உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!

This entry is part 18 of 24 in the series 25 அக்டோபர் 2015

salman

அலைக்கற்றை ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற இன்னும் பல்வேறு ஊழல்களில் கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டு எழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு அடி கோலிய காங்கிரசுக்குப் பாடம் புகட்ட எண்ணி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அதை அரியணையில் அமர்த்தியது சிங்கத்திடமிருந்து தப்பிப் புலிவாயில் ஒருவன் சிக்கிய கதையைத்தான் நினைவூட்டுகிறது.

தெய்வம், தேசம் ஆகியவற்றக் காட்டிலும் மதத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்களுக்கு வாக்களித்தால் என்ன நேரும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி உதிர்த்துக்கொண்டிருக்கும் உளறல்களிலிருந்து மிகத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகிறது. ராமஜென்ம பூமி சார்ந்த விஷயத்தில் மக்களுக்கு உள்ள ஈடுபாட்டால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என்கிற மிகத் தவறான மயக்க உணர்விலிருந்து பாஜகவினர் விடுபடப் போவதே இல்லை என்பதுதான் அவர்களின் திருவாய்கள் உதிரர்த்துக்கொண்டிருக்கும் உளறல்களிலிருந்து தெரிகிறது. ராமன் அவதார புருஷன் என்பதை நம்புகிற பெரும்பாலான இந்துக்கள் கூட அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில்தான் ராமபிரானுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றெல்லாம் வெறி பிடித்து அலையவில்லை. அவர்களுக்கு வேண்டிய, வயிறார மூன்று வேளை – இரண்டு வேளையாகிலும் – சோறு, பாதுகாப்பான உறைவிடம், உடை, கல்வி, வேலை ஆகியவற்றை ராவணன் திரும்ப வந்து கொடுத்தாலும் இந்துக்கள் ஏற்பார்கள் என்பதே உண்மை.

மக்களைக்காட்டிலும் மதத்தை அதிகமாய் நேசிக்கும் தலைவர்கள் மக்களையும் புரிந்துகொள்ளவில்லை, நல்லவற்றைப் போதித்த மதத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதே மெய்.

பிற மதத்தினரின் உணவுப்பழக்கத்தி லெல்லாம் தலையிட்டுக் கலகம் செய்யும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மாட்டிறைச்சி சாப்பிட்டால் தப்பு. ஆட்டிறைச்சி சாப்பிடலமாமா? மற்ற உயிர்களை வதைத்து அவற்றை உண்பது மட்டும சரியாமா? மாடு தெய்வமெனில் அதை உன் மட்டுக்கு வைத்துக்கொள். மற்றவர்களும் அவ்வாறே கருதவேண்டுமென நிர்ப்பந்திக்க நீ யார்? இந்துக்களிலேயே சில இனத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே? அது தெரியாதா உனக்கு? உனக்குப் பிடிக்கவில்லை யெனில் நீ அதைச் செய்யாதே. உன் கருத்தின்படி பிற மதத்தினரும் நடக்க வேண்டும் என்று கூற நீ யார்?

அது சரி, இந்துக்கள் பசுக்களை அன்பாக நடத்துகிறார்களா? பசு தெய்வமெனில் அதன்பாலைக் கறந்து நாம் பருகலாமா? அதன் கன்றுகளுக்கே அந்த முழு உரிமையையும் தர வேண்டாமா? இந்துக் கோவில்களில் உள்ள பசுக்கள் எலும்புந் தோலுமாய் வற்றி வறண்டு கிடப்பது யாரால்? அவற்றை பராமரிக்கும் கடமையைச் சரிவரச் செய்யாமல் அவற்றைப் பட்டினிபோட்டு அந்தக் காசில் கொழுக்கும் இந்துக்கள் அன்றோ! மாட்டுக்கு ஊசி போட்டு அதிகப் பாலைக் கறக்கும் கொடுமையைச் செய்வோரை என்ன செய்யப் போகிறாய்?

தாத்ரியில் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் அவரைச் சில கொடும் பாவிகள் அடித்தே கொன்றிருக்கிறார்களே! மாட்டைக் கொல்லுவது பாவமெனில் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றது மட்டும் பாவம் ஆகாதா? இந்த அநியாயத்துக்காகப் பதறித் துடித்துக் கொலைகாரார்களைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர், அது பற்றி வாயே திறவாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பிரசாரம் மட்டும் செய்தால் போதுமா?

t1larg.ayodhya.afp.gi

ஊழலால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. மதவெறி தூண்டப்பட்டு அது மிகுமானால், அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும். ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்படுவார்கள். பெண்கள் வன்னுகர்வுக்கு ஆளாவார்கள். குழந்தைகள் கூட விட்டுவைக்கப்பட மாட்டார்கள். தேசமே பல்லிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கும். கோவில்கள் சூறையாடப்படும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் விளைவுகள் பற்றி இந்த மதம்பிடித்த தலைவர்கள் அறிய மாட்டார்களா? அதன் விளைவாகப் பங்களாதேஷின் ஆயிரக்கணக்கான பழம்பெரும் காளி கோவிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டனவே. இந்து-முஸ்லிம் கலவரங்கள் அதிகரித்ததே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பிறகு தானே? தங்கள் கோவில்கள் இடிக்கப்படுவதற்குத் தாங்களே வழி வகுக்கும் இவர்கள் எத்தோடு சேர்த்தி?

ஒரு தலைவர் இந்துப் பெண்மணிகள் தலா பத்துக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று உளறினார். அந்தப் பெண்ணின் நிலை பற்றி அந்த மனிதர் கடுகளவேனும் சிந்தித்திருந்தால் அப்படி ஒரு கொடுமையான யோனையைச் சொல்லுவாரா? பெண்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பவே, மற்றொருவர் சற்றே இறங்கிவந்து, பத்தை நாலாக்கி இரக்கம் காட்டினார்.

பாஜகவின் ஒரு முக்கியத் தலைவி சமுஸ்கிருதம் படித்தால் நல்ல தன்மைகள் பெருகும் என்று உளறிக்கொண்டிருக்கிறார். தமிழில் இல்லாத நல்லவையா சமுஸ்கிருதத்தில் இருக்கின்றன? மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவ்வளவு மோசமான இலக்கியங்களும் வடமொழியில் இருக்கின்றன என்று பட்டியல் இட்டால் அந்த அம்மையார் எங்கே போய் ஒளிந்து கொள்ளுவார்? எல்லா மொழிகளிலும் நல்லவையும் கெட்டவையும் கலந்தே இருக்கின்றன.

இன்னொருவர் பகவத் கீதை பயிலச் சொல்லுகிறார். பகவத்கீதை யில் சில ஆன்மிகத் தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. ஆனால் அது சாதாரண மக்களுக்கான நூலன்று. பெருவாரியான மக்களுக்கான அரிய படைப்பாகத் திகழும் திருக்குறளுக்கு முன்னால் பகவத்கீதை ஒன்றுமே இல்லை!

மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் என்னவெல்லாம் நேரும் என்பதற்கு இவை மிகச் சில உதாரணங்கள்:

காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவதற்காக இவர்களைப் பதவியில் அமர்த்திவிட்டோம். அடுத்த தேர்தலில் இவர்களுக்கு மக்கள் கட்டாயம் பாடம் கற்பிப்பார்கள்.

……….

 

Series Navigationஅ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வைநானும் ரவுடிதான்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

32 Comments

 1. Avatar
  paandiyan says:

  //பாஜகவின் ஒரு முக்கியத் தலைவி சமுஸ்கிருதம் படித்தால் நல்ல தன்மைகள் பெருகும் என்று உளறிக்கொண்டிருக்கிறார். தமிழில் இல்லாத நல்லவையா சமுஸ்கிருதத்தில் இருக்கின்றன?//

  உங்கள் அரசியல் குறித்த பார்வை , விசாலமான சிந்தனை இதில் தில்லை தெளிவாக விளங்கியது

 2. Avatar
  paandiyan says:

  நடை பெற்றது BJP இல்லாத மாநிலம் . ஊழலும் குறைவில்லாத மாநிலம் அது தவிர இதுவும் !!

  பெங்களூர்: பசுவதைக்கு எதிராக முனைப்பு காட்டிய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள மூடுபித்ரியில் கொலை செய்யப்பட்டிருந்தார். அக்கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசுமாடுகள் வெட்டப்படுகின்றன. கேரளாவுக்கு அவை கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் பூஜாரி (29). இவர் கடந்த 9ம் தேதி பைக்கில் வந்த ஒரு கும்பலால் மூடுபித்ரி பகுதியில், வெட்டி கொலை செய்யப்பட்டார்.

  முகமது ஷெரிப், முஸ்தபா கவூர், முகமது முஸ்தபா, கபீர், முகமது ஹனீப், முகமது இலியாஸ், இப்ராகிம் லியாகத் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய, 8 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை மங்களூர் போலீஸ் கமிஷனர் எஸ்.முருகன் உறுதி செய்தார். பிரசாந்த் கொலை மட்டுமின்றி, சட்டவிரோத கால்நடை கடத்தலிலும் இக்கும்பலுக்கு தொடர்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

 3. Avatar
  paandiyan says:

  //காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவதற்காக இவர்களைப் பதவியில் அமர்த்திவிட்டோம். அடுத்த தேர்தலில் இவர்களுக்கு மக்கள் கட்டாயம் பாடம் கற்பிப்பார்கள்.///

  உங்களை போன்ற சிந்தனையாளர்களுக்கும் பாடம் கண்டிப்பாக உறுதி !!!

 4. Avatar
  paandiyan says:

  தினகரன் ஏரிப்பு ,பஸ் மாணவிகள் எரிப்பு , தா கீ கொலை என்று பல அரசியல் ஊலல் கொலைகளை என் ஒருவரும் கண்டிக்கவில்லை . ஒரு கலைமாமணியும் திருப்பி அனுப்பவில்லை !!!!!!!!!!!!!!

 5. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  முற்று முழுதாக பொய்களால் நிரம்பிய ……… தேசத்தின் அரசியல் சாஸனத்தையே இழிவு செய்யும் போக்குடைய …….ஜோதிர்லதா கிரிஜா அம்மணி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ……. அருவருக்கத் தக்க வ்யாசம் இது. மாற்றுக்கருத்துக்கள் கீழே :-

  \\ ராமஜென்ம பூமி சார்ந்த விஷயத்தில் மக்களுக்கு உள்ள ஈடுபாட்டால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என்கிற மிகத் தவறான மயக்க உணர்விலிருந்து பாஜகவினர் விடுபடப் போவதே இல்லை என்பதுதான் அவர்களின் திருவாய்கள் உதிரர்த்துக்கொண்டிருக்கும் உளறல்களிலிருந்து தெரிகிறது. \\

  மதிஹீனமான வாசகம்.

  இந்த வ்யாசம் முழுதும் உளரல்களால் நிரம்பியிருக்க ………. இது ஏதோ மதிநுட்பத்துடன் எழுதப்பட்டதாகவும் ……..தான் சொல்லும்பொய்களை அடுத்தவர் மீது திணித்து அவர்கள் உளரல் வாதிகள் என்றும் ப்ரலாபிப்பது அவக்கேடு.

  மோடர் மௌத் (motor mouth) என்ற படிக்கு அதி தீவ்ரவாதம் பேசும் அன்பர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அதை வைத்து அதுவே கட்சியின் நிலைப்பாடு என்பது அப்பட்டமான மதிஹீனம்.

  மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளி தேசத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்களையும் அரவணைத்து முன் செல்வோம். ஸப் கா ஸாத் ஸப் கா விகாஸ் என்ற தாரக மந்த்ரத்தை முன்வைத்தே பாஜக வெற்றி பெற்றது என்பதும் ……… அதை முன்னெடுத்துச் செல்கிறது என்பதும் உலகமறிந்த விஷயம்.

  அதை மறைக்கும் விதமாக விஷமத்தனமாக மேற்கண்ட கருத்து பகிரப்பட்டுள்ளது.

  மற்ற விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளுவது என்றால் புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல.ஹிந்துஸ்தானத்தின் தேச ஒற்றுமைக்கும் தேசத்தின் பண்பாட்டுடனும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயமும் நயத்தகு நாகரிகத்துடன் பேசப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது.

  \\ ராமன் அவதார புருஷன் என்பதை நம்புகிற பெரும்பாலான இந்துக்கள் கூட அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில்தான் ராமபிரானுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றெல்லாம் வெறி பிடித்து அலையவில்லை. \\

  இப்படிப்பட்ட ஒரு கருத்தை இந்த அம்மணி எப்படி கண்டுபிடித்தார். ஏதாவது சர்வே நிகழ்த்தினாரா? அதைப் பகிருவாரா?

  இல்லையென்றால் போலி முற்போக்கு வெறியின் பாற்பட்டே இப்படி ஒரு கருத்தினை அம்மணி பகிர்ந்திருக்கிறார் என்று அவதானிக்கப்படும்.

  ஹிந்துஸ்தானத்தின் ந்யாயாலயங்களே அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றன. அப்படிப்பட்ட தீர்ப்பு அளித்த ந்யாயாதிபதிகளுள் ஒருவர் முஸல்மாணிய சஹோதரர். ஜோதி அம்மையார் ஹிந்துஸ்தானத்தின் ந்யாயாலயங்களும் ஹிந்துஸ்தானத்தின் ந்யாயாதிபதிகளும் ………. அயோத்தியில் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த இஸ்லாமிய நீதிபதி உட்பட ……… வெறிபிடித்து அலைகின்றனர் என்று சொல்ல வருகிறாரா என்று வாசகர்கள் வியக்கின்றனர்.

  \\ மக்களைக்காட்டிலும் மதத்தை அதிகமாய் நேசிக்கும் தலைவர்கள் மக்களையும் புரிந்துகொள்ளவில்லை, \\.

  ஆமாமாம். வாடிகனையும் வாடிகனது மதத்தையும் மட்டிலும் நேசித்து…….. எமது ஹிந்துஸ்தான சஹோதரர்களை பிச்சைக்காரர்களாகப் பார்த்து அவர்களுக்கு திட்டங்கள் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை முன்னேற்றாது பிச்சைக்காசு மட்டிலும் போட்டு அவர்களை ஏழ்மையில் வைத்திருப்பதை கொள்கையாகக் கொண்டு……… ஹிந்துஸ்தானத்து மக்களின் வரிப்பணைத்தை இத்தனை சைபர் என்று கூட எண்ண முடியாது லக்ஷக்கணக்கான கோடிகளை ஊழல் செய்த தலைவர்கள்……….மக்களை தமது அடிமைகளாகவும் வாடிகனது மதநேசத்தை ஹிந்துஸ்தானியர் மீது திணித்த அவலமும் ………… முற்போக்கு தான். இவர்களை மக்கள் இன்னமும் கூட முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை தான்.

  அதே சமயம் தொடர்ந்து மக்களது அன்றாட வாழ்வுத்தேவைகளான பொதுவிநியோகத்தின் சீர்மை, மின்சாரம், தண்ணீர், சாலைகள் போன்ற அடிப்படை விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி ………… BIMARU………… என்று பின் தங்கிய மாகாணமாக இருந்த மத்யப்ரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி முன்னேற்றி…… தொடர்ந்து வெகுஜன ஆதரவை இந்த செயல்பாடுகளின் மூலம் பெற்றமையை மக்களது ஆதரவு இல்லாமை ……… என்று சொல்வது போலி முற்போக்குப் பார்வை ………… மக்களின் வெகுஜன ஆதரவை இழிவு செய்யும் பார்வை என்று மட்டிலும் அவதானிக்கப்படும். அப்படி மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் அவர்களது மதம் ஹிந்துமதமாக இருந்தால் ……… அதை நேசிக்கவே கூடாது என்று எண்ணுவது………. இழிவான போலி முற்போக்குப் பார்வை என்பதனையும் மக்கள் அறிவர். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

  \\ மாடு தெய்வமெனில் அதை உன் மட்டுக்கு வைத்துக்கொள். மற்றவர்களும் அவ்வாறே கருதவேண்டுமென நிர்ப்பந்திக்க நீ யார்? இந்துக்களிலேயே சில இனத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே? அது தெரியாதா உனக்கு? \\

  உத்தரப்ரதேசத்தில் இருக்கும் கோஸி என்ற மாடுவளர்க்கும் முஸல்மாணிய சஹோதரர்களே பசுவதைத் தடைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை அம்மணி அறிவாரா? குரான்-ஏ-கரீமை கசடறக்கற்ற ஒரு மௌலானா அவர்களே பசுவதைத் தடைக்காக போராடப்போவதாக அறிவித்திருக்கிறாரே அதை அறிவாரா இந்த அம்மையார்.

  த்வீபாந்தரத்தில் இருக்கும் முற்போக்குப் ருத்ராட்சப் பூனைகள் நேத்ரங்களை மூடிக்கொண்டு விட்டால் ஹிந்துஸ்தானம் இருளில் ஆழ்ந்து விடாது.

  த்வீபாந்தரத்தில் அம்மணி இருப்பதால் ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தை இழிவு செய்வதில் உகப்பு கொள்கிறார் என்று கொள்ளலாமா?

  ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தின் directive principles பசுவதைத் தடையை பரிந்துரை செய்கிறது என்பதனை இந்த அம்மையார் அறிவாரா? அரசியல் சாஸனத்தை பரிந்துரை செய்த அனைத்து சான்றோர்களையும் இழித்துப்பழித்து ஒருமையில் அவஹேளனம் செய்யும் வாசகங்கள் மேற்கண்ட வாசகங்கள் என்பதை இந்த அம்மணி உணரவேண்டும்.

  பசுவதைத் தடையை மட்டிலும் பரிந்துரைத்து ஆட்டுவதைத் தடையை பரிந்துரை செய்யாத அரசியல் சாஸனத்தை நமக்களித்த சான்றோர்கள் ஜோதிர்லதா கிரிஜா அம்மணி அவர்களுடைய அறிவினை விட குறைந்த அறிவு படைத்த அடிமுட்டாள்கள் என்று கருதுகிறார்களா அம்மணியார்? பசுவதைத் தடையை பரிந்துரை செய்த மஹாத்மா காந்தியடிகள் இந்த அம்மணியை விட அறிவு குறைந்தவர் என்று டிண்டோரா போடுகிறாரா இந்த அம்மையார்? அவக்கேடு.

  அரசியல் சாஸனத்தையே மறைமுகமாக இழிவு செய்யும் கருத்துக்களை…….அடக்கிய வ்யாசம் இந்த வ்யாசம்.

 6. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  பச்சைப்புளுகுகளை திட்டமிட்டு பரப்பும் அவக்கேட்டை என்னென்று சொல்வது

  \\ தாத்ரியில் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் அவரைச் சில கொடும் பாவிகள் அடித்தே கொன்றிருக்கிறார்களே! \\

  முதலில் ஒரு நபரை எந்தக் காரணத்துக்காக இருந்தாலும் சரி கொலை செய்வது என்பது மிகக் கடுமையாக ந்யாயாலயத்தால் தண்டிக்கப்பட வேண்டிய விஷயம். அதை அடுத்து மேற்கொண்டு பார்ப்போம்.

  ஆனால் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் தான்…………. அவர் கொலை செய்யப்பட்டார் என்பதனை த்வீபாந்தரத்தில் இருந்து ஜோதிர்லதா கிரிஜா அம்மணி எப்படிக் கண்டுபிடித்தார்………..இன்னமும் உத்தரப்ரதேச புலீஸே இந்தக்கொலை எதனால் நிகழ்ந்தது என்று நிர்த்தாரணம் செய்யாத போது…………..

  தானே புலீஸாகவும் ஆகி, விசாரணையும் செய்து, ந்யாயாதிபதியாக ஆகி…………….மாட்டிறைச்சிக்காகத் தான் ஜெனாப் இக்லாக் கொல்லப்பட்டார் என்று துப்பு துலக்கி………….. இந்த அம்மணி ஆகாசத்துக்கும் பூமிக்கும் தாம் தூமென்று குதிக்கும் படிக்கான ……..ஒரு புளுகுமூட்டைகளாலும் மதக்காழ்ப்புக்களாலும் தேச விரோதக்கருத்துக்களாலும்……… நிரம்பிய ஒரு வ்யாசத்தை பகிர்ந்திருப்பதை…………….என்னென்று சொல்வது…………அவக்கேடு.

  அம்மணியாருக்கு ஹிந்துத்வ சக்திகளை காரணமில்லாமல் கூட வெறுப்பதற்கு தனிநபர் உரிமை இருக்கிறது. ஆனால் துப்பு துலங்காத ஒரு விஷயத்தை இன்ஸ்டண்ட்டாகத் துப்பு துலக்கியது போல பாவ்லா செய்து புளுகினால் …………. இந்தக் கருத்துக்கள் இந்த அம்மையாருடைய தனிப்பட்ட வெறுப்பின் பாற்பட்டு மட்டிலும் பகிரப்படுகிறது என்றே அவதானிக்கப்படும்.

  \\ மாட்டைக் கொல்லுவது பாவமெனில் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றது மட்டும் பாவம் ஆகாதா? \\

  குற்றம் இன்ன காரணத்திற்காகத் தான் செய்யப்பட்டது என்று தெரியாத போது கூட இன்ன காரணத்திற்காகத் தான் செய்யப்பட்டது என்று அட்ச்சுவுட்டு சமூஹத்தில் விரோதத்தை வளர்க்கும் சமூஹவிரோதக் கருத்துக்களை பரப்புரை செய்வது மனிதனைக்கொன்ற பாவத்தை விட கோரமான பாபமாகும்.

  \\ இந்த அநியாயத்துக்காகப் பதறித் துடித்துக் கொலைகாரார்களைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர், அது பற்றி வாயே திறவாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பிரசாரம் மட்டும் செய்தால் போதுமா? \\

  தில்லி மாநகரத்தில் எமது 3000 சீக்கிய சஹோதரர்கள் கொலை செய்யப்பட்ட போது அப்போதைய ஹிந்துஸ்தானத்தின் ப்ரதமர் ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்று சொல்லியிருக்கிறார். அப்போது இந்த அம்மணியார் ஏதேனும் வெகுண்டெழுந்து இப்படி இழிவான தரக்குறைவான வ்யாசம் ஏதும் இல்லாத போகிலும் ……………… ஏதேனும் வ்யாசம் எந்தப் பத்திரிக்கையிலாவது கருத்து என்று ஏதும் பதிந்திருக்கிறாரா?

  நரேந்த்ரபாய் மோதி அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் ப்ரதமர். தாத்ரியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருப்பது கொலை என்ற அளவில் நிச்சயம் ந்யாயாலயத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்………..ஹிந்துஸ்தானத்தின் ப்ரதமரை ந்யாயாதிபதியாக்கவோ அல்லது தெஹ்ஸிலின் தரோகாவாக ஆக்க முனைவது………… போலி முற்போக்குக் காரார்களின் இழிவுச் சிந்தனை…….

 7. Avatar
  paandiyan says:

  //அம்மணியாருக்கு ஹிந்துத்வ சக்திகளை காரணமில்லாமல் கூட வெறுப்பதற்கு தனிநபர் உரிமை இருக்கிறது. ஆனால் துப்பு துலங்காத ஒரு விஷயத்தை இன்ஸ்டண்ட்டாகத் துப்பு துலக்கியது போல பாவ்லா செய்து புளுகினால் …………. இந்தக் கருத்துக்கள் இந்த அம்மையாருடைய தனிப்பட்ட வெறுப்பின் பாற்பட்டு மட்டிலும் பகிரப்படுகிறது என்றே அவதானிக்கப்படும்.//

  என்ன sir, நம்ப நாட்டில் எழுத்தாளர்கள் தான நீதிபதிகள் . போலீஸ் வேறு கோணத்தில் கொண்டு வந்தாலும் இவரால் போலீஸ் தான் குறை கூறுவார்கள தவிர மன்னிப்பு கேட்பார்கள என்ன ? காஸ்மீர் விசயத்தில் இந்த எழுத்துகல் கூறிய பொய்களை நாம் பார்க்கவில்லையா ?

 8. Avatar
  paandiyan says:

  //தன் விளைவாகப் பங்களாதேஷின் ஆயிரக்கணக்கான பழம்பெரும் காளி கோவிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டனவே. இந்து-முஸ்லிம் கலவரங்கள் அதிகரித்ததே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பிறகு தானே? தங்கள் கோவில்கள் இடிக்கப்படுவதற்குத் தாங்களே வழி வகுக்கும் இவர்கள் எத்தோடு சேர்த்தி?//

  கா நா சு மருமகன் பாரதி மணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் படித்து கொஞ்சம் தெளிவு பெறவும்

 9. Avatar
  ஷாலி says:

  //தானே புலீஸாகவும் ஆகி, விசாரணையும் செய்து, ந்யாயாதிபதியாக ஆகி…………….மாட்டிறைச்சிக்காகத் தான் ஜெனாப் இக்லாக் கொல்லப்பட்டார் என்று துப்பு துலக்கி………….. இந்த அம்மணி ஆகாசத்துக்கும் பூமிக்கும் தாம் தூமென்று குதிக்கும் படிக்கான ……..ஒரு புளுகுமூட்டைகளாலும் மதக்காழ்ப்புக்களாலும்//

  ஜோதிர் லதா கிரிஜா அவர்களே! நம்ம க்ருஷ்ண குமார் பின்பற்றுவது உங்க இந்து மதத்தை அல்ல.அது வேறு, இந்து பாரம்பரிய,கலாச்சாரத்தை காப்பற்ற, கடவுளை நம்பாத நாஸ்திக தலைவரால் உருவாக்கப்பட்ட இந்துத்வா அரசியல் இயக்கமே அவரது கொள்கை.இதற்கும் வேத கால இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை.க்ருஷ்ணஜியின் கொள்கையை எவர் எதிர்த்தாலும் உடனே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சிலுவையில் அடித்து விடுவார்.

  சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார்.

  “நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) – (தொகுதி-3 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).

  அமெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  “மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர்.

  நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார்.

  மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

  பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!

  பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர்.

  ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர்.

  அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? “ என்று சொன்னார்.

  நம்ம க்ருஷ்ண குமாரும் இந்த கைப்புள்ளே லிஸ்டில் உள்ளவர்.ஆகவே இவரைக் கண்டு கொள்ள வேண்டாம்.வேத வழியில் நடந்த சுவாமி விவேகானந்தர் வாழ்வுப்படி மாட்டிறைச்சி உண்டு ஆண்மையுள்ள இந்தியாவை உருவாக்குவோம். மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) – .சுவாமிஜி கூறியபடி நல்ல இந்துவாக வாழு அனைவரும் உண்போம் மாட்டுக் கறி.

 10. Avatar
  ஷாலி says:

  க்ருஷ்ணகுமார் says: // குரான்-ஏ-கரீமை கசடறக்கற்ற ஒரு மௌலானா அவர்களே பசுவதைத் தடைக்காக போராடப்போவதாக அறிவித்திருக்கிறாரே அதை அறிவாரா இந்த அம்மையார்.//

  குமாரண்ணே! ஏன் அட்ரஸ் இல்லாத முசல்மானை எல்லாம் சபையில் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். நம்ம நாடறிந்த முசல்மான் முக்தார் அப்பாஸ் நக்வி ரொம்ப தெளிவா சொன்னதை விட்டுவிட்டீர்களே!

  “மாட்டிறைச்சியை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் பாகிஸ்தானுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லலாம்’” என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு (பிராமணர்) கருத்து தெரிவித்துள்ளார்.

  தனது ஃபேஸ்புக் போஸ்டில் இதுக்குறித்து கட்ஜு கூறியிருப்பது:

  I am Hindu, and I have eaten beef,and will again eat it.There is nothing wrong in beef eating.90% of the world eats beef.Are they all sinneers? And I refuse to believe that cow is sacred or our mother.How can an animal be a mother of a human being? That is why I say 90% Indians are idiots, Mr.Mukhtar Abbas Naqvi included.

  நம்ம உச்ச நீதிமன்ற ஜட்ஜ், கட்ஜ் சொன்னது உச்சந்தலையில் ஆணி அடிச்ச மாதிரி இருக்கிறது.”ஒரு மிருகம் எப்படி மனிதனுக்கு தாயாக முடியும்?”

 11. Avatar
  ஷாலி says:

  // தாத்ரியில் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் அவரைச் சில கொடும் பாவிகள் அடித்தே கொன்றிருக்கிறார்களே! மாட்டைக் கொல்லுவது பாவமெனில் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றது மட்டும் பாவம் ஆகாதா?//

  அம்மையார் அவர்களே! மாடும் மனிதனும் ஒன்றாக முடியாது.மனுஷன் வெறும் மனுஷன்தான்.ஆனால் மாடு அப்படியல்ல.

  முழுமுதல் தெய்வங்கள் என பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் ஆகியவர்களைச் சொல்வார்கள் . அதனை அடுத்து அமைபவர்கள் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்றும் சொல்வார்கள் . இந்த எல்லா தெய்வங்களும் பசுவில் இடம்பிடித்திருக்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன .

  பசுவின் உடலில் வலது கண்ணில் சூரியன், இடது கண்ணில் சந்திரன், இரண்டு கண்களுக்கும் இடையில் ( நடுவில் ) சிவபெருமான், மூக்கின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், மண்டையில் தீர்த்தராஜன், வலது கொம்பில் எமன், இடது கொம்பில் இந்திரன், நெஞ்சில் மகாவிஷ்ணு, இடது முன் கழுத்தில் சரஸ்வதி, கீழ் பக்கம் ராகு, மேல் பக்கம் கேது, முன் கால் நடு முண்டுக்கு மேல் செவ்வாய், அதன் கீழ் சனி, அதன் மேல் சுக்கிரன், புதன், கொண்டையில் பிரம்மா, கொண்டையின் கீழ்ப்பக்கம் குரு, முன்பக்க வலது காலில் பைரவர், இடது காலில் அனுமன், நடு முதுகில் அக்னி, பின்பக்கம் முதுகில் வருணன், குபேரன், வாலின் கீழ் லட்சுமி, அதன்கீழ் கங்கை, வாலில் நாகராஜன் வாசம் செய்கிறார்கள் என்கிறது பக்தவிலாசம் என்னும் நூல்.
  இப்படி அனைத்து தேவாதி தேவர்களும் பசுவில் குடி கொண்டு இருப்பதால்தான் யாகங்களில் பசு பலிடப்பட்டு அனைத்து நன்மைகளும் கிடைப்பதாக ஐதீகம்.பசுவைக் கொல்லும் யாகங்களின் பெயர்கள்.

  கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகம்
  வாயவியஸ் வேதபசு- வாயூ தேவதைகளுக்காக வெள்ளை பசுவைக் கொல்லும் யாகம்
  காமயபசு‬- தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்
  ‪வதசொபகரணம்‬- கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்
  ‪அஷ்டதச பசுவிதானம்‬ – 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்
  ‪‎ஏகாதசீ பசுவிதானம்‬ – 11 பசுக்களைக் கொல்லும் யாகம்
  ‪கிறாமாரணயா பசுபிர்சம்ஷா‬ – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்வது
  ஆதித்யவேதபசு‬ – சூரிய தேவனுக்கு பசு யாகம்
  ‪‎ரிஷபாலம்பன விதானம்‬ – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி…

  பசு மாடுகளைக் கொல்ல கூடாது என்று கூறும் க்ருஷ்ணகுமாரின் இந்துத்வா கூட்டத்தில் இதற்க்கு ஆதாரம் கிடைக்காது.ஆதி கால இந்து வேதங்களில் மட்டுமே ஆதாரங்களைப் பார்க்க முடியும்.
  அண்ணன் க்ருஷ்ண குமார் “சங்’க குருஜி சொல்லும் வார்த்தைகளை மட்டுமே வேதமாகப் பார்ப்பவர். ஆகவே வேதத்தை நம்பும் இந்துக்கள் இவரை கண்டு கொள்ள வேண்டாம்.

 12. Avatar
  BS says:

  புளுகு மூட்டைகள்; மதிஹீனம்; அருவருக்கதக்க கட்டுரை (வ்யாசம்); விஷமத்தனமான கருத்து; முற்போக்கு வெறி (அதே சமய்ம் போலி முற்போக்கு என்ற சொல்); முற்போக்கு ருத்ராட்ச பூனை; டிண்டோரா (தண்டோரா) போடுகிறார்; பச்சைப்புளுகுகள்; அவக்கேடு; ஆகாசத்துக்கும் பூமிக்கும் தாம் தீமென்று (தாம் தீம் என்பது ஒரு ஹிந்திச்சொல்) குதிக்கிறார்; தேசவிரோதக்கருத்துக்கள்; முற்போக்கு பாவ்லா செய்து புளுகுகிறார்; அட்ச்வுட்டு சமூக விரோதக்கருத்துக்களை வளர்க்கிறார்; கோரமான பாவம்; இழிவுச்சிந்தனை//

  மேலே கண்டவைகள் திரு கிருட்டிணக்குமாரின் மடல்களில் காணப்படும் சொற்கள். இதைப்படிப்போருக்கு இவைகள் மிரட்டல்கள் என்று புரியும். அதே வேளையில், இப்படியும் எழுதுகிறார்: //அம்மணியாருக்கு ஹிந்துத்வ சக்திகளை காரணமில்லாமல் கூட வெறுப்பதற்கு தனிநபர் உரிமை இருக்கிறது// :-)

  இதைப்படித்த பின்னர் ஒன்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது. ஜோதிர்லதா கிரிஜா மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்குப்போட்டியிட அடுத்த தேர்தலுக்குத் தயாரகி வருகிறார் என்று திரு கிருட்டிணக்குமார் பயப்படுகிறாரோ ?

  தமிழ் எழுத்தாளர் திண்ணையில் இன்று நம் சமூகத்தில் நடைபெற்று வரும் தகா செயல்களைப்பற்றித் தன் கருத்துக்களை வைக்கிறார் ஒரு கட்டுரையாக. அதற்குத்தான் இத்தளமே இருக்கிறது? வேறதற்கு?

  அவருக்கு மாற்றுக்கருத்துக்களை வைக்கும் இலட்சணம் எப்படியிருக்கிறது என்று திரு கிருட்டிணக்குமாரின் சொற்களிலேயே பார்ப்போம்:

  //மோடர் மௌத் (motor mouth) என்ற படிக்கு அதி தீவ்ரவாதம் பேசும் அன்பர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அதை வைத்து அதுவே கட்சியின் நிலைப்பாடு என்பது அப்பட்டமான மதிஹீனம்.//

  மாற்றுக்கருத்துக்களை கண்ணியமான சொற்களில் வைக்கத்தெரியாதவர்களூக்கு ஊடகங்களும் பி ஜே பிக்காரர்களும் சேர்ந்தே கொடுத்த திருநாமமே மோட்டார் மவுத்ஸ். அவர்கள் தமிழில் பேசினால், திரு கிருட்டிணக்குமாரின் சொற்களைத்தான் தேடித்தேடி எடுத்துப்பேசி மகிழ்வார்கள்.

  திரு கிருட்டிணக்குமார் எழுதிய இருமடல்களின் கருத்துக்களையும் என்னால் மோட்டார் மவுத்ஸ் வழியாக வரும் இவ்வீனத்தனமான சொற்களைப்போடாமல் என்னால் எழுதமுடியும்? எழுதிக்காட்டட்டுமா? (இந்த சவாலை ஏற்றால் போடத்தயார்)

  தன் கருத்துக்களிலேயே நம்பிக்கை வைக்காதவர்கள் மட்டுமே மோட்டார் மவுத்ஸ்.

  திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்
  எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
  உன் வேல் தடுக்கும்

  என்று பூவை செங்குட்டுவன் என்று திருப்புகழின் பெருமையைச் சொன்னதை பொய்யாக்குகிறார் திரு கிருட்டிணக்குமார். ஏனெனின்ல், வாய் மணக்கும் என்றால், வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாராலும் கேட்டு மகிழத்தக்கதாகவே இருக்கும் என்று பொருள். திருப்புகழில் தெய்வ வலிமையென்கிறார் செங்குட்டுவன்.

  திருப்புகழைப்படித்தேன் என்று சொல்லும் திரு கிருட்டிணக்குமார் அந்நூலுக்கு உரிய மரியாதை இனியாவது கொடுப்பார் என்று அருணகிரிநாதருக்குக் காட்சி தந்த விராலி மலை கந்தவேலை வேண்டுகிறேன்.

 13. Avatar
  paandiyan says:

  no one touch this point?? all secularism??????

  பெங்களூர்: பசுவதைக்கு எதிராக முனைப்பு காட்டிய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள மூடுபித்ரியில் கொலை செய்யப்பட்டிருந்தார். அக்கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசுமாடுகள் வெட்டப்படுகின்றன. கேரளாவுக்கு அவை கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் பூஜாரி (29). இவர் கடந்த 9ம் தேதி பைக்கில் வந்த ஒரு கும்பலால் மூடுபித்ரி பகுதியில், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  முகமது ஷெரிப், முஸ்தபா கவூர், முகமது முஸ்தபா, கபீர், முகமது ஹனீப், முகமது இலியாஸ், இப்ராகிம் லியாகத் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய, 8 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை மங்களூர் போலீஸ் கமிஷனர் எஸ்.முருகன் உறுதி செய்தார். பிரசாந்த் கொலை மட்டுமின்றி, சட்டவிரோத கால்நடை கடத்தலிலும் இக்கும்பலுக்கு தொடர்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

 14. Avatar
  paandiyan says:

  திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
  எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
  முருகா…… உன் வேல் தடுக்கும்!

  பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

  திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

  திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

  பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
  பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
  பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
  திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
  சிற்றடியு முற்றிய பனிருதோளும்
  செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
  செப்பென எனக்கருள்கை மறவேனே

  குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
  கடம்ப மலர் மாலையையும்,
  கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
  எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
  அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
  பன்னிரண்டு தோள்களையும்,
  இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

  ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

  திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

  திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

  அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

  பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
  பட்சிந டத்திய குகபூர்வ
  பச்சிம தட்சிண வுத்தர திக்குள
  பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
  சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
  ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
  செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
  சித்தவ நுக்ரக மறவேனே

  அடியவர்களுக்கு அருளும் இறைவனே
  ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
  ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
  அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
  அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
  திருப்புகழை கொஞ்சமாவது நானும்
  சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
  வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

  இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

  சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

  ”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

  திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

  இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

  திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

  1. முத்தைத் தரு பத்தித் திருநகை
  2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

  அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

  நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

  1. Avatar
   ஷாலி says:

   paandiyan says //நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.//

   “திருப்புகழ் தோன்றிய வரலாறு”- பாண்டியனின் ஈயடிச்சான் காப்பி பேஸ்டை முழுமையாக கீழ்க்கண்ட தளத்தில் காணலாம்.
   https://www.facebook.com/permalink.php?story_fbid=760753617372733&id=666930403421722&substory_index=0

 15. Avatar
  paandiyan says:

  ஒருமுறை வள்ளலார் இடத்திற்கு பெரியார் சென்றார். உள்ளே சென்ற போது ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றுவிட்டார். உடன் வந்தவர்கள், என்ன நின்றுவிட்டீர்கள்? என்று கேட்டனர்.

  ‘புலால் உண்பவர்கள், இந்த எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம் என்று இருக்கிறது. எனக்கு புலால் உண்ணும் பழக்கம் உண்டு. எனவே இந்த எல்லை தாண்டி வரமாட்டேன்’ என்றுசொல்லி நின்று விட்டார். உடன் வந்தவர்கள், இந்த விதிமுறை உங்களுக்குப் பொருந்தாது. உங்களுக்கு விதிவிலக்கு உண்டு. உள்ளே வருக! என்றனர். ஒரு இடத்திற்கு வந்துவிட்டால், அந்த இடத்தில் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவைகளை மதித்து நடக்க வேண்டும் என்றுக்கூறி உள்ளே வர மறுத்து, வந்த வழி திரும்பினார். விதிமுறைகளை மதிக்கும் பண்பாளர் பெரியார்.

 16. Avatar
  paandiyan says:

  “அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும், “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

 17. Avatar
  paandiyan says:

  //அமெரிக்காவில் உள்ள தனது பேரனை பார்க்க சென்ற இந்தியர் சுரேஷ்பாய் படேல் மீது அலபாமா போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பது அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  ஆங்கிலத்தில் சரியாக பேசவராததினால், போலீசார் இவர் மீது தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

  should AR Ragman, Arandahi roy return their rewards? why not? any comments?

 18. Avatar
  ஷாலி says:

  Paandiyan says-//should AR Ragman, Arandahi roy return their rewards? why not? any comments?//

  இதற்க்கு கமண்ட்ஸ்ம் உண்டு கண்டனமும் உண்டு.இன்றைய தமிழ் இந்து நாளிதழில் படித்த செய்தி.

  “ மத ரீதியாக மக்களை பிளவு படுத்துவது அணு குண்டை விட ஆபத்தானது” –குடியரசு தலைவருக்கு விஞ்ஞானிகள் கடிதம்.

  சென்னை கணித அறிவியல் நிறுவனம்,டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலை கழகம்,மற்றும் ஐஐடிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில் அவர்கள் கூறியுள்ளதாவது.
  மத ரீதியான வெறுப்புணர்வை வளர்த்து,மக்களை பிளவு படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன.சகிப்புத்தன்மைக்கு எதிரான இந்த நிகழ்வுகள் காரணமாக அப்பாவி பொதுமக்களும் பகுத்தறிவாளர்களும் படுகொலை செய்யப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.பன்முக கலாச்சாரமும் சிறப்பும்,பெருமையும் கொண்ட நமது நாடு, இது போன்ற சம்பவங்கள் காரணமாக பின் நோக்கித் தள்ளப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
  நமது நாட்டில் ஏராளமான சமூகங்கள், பழக்க வழக்கங்கள் இருந்தபோதிலும் அவற்றுக்கு உரிய இடமும் மதிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடனும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.எல்லாத் தரப்பு மக்களின் நம்பிக்கைகளையும் கொண்டாடும் திருவிழாக்களும் பண்டிகைகளும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

  பல்வேறுவகைபட்ட மக்களின் சமூக,கலாச்சார இழைகள் பின்னிப்பிணைந்து உருவாக்கியுள்ள ஒற்றுமையுணர்வுதான், நமது நாட்டின் நாகரிக சிறப்புக்கு பெரும் வலிமையை தந்து கொண்டிருக்கிறது.இந்த பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் சில மத வெறியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளால் தற்போது ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது.மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.மத ரீதியாக பிளவுபட்ட சமூகம் என்பது அணுகுண்டை விடவும் நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.

  மாட்டிறைச்சி உண்பவர்கள்,மூட நம்பிக்கையை எதிர்ப்பவர்கள்,தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டவேண்டும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை அரசு மேற்க்கொள்ளவீண்டும்.

  இந்தச் சூழலில் எல்லோரது நம்பிக்கைக்கும் மதிப்பளித்து சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்த வேண்டுகோள் மகிழ்ச்சி அளிக்கிறது.தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தாங்கள் மேலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
  -தமிழ் இந்து,29-அக்டோபர்.2015.p-16.

 19. Avatar
  ஷாலி says:

  க்ருஷ்ணகுமார் says -//அரசியல் சாஸனத்தையே மறைமுகமாக இழிவு செய்யும் கருத்துக்களை…….அடக்கிய வ்யாசம் இந்த வ்யாசம்.//

  அடடா! என்ன கொடுமையிது கிருஷ்ணா? க்ருஷ்ணஜி அரசியல் சாசனத்தை பொழிவு செய்வதை பார்க்கும் போது புல்லரிக்கிறது.அதெல்லாம் சரிதாங்காணும்…ஆனால் உங்க தலைவர் சர்சாலக்சங் அப்படி மதிக்கிறமாதிரி தெரியலையே!

  இந்தியாவில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று ஏன் அழைப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகதவ் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
  ஒடிஷாவில் நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசுகையில், ஜெர்மனியில் வாழ்வோரை ஜெர்மானியர்கள் என்று அழைக்கிறார்கள். இங்கிலாந்தில் வாழ்வோரை இங்கிலாந்து நாட்டவர் என்று அழைக்கும் போது இந்துஸ்தானத்தில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று அழைப்பதில்லையே என்று கூறியிருந்தார்.
  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தை முதலில் படிக்க வேண்டும். இந்தியா என்பது பல கலாசாரங்களைக் கொண்ட நாடு. இந்தியா அல்லது பாரத் என்றுதான் அரசியல் சாசனம் இந்த நாட்டை குறிப்பிடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
  இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும், இந்தியா ஒன்றும் இந்துத்துவா கருத்தியலை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படியான கருத்துகள் மக்களை பிளவுபடுத்தவே செய்யும். இத்தகைய கருத்துகளைப் பரப்புவதை ஆர்.எஸ்.எஸ். கைவிட வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தையும் வரலாறையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். தாங்கள் நினைக்கிற வரலாற்றையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எழுதிவிட முடியாது என்றார்.
  நம்ம க்ருஷ்ணகுமாருக்கு நம்ம அரசியல் சாசனத்தை மதிக்கத்தெரிந்த அளவுக்கு அவர் தலைவருக்குத் தெரியவில்லை.

  குமாரண்ணே! மொதல்லே தலிவர திருத்திப்புட்டு அப்புறமா அம்மணிகிட்ட வாங்க…சரியா…

 20. Avatar
  ஷாலி says:

  // பிற மதத்தினரின் உணவுப்பழக்கத்தி லெல்லாம் தலையிட்டுக் கலகம் செய்யும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மாட்டிறைச்சி சாப்பிட்டால் தப்பு. ஆட்டிறைச்சி சாப்பிடலமாமா?//

  மாட்டிறைச்சி சாப்பிடுவது எந்த மதத்திலும் தவறு என்று சொல்லப்படவே இல்லை.வேத கால இந்து யாகங்களில் பசுவதை சாதாரணமான ஒன்று.”தெய்வத்தின் குரல்”
  பெரியவாள் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறும் அருள் வாக்கை பாருங்கள்.

  “ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ‘நிரூட பசுபந்தம் ‘ எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.
  ‘கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.
  மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவ ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும்.
  தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்.- ஜீவஹிம்ஸை செய்யலாமா ?
  http://www.kamakoti.org/tamil/Kural39.htm

  1. Avatar
   paandiyan says:

   நடை பெற்றது BJP இல்லாத மாநிலம் . ஊழலும் குறைவில்லாத மாநிலம் அது தவிர இதுவும் !!
   பெங்களூர்: பசுவதைக்கு எதிராக முனைப்பு காட்டிய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள மூடுபித்ரியில் கொலை செய்யப்பட்டிருந்தார். அக்கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசுமாடுகள் வெட்டப்படுகின்றன. கேரளாவுக்கு அவை கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் பூஜாரி (29). இவர் கடந்த 9ம் தேதி பைக்கில் வந்த ஒரு கும்பலால் மூடுபித்ரி பகுதியில், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
   முகமது ஷெரிப், முஸ்தபா கவூர், முகமது முஸ்தபா, கபீர், முகமது ஹனீப், முகமது இலியாஸ், இப்ராகிம் லியாகத் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய, 8 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை மங்களூர் போலீஸ் கமிஷனர் எஸ்.முருகன் உறுதி செய்தார். பிரசாந்த் கொலை மட்டுமின்றி, சட்டவிரோத கால்நடை கடத்தலிலும் இக்கும்பலுக்கு தொடர்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

 21. Avatar
  ஷாலி says:

  paandiyan says: //“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, …….என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவ வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?ர் //

  திரு.பாண்டியனின் கேள்விக்கு அய்யர்களுக்கே பெரியவாள், காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ.சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குறளுக்கு விளக்கமளிக்கிறார்.

  அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன்
  உயிர்செகுத் துண்ணாமை நன்று

  என்று திருக்குறளில் ஒரு செய்யுள் இருக்கிறது. ஹவிஸை அக்கினியில் ஆஹூதி பண்ணி ஆயிரம் யக்ஞம் பண்ணுவதைக் காட்டிலும், ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமல் இருக்கிறது நல்லதென்பது இதன் அர்த்தம். இப்படிச் சொன்னதால், திருவள்ளுவர் யக்ஞத்தை நிந்திக்கிறார் என்று அர்த்தமாகாது.
  தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? கொலைகாரனுக்குத் தூக்குத்தண்டனையை சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்படி, லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்கு பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை.

  ஆயிரம் யக்ஞத்தைக் காட்டிலும், ஒரு பிராணியை ஹிம்ஸை பண்ணாமல் இருப்பது நல்லது என்பதால் யாகத்தைத் திருவள்ளுவர் நிந்தித்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். மற்ற யக்ஞங்கள் ஆயிரத்தைவிட, ஒரு அச்வமேத யாகம் செய்வது உயர்ந்தது என்று மனுவே ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். ஆயிரம் அச்வமேதத்தைவிட ஒரு ஸத்யம் உயர்ந்தது என்றும் மனு சொல்கிறார். ஒன்றைவிட ஒன்று உசத்தி என்றால், எல்லாமே உசத்திதான்! யக்ஞம் பாபமாக இருந்தால், ஆயிரம் பாபத்தைக் காட்டிலும் ஒரு புண்ணியம் உத்கிருஷ்டமானது [உயர்வானது] என்று சொல்லுவார்களா? 100 ஏகாதசி உபவாஸத்தைவிட ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டமானது என்று சொல்லலாம். 100 கசாப்புக் கடைகள் வைப்பதைக் காட்டிலும், ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டம் என்று சொல்லுவார்களா? புண்ணிய கர்மாக்களுள்தான் இதைவிட இது உத்கிருஷ்டமானது என்று சொல்லுவார்கள்.

  சாந்தோக்யோபநிஷத்தின் முடிவில், அஹிம்ஸையைச் சிறப்பிக்கும்போதுகூட, “அன்யத்ர தீர்த்தேப்ய:” என்ற விதிவிலக்குச் சொல்லியிருக்கிறது. அதாவது, வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களைத் தவிர, மற்ற இடங்களில் அஹிம்ஸையை அநுஷ்டிக்க வேண்டும் என்று அர்த்தம்.
  யக்ஞம், யுத்தம், நீதிப்படி தண்டனை தருவது முதலிய இடங்களில் ஹிம்ஸை என்று நினைக்கக் கூடாது.

  யக்ஞத்தைவிட அஹிம்ஸை சிரேஷ்டமென்றால், “யக்ஞமும் சிரேஷ்டந்தான்; அதைவிட அஹிம்ஸை சிரேஷ்டம்” என்றுதான் அர்த்தமாகும். ஆயிரம் யக்ஞங்கள் மிகவும் உயர்வானவை; அவைகளிலும் அஹிம்ஸை உயர்வானது என்ற அர்த்தத்தில்தான் அந்தக் குறள் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் இந்தக் குறள் துறவற இயலில் சொல்லப்பட்டிருகிறது. ‘கிருஹஸ்தன் ஆயிரம் யக்ஞங்களைச் செய்வதைக் காட்டிலும், ஸந்நியாஸி ஒரு பிராணிக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பது நல்லது’ என்ற அபிப்ராயத்தில் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறார்.
  சாஸ்திரப்படியும் துறவிக்கு யக்ஞம் செய்யும் அதிகராம் கிடையாது; அவனுக்கே பூர்ண அஹிம்ஸை விதித்திருக்கிறது.
  http://www.kamakoti.org/tamil/Kural39.htm

 22. Avatar
  paandian says:

  குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு ரயிலை தீக்கிரையாக்கி சதிச் செயலில் ஈடுபட்டு கடந்த 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பரூக் டாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.

  கோத்ரா சம்பவத்துக்குப் பிறகும் கோத்ராவிலேயே வசித்து வந்த பரூக் டாண்டியா, 2 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தில், காவல்துறையினரிடம் சிக்காமல் சாமர்த்தியமாக மறைந்து வாழ்ந்துள்ளார்.

  டாண்டியா, தனது தோற்றத்தையும், பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு, ஊரகப் பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து டாண்டியாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

  don’t know how many are going to return awards for this arrest!!!!!!!!!!???????!!!!!

 23. Avatar
  paandiyan says:

  now so called secular people get “HIGH FEVER”
  பசு வதையைத் தடுப்பதற்கும், மாட்டிறைச்சி தொடர்பாக பொறுப்பற்ற முறையில் சிலர் கருத்து தெரிவிப்பதைத் தடுப்பதற்கும் புதிய வலுவான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம் கான் கேட்டுக் கொண்டுள்ளார்

 24. Avatar
  paandiyan says:

  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டபோதும், எழுத்தாளர்களோ, விஞ்ஞானிகளோ, திரைப்படத் துறையினரோ தங்களின் விருதுகளைத் திருப்பியளிக்காதது ஏன்?
  மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே, நாட்டில் மதச் சகிப்புத்தன்மை குறைந்து வருவது போன்ற சூழலை உருவாக்க அரசியல் சதி நடைபெற்று வருகிறது.
  நாட்டில் தேசியவாதம், வளர்ச்சி, சிறப்பான வாழ்க்கை ஆகியவற்றை நோக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை சிலரால் ஜீரணிக்க இயலவில்லை. இதனால் விரக்தியிலும், மக்கள் தங்களை மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்திலும் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
  தாத்ரி சம்பவமும், கன்னட எழுத்தாளர் கலபுர்கி கொலைச் சம்பவமும், பாஜக ஆட்சி அல்லாத உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தவை. இதற்காக அந்தந்த மாநில அரசுகளை கேள்வி கேட்பதற்குப் பதிலாக மோடி தலைமையிலான மத்திய அரசைக் குறை கூறுவது ஏன்?

 25. Avatar
  paandiyan says:

  ஒருதலைபட்சமாக கையாளப்பட்ட இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மீடியாக்களில் மறைக்கப்பட்ட அல்லது வெளிவராத தகவல்கள் என்னென்ன? முதலில் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாத்ரி விவகாரம் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.

  கொலை செய்யப்பட்ட அக்லக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி திருடு போனது. கன்றுக்குட்டியை தேடும் பணியில் ராகுல் இறங்கினார். அப்போது அக்லக்கின் வீட்டின் பின்புறம் கன்றுக்குட்டியின் எலும்புத்துண்டுகள் கிடப்பதை கண்டு, அக்லக்குடன் சண்டை போட்டார். அக்லக் மற்றும் ராகுல் இடையே மோதல் நடைபெற்றபோது, அங்கு வந்த அக்லக்கின் மகன், ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் படுகாயமடைந்த ராகுல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எந்த மீடியா சேனலும் பேசவில்லை.

  அக்லக்-ராகுல் இடையே சண்டை நடந்த விஷயமும், அதனால் ராகுல் தாக்கப்பட்ட விஷயமும் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அக்லக் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் தாக்கியதால் அக்லக் உயிரிழந்த சம்பவம், அடுத்தநாள் மத சாயம் பூசப்பட்டு மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஒரு திருட்டு சம்பவம் மத சாயம் பூசப்பட்டுள்ளதை உணராமல், அரசியல்வாதிகளும் இதில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என குற்றம்சாட்டுக்களை அடுக்கினர். ஆனால், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராகுல் பற்றிய எந்த அரசியல்வாதியும், மீடியாவும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

  : அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது? பாக்.,ல் இருந்த திரும்பி வந்த உடனேயே அக்லக் கார் வாங்கியது எப்படி? அவருக்கு அந்த அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? அக்லக்கிற்கு பாக்., உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? அவர் பாக்.,ல் பயிற்சி பெறவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? அக்லக்கிற்கு பாக்., உடன் இருந்த தொடர்பு பற்றி இதுவரை யாரும் விசாரிக்காதது ஏன்?

  இந்த ஒட்டுமொத்த பிரச்னையும் மத சாயம் பூசப்பட்டு, இந்துக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இந்து-இஸ்லாமியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

 26. Avatar
  sanjay says:

  An one sided view by jyothirlatha girija. This is a typical indian “secularist” view.

  What were these writers doing when emergency was imposed? Did they return the Padma awards which they had received?

  Where were they when the Sikhs were massacred in 1984?

  Have they opened their mouth on the issue of lakhs of Kashmiri pundits livings in slums in delhi?

  In India, if you are anti hindu, you are secular.

 27. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஷாலி

  ஹிந்து மதக்காழ்ப்பை மட்டிலும் குறியாக வைத்து பொய்கள் சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?

  \\ மாட்டிறைச்சி சாப்பிடுவது எந்த மதத்திலும் தவறு என்று சொல்லப்படவே இல்லை.வேத கால இந்து யாகங்களில் பசுவதை சாதாரணமான ஒன்று.”தெய்வத்தின் குரல்”
  பெரியவாள் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கூறும் அருள் வாக்கை பாருங்கள். \\

  அதாவது இதை வாசிக்கும் யாரொருவருக்கும் தாங்கள் பகிர்ந்த இந்த சுட்டியில் காஞ்சி பெரியவர் அவர்களே யாகங்களில் மாடுகளை பலியிட்டதாகச் சொல்வதாகவும்……….மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறில்லை என்று காஞ்சிபெரியவரே சொல்லியுள்ளதாகவும்…………. ஒரு கருத்தை முன் வைக்க விழைகிறீர்கள்.

  அதுவும் எப்படிக்கு?

  உங்களுக்கு நீங்கள் குதர்க்கமாகக் கருதும் கருத்தை முன்வைக்கத் தோதாக எந்தப் பகுதிகளைப் பகிர்ந்தால் மட்டற்ற திரிபுடன் கூடிய ஒரு கருத்தைப் பகிர முடியுமோ அப்படி திரிபான முறையில் கருத்தைப் பகிரும் வண்ணம் வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள்.

  அதே உரலில்………….. அதே காஞ்சி பெரியவர் அவர்கள் ……………. அதே வ்யாசத்தின் ஆரம்பத்தில் …………….சொன்ன விஷயத்தை கீழே பகிருகிறேன்.

  ********************* யக்ஞம் பண்ணுவது பாபமா? புண்ணியமா? மிச்ரமா (இரண்டும் கலந்ததா)? மத்வாசாரியர், ‘பசுவைக் கொன்று யாகம் பண்ணக்கூடாது; மாவால் பசுவின் வபையைப் போல் பண்ணி ஆஹூதி பண்ண வேண்டும்’ என்று கருணையால் ஏற்பாடு பண்ணினார். (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை; எந்தப் பிராணிக்கும் ஸம்ஸ்கிருதத்தில் பசு என்றே பெயர்). ******************

  காஞ்சி பெரியவர் மிக மிகத் தெளிவாக பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. எந்த ப்ராணிக்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பசு என்றே பெயர். என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

  காஞ்சி பெரியவர் ப்ரவசனம் செய்த இந்த குறிப்பிட்ட வ்யாசத்தில் வேத யாகங்களில் *** பசு *** என்ற பெயரில் ***பசுமாடு*** என்று தமிழில் நாம் அறியும் விலங்கினை பலியிட்டதாகவோ சாப்பிட்டதாகவோ சொல்லவே இல்லை.

  காபி பேஸ்ட் செய்வதைக்கூட தவறாகச் சொல்ல மாட்டேன். ஆனால் முதல் பாதியில் மிகத் தெளிவாக **பசு** என்றால் மாடு என்று அர்த்தமில்லை என்று காஞ்சி பெரியவர் சொல்லியதை வேண்டுமென்றே மறைத்து அதன் கீழுள்ளதை மட்டிலும் சாமர்த்யமாக (சாமர்த்யம் இருப்பதாக நினைத்து) பகிர்வது மிக மிக மிகத் தரம் தாழ்ந்த செயற்பாடு.

  வேதங்கள் சொல்லப்படும் விஷயங்களை அறிவதற்கு அதற்குண்டான முனைப்பான கல்வி அவச்யம். ராமக்ருஷ்ண மடம், ஆர்யசமாஜம், ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களுடைய ஆர்ஷவித்யா கேந்த்ரம் என்று பற்பல அமைப்புகள் உலகுளோர் அனைவருக்கும் ஆண் பெண் என்று வித்யாசமன்னியில்………….. ஜாதி, மதம் என்ற வித்யாசங்களன்னியும் கூட………… வேதக் கல்வி கற்பிக்கிறார்கள். உங்களுக்கு உண்மையாலுமே வேதம் சொல்லும் விஷயங்களைப் பற்றி அறிய ஆவலென்றால் முறையாகக் கல்வி கற்றுக் கருத்துப் பகிருங்கள்.

  பொய் சொல்வது எந்த மதத்திலும் தவறானது. நீங்கள் எந்த மதத்தை நம்பினாலும் சரி…………. எந்த மதத்தையும் நம்பாதவரானாலும் சரி………… பொய் சொல்வது மிகவும் தவறு. அதுவும் ஒருவர் சொல்லும் கருத்துக்களை திரித்து சிதைத்து……………. முனைந்து ஒரு பொய்யான கருத்தை…………… பிறிதொருவர் சொல்லியிருக்கிறார் என்று தொனிக்க கருத்துப் பகிர்வது மாபாதகம்.

 28. Avatar
  ஷாலி says:

  //..காஞ்சி பெரியவர் மிக மிகத் தெளிவாக பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. எந்த ப்ராணிக்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பசு என்றே பெயர். என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.//

  காஞ்சி சுவாமிகள் மிகத் தெளிவாகாத்தான் சொல்லியிருக்கிறார்.ஆனால் உங்களுக்குப் புரியாது.

  எந்த ப்ராணிக்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பசு என்றே பெயர். என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்

  //ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு.//

  எல்லா பிராணிகளுக்கும் பசு என்று தான் பெயர் என்றால் கோமாதவையும் சேர்த்துதானே சொல்லியிருக்கிறார்.சரி வேதம் சொல்வதைப்பார்ப்போம்.

  1. கோஸவம். (பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்)
  2. வாயவீய ஸ்வேதபக. (வாயு வேதனைக்காக வெள்ளைப்பசு யாகம்)
  3. லத்ஸோப கரணம். (கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.)
  4. அஷ்டதச பசு விதானம். (பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்)
  5. ஏகாதசீன பசுவிதானம். (பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்)
  6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா. (நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்).
  7. உபாகரண மந்திரம். (யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்).
  8. கவ்ய பசுவிதானம். (பசு மாட்டைக் கொன்று நடத்தும் யாகம்)
  9. ஆதித்ய தேவ தாகபசு. (சூரிய தேவதைக்கு பசு யாகம்)
  -சிவானந்த சரஸ்வதி. ‘மத விசாரணை நூல்.’ பக்கம்-79,80.

  கால்நடைகளை உயிர்ப்பலி தருகிற நடைமுறை ரிக்வேதத்தில் மட்டுமல்லாது பிற்கால வேதநூல்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. கோபத பிராமணம் என்ற நூலில் மட்டும் இருபத்தியொரு யக்ஞங்கள் (வேள்விகள்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரனுக்கு காளையும் (ரிஷபம்) மரூத்களுக்கு (MARUTS) (மனிதர்களாக பிறந்து, தெய்வங்களாக வழிபடப்பட்டவர்கள் ரிக்வேத காலத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்) புள்ளிகள் கொண்ட பசுவும், அஸ்வின்களுக்கு செந்நிற பசுவும் பலி தரப்பட்டன. மித்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கும் பசு பலி தரப்பட்டது. (ஜி.யு.நைட், ‘பிராமணங்களில் உயிர்ப்பலி’ பூனா யுனிவர்சிட்டி, பூனா, 1975, அத்தியாயம் VI. // ஆர்.எஸ்.சர்மா, ‘பொருளாதாய கலாச்சாரம்,’ பக்கம் 119, ஏ.பி.கீத், மேற்சொன்ன நூல் பக்கம், 324-6.)

 29. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஷாலி

  நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த வ்யாசத்தில் பசு என்ற சொல் வரும் எல்லா இடங்களிலும் ***பசுமாடு**** என்று தமிழில் நாம் அறியும் விலங்கினம் பேசப்படுவதில்லை என்பது காஞ்சி பெரியவர் பகிர்ந்த கருத்து.

  காஞ்சி பெரியவர் சொல்லாத கருத்தை சொல்லியதாக பொய் சொல்லிய நீங்கள் மேற்கொண்டு பேச வேண்டியது காஞ்சிபெரியவர் கருத்து தெரிவித்த வ்யாசத்திலிருந்து.

  அங்கு உங்களுடைய பருப்பு வேகாது. அதாவது வால்மீகி ராமாயணத்தில் வண்ணான் கதையை சொன்ன நீங்கள் வால்மீகி ராமாயணத்தை விட்டு ……… அல்லேக்கா வேறு புராணத்துக்கு ஓடிப்போய் விட்டால்……… வால்மீகி ராமாயணம் பற்றி நீங்கள் சொல்லிய பொய்யை மறைத்து விடலாம் என்று நினைத்தது போல.

  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றா நீங்கள் சொல்வீர்கள். மண் மேடே உங்கள் மீது மூடியே விட்டாலும் அப்படி ஏதும் இல்லையே என்று தானே சொல்வீர்கள்.

  நீங்கள் வலிந்து காஞ்சி பெரியவர் சொல்லிய கருத்தை திரித்து பொய் சொல்ல விழையலாம். ஆனால் வாசிப்பவர்கள் நிச்சயமாக புரிந்துகொள்வர்.

 30. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பர் ஷாலி

  அங்கயும் இங்கயும் நகராமல் நீங்கள் உதாஹரித்த காஞ்சி பெரியவர் அவர்களது வ்யாசத்தில் இருந்து மட்டிலும்………நீங்களே முனைந்து திரிக்க விழைந்த உரலில் இருந்து மட்டிலும்………….

  வேத யாகங்களில் ***பசு*** என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தமிழில் நாம் ***பசுமாடு*** என்று அறியும் விலங்கு

  என்று காஞ்சி பெரியவர் எந்த வாசகத்தில் சொல்லியுள்ளார் என்று குறிப்பாக சொல்லுங்கள்.

  அப்படி நீங்கள் குறிப்பாக சுட்ட முடியாவிட்டால் ……… பேசாமல் கூட நீங்கள் அகன்று விடலாம்……… காஞ்சி பெரியவரை முன்னிறுத்தி நீங்கள் சொல்லியதுபொய் என்று வாசகர்கள் அறிந்து கொள்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *