பாடம் (ஒரு நிமிடக்கதை)

This entry is part 11 of 26 in the series 10 மே 2015


சந்தனா சமையலை முடித்துவிட்டு ஒவ்வொன்றாக உணவு மேசை மீது கொண்டு கொண்டு வந்து வைக்கலானாள்.
உணவு மேசை முன் நான்கு வயது மகள் வாணி உட்கார்ந்திருந்தாள். துறு துறு கண்கள், பொசு பொசு கன்னம், பலாச்சுளை நிறம், வகுப்பில்
முதல் மாணவி, ஆண்டு விழாப் போட்டி என்றால் எல்லா வெற்றிக் கிண்ணங்களும் வாணிக்குத்தான். சொல்லிக் கொடுத்த எதையும் மறக்காத
நினைவாற்றல். ஆனால் என்ன ? பிடிவாதம் மிகவும் அதிகம்.

கடைசியாகச் செய்த வெங்காயப் புளிக்குழம்பு மணம் நாசியை நிரப்பியது.
சாதத்தை வெள்ளித் தட்டில் போட்டு குழம்பு சேர்த்துப் பிசைந்து வைத்தாள். வாயில் ஊட்டி விடாமல் வாணியே சாப்பிடுமாறு பழக்கியிருந்தாள்
சந்தன.
ஒரு கவளம் வாய்க்குள் போக அடுத்த நொடியே வாணி அப்படியே துப்பி விட்டாள்.
” ஏன் துப்புறே ?…”
” நல்லாவே இல்ல…ஏன் இன்னிக்கி புளிக்குளம்பு வச்சே ?…”
ஒரு சொட்டு குழப்பை வாயில் விட்டுப் பார்த்தாள். நல்ல சுவையாக இருந்தது.
” எல்லாம் நல்லாத்தான் இருக்கு…பேசாம சாப்பிடு…” என்றாள் சந்தனா.
வாணியின் பிடிவாத குதிரை எகிற ஆரம்பித்து.
பல முறை சொல்லியும் கேட்காததால் சந்தனா ஒரு முடிவுக்கு வந்தாள்.
” பத்து நிமிசம் இரு…சேகர் மெஸ் போய் கொளம்பு வாங்கிக்கிட்டு வர்றேன்…நல்ல டேஸ்டா இருக்கும் … வாணியின் முகத்தில் மகிழ்ச்சியின் பூரிப்பு… இரு சக்கர வாகனத்தைச்
சந்தனா எடுத்ததுதான் தெரியும் பத்து நிமிடங்களில் சாம்பாருடன் திரும்பி வந்தாள்.
தட்டில் போடப்பட்ட சாதத்தை பசியோடிருந்த வாணி ஆர்வத்துடன் ஒரு கவளம் வாயில் போட்டாள். வாணீயின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. அந்தப் பிஞ்சு மனத்தில் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது.அறிவொளி பளிச்சிட்டது.
” அம்மா சாரிம்மா… நீ வச்ச குளம்பையே சாப்பிடறேம்மா… ” என்றாள்.
சந்தனாவும் மகிழ்ந்தாள். சேகர் மெஸ் சம்பாரைப் பலரும் கேலி செய்வார்கள். ஏதோ இலையை அரைத்துச் சற்றே உப்புப் போட்டு அரைகுறையாகக் கொதிக்க வைத்தது
போல் சுவையில்லாமல் இருக்கும். வேறு வழி இல்லாமல் அதையும் சிலர் வாங்கிச் செல்கின்றனர்..
” அனுபவமே சிறந்த ஆசான் “என்பது உண்மைதான் என்று மகிழ்தாள் சந்தனாவாணிக்காகக் கலந்த சாதத்தை அவர்கள் வீட்டு நாய் ஜிம்மி முகர்ந்துவிட்டுச் சாப்பிடாமல்
போனதுதான் உச்ச கட்டம்.

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Series Navigationவிசுவப்ப நாயக்கரின் மகள்  இயல்பான முரண்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *