிதாக ராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்காக சாலை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் பணம் பெரும்பாலும் பாதுகாப்புப் படைகளுக்குத்தான் செல்கிறது ஏனெனில், அவர்கள் இதனை எளிதாக ராணுவ வீரர்களை இடப்பெயர்வு செய்வதற்கு என்று எடுத்துகொள்கிறார்கள்
aug5-11-lanka signboard in sinhalaPuthukudiirrupu - oddusudan road indicating

புதுக்குடியிருப்பு பகுதியில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் பலகை

போர்க்காலத்தில் தமிழ் பகுதிகளிலிருந்து சென்ற சிங்களர்கள் திரும்பி வருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட வீட்டு வசதி திட்டம் செட்டிக்குளம் பகுதியில் உள்ளது. இங்கிருந்து சென்ற அந்த 13 குடும்பங்கள் திரும்பி வந்தால், வரவேற்கலாம். ஆனால், இங்கே புதிய 75 சிங்கள குடும்பங்கள் வந்திருக்கின்றன.

ஏற்கெனவே 165 சிங்கள குடும்பங்கள் கொக்கச்சாங்குளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது அதன் பெயர் கலபோவாஸேவா.

மது ரோடு அருகே சிங்கள மீடியம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகே இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன.

அங்கே இருக்கும் தமிழ் மக்களின் செய்திகள்படி பார்த்தால், தெற்கிலிருந்து வரும் சிங்களர்கள் ராணுவத்தின் அனுமதியுடன் தமிழர்கள் பகுதியில் உள்ள காட்டுவளத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள பௌத்த அகழ்வாராய்வாளர்கள் இந்த தமிழ்நிலங்களில் சிங்களமயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குறைகூறுகிறார்கள். முன்னால் இவர்களே புதைத்து வைத்த புத்த சிலைகளை தோண்டிஎடுத்து வருகிறார்கள். இந்த நிலங்களை சிங்கள பௌத்த நிலங்கள் என்று அறிவிக்கவே இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குறை கூறுகிறார்கள்.

ஒரு சில பழைய சிங்களம் அடையாளம் பலகைகள் திசைகளில் குறிக்கும் இடங்களில் பெயர்களை அங்கு, இன்று ஒரு தமிழ் பகுதிகளில் புதிய சிங்களம் பெயர் / திசையில் பலகைகள் சுத்த எண் மணிக்கு dumbstruck உள்ளது.

முன்பு தேவைக்காக இருந்த ஒரு சில சிங்கள பலகைகளை ஒப்பிட்டு பார்த்தால், இன்று தமிழ் பிரதேசங்களில் எங்கங்கும் கிடக்கும் சிங்கள பலகைகள் அதிர்ச்சியையே தரும்.
aug5-11-lanka military outpost in puthu with name board in engl and sinhala

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இலங்கை பாதுகாப்பு படைகள் முகாமில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உள்ளது.

முல்லைத்தீவு, மற்றும் வடக்கில் உள்ள பல இடங்களில் தமிழர்கள் கடலுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இவர்களின் இடங்களில் மீன்பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கொடுக்கும் மனுக்கள் 2009இலிருந்து சிங்களத்திலேயே இருக்கவேண்டும் என்று கூறப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

முன்பு தமிழ் போராளிகளின் நிர்வாக தலைநகரமாக இருந்த கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் சிங்கள பெயர்களே தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷே மாவாதா, அலுத் மாவாதே (புது ரோடு) ஆகியவை.

A9 சாலையின் அருகே கனகராயன்குளத்தின் அருகே உள்ள மூன்று சாலைகளும் சிங்கள பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோசலா பெரேரா ரோடு, அனுரா பெரேரா ரோடு, ரெவ யதிரவனா விமலா தேரோ சாலை. முதல் இரண்டு பெயர்களும் அந்த போரில் இருந்த போர்வீரர்களின் பெயர்கள். கடைசி ஒரு புத்த சாமியாரின் பெயர்.

இவை அனைத்தும் எங்கே கொண்டு செல்லும்? காலம் மட்டுமே பதில் சொல்லும்.

http://www.theweekendleader.com/Causes/615/exclusive:-inside-lanka.html
Erasing the cultural leftover of Tamils to convert Sri Lanka into Sinhala country

Series Navigationகலப்புஒரு கோடி மெழுகுவர்த்திகள்
author

Similar Posts

4 Comments

 1. Avatar
  ஒரு அரிசோனன் says:

  சிங்களத் தீவு என்றுதான் அன்று அமரகவி பாரதி பாடினான். இப்பொழுது அது உண்மையாகி வருகிறது.

  இங்கு கருத்துப்பதியும் இருவர், உங்கள் யார் இலங்கைக்குக் குடி பெயரச் சொன்னார்கள். இருக்க முடிந்தால் சிங்களம் கற்றுக்கொண்டு, புத்த சமயத்தை தழுவிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் தமிழ்நாடுக்கு அகதிகளாகச் செல்லுங்கள் என்றும், மோடி அரசு இலங்கைத்தமிழர்களைத் தமிழ்நாட்டில் குடியேற்றவேண்டும் என்றும் கூறுவர்.

  நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த …. மாந்தரை நினைந்துவிட்டால்…!

 2. Avatar
  ஷாலி says:

  சிங்களத் தீவு என்றுதான் அன்று அமரகவி பாரதி பாடினான். இப்பொழுது அது உண்மையாகி வருகிறது.//

  நம்ம பாரதி இந்த கலியுகத்தில் வாழ்ந்த மனுஷன்.இதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திரேதாயுகத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஸ்ரீ ராமன் காலத்திலும் சிங்களத் தீவாகத்தான் இருந்திருக்கிறது.அதனால்தான் பாலம் கட்ட வேண்டியிருந்திருக்கிறது. போகும்போது கடல் பாலத்தின் வழியாக போன ஸ்ரீ இராமபிரான், சீதையுடன் திரும்பும்போது ஆகாய மார்க்கமாக புஷ்பக் விமானத்தில் வந்துவிடுகிறார்.தீவுக்கு தரை வழி இல்லைதானே! மற்றபடி…

  “சிங்களத்தீவினுக்கோர் பாலமைப்போம்,
  சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.”

  என்று பாரதி பாடும் இந்த ஒரே பாட்டில் சிந்து நதி-சேர நம்நாடு-சுந்தர தெலுங்கு-கங்கை நதிப்புரம்-காவிரி-சிங்கமராட்டியர்-சேரத்து தந்தம்,இத்துடன் சிங்களத்தீவையும் இந்தியாவோடு இணைத்து அகண்ட பாரதத்து ஆசையை வெளிப்படுத்துகிறார்.அந்த ஆசை தற்போது உண்மையாக வருவது அனைவரும் அறிந்ததுதான்.எப்படி?

  இலங்கை சிங்களத் தீவாகவே இருக்க வேண்டும்.அங்கே அதிக தமிழர்கள் இருக்கக்கூடாது.தமிழினத்தை முற்றிலும் ஒழித்தும்,முள்ளியில் தப்பியவர்களை புலம்பெயர் தேசங்களில் அகதிகளாக அலைய விடுவதிலும் ஆள்பவர்கள் வெற்றி பெற்று விட்டனர்.

 3. Avatar
  ஷாலி says:

  //இங்கு கருத்துப்பதியும் இருவர்…//

  இருவரும் ஒருவரோ எனும் ஐயத்தில் வாழ்ந்த அன்பர் அரிசோனர், தற்பொழுது ஒருவரல்ல இருவர் தான் என்று ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி!..இனி “வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறாமல் இருந்தால் சரி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *