வழியில் போகிறவனும்
வழிப்போக்கனும்
வழியில் போகிற உனக்கு
பாதை குறுகியது.
உன் பார்வையைப் போல .
போவதும்
ஒரு சந்திலிருந்து
இன்னொன்றுக்கு .
குறுகிய வட்டம்
செக்கு மாட்டுச் சுழல் .
திராணியற்ற கால்கள்
நடையின் அனுபவம்
உணர்ந்திறாதவை .
உன் திறத்தால்
(திறத்தின்மையால் ?
அளக்க முயலாதே
வழிப் போக்கனை .
ஊர் விட்டு ஊர்,
நாடு விட்டு நாடு
தேடலில் முழுமை
காணும் கால்கள் –
அவை அவன் கண்கள் .
நீல வானத்தைக்
கிழித்திடும் குருவிகள் ,
அருவி இரைச்சலில்
இசை கேட்கும் செடி, கொடிகள் ,
ஓடும் காவிரியின்
உறவான நதியொன்றின்
கூடவே ஓடும்
கொக்கு.
மரத்திலிருந்து
பகலில் எழுந்து
இறகு விரித்து
எதிரியை அடிக்கும்
கூகை .
தினம் தினம் புதுத் தரிசனங்களில்
மகிழ்ந்து கூத்தாடும்
யோகி அவன் .
வழிப்போக்கன்
முகத்தால் மட்டும்
அளப்பதில்லை மனிதரை.
முகங்களை மறைப்பது
திரைகள் ஆயிரம் .
எனவே
அவன் பேசும் கண்களை
பார்க்கும் வாயை
கேட்கும் நாசியை
மூச்சிழுக்கும் செவியைத்
தீண்டிப் பார்க்கிறான்
உரசித் தடவுகிறான்
சத்திய தரிசனம்
டிக்கட்டுக்கு சிக்குவதல்ல .
எப்போதும் அவனை நீ
சென்றபின் பார்க்கிறாய்.
பின் புறம் அல்ல
முகத்தைக் காண
நேருக்கு நேர்
முன் புறம் போய்த்தான்
சந்திக்க வேண்டும் .
இயலவில்லை உன்னால்
இயலாமையினால் வெதும்புவது
மனித இயற்கை.
எனவே
கற்களை நீயும்,
பீயை உன் நண்பர்களும்
எடுத்து எறிய
ஆசைப் படுவது
தப்பொன்றுமில்லை .
வழிப்போக்கன் போகிறான்
கவலை ஒன்றும் இல்லாமல் .
அவனுக்குப் பின்னும்
அவன் காலடித் தடங்கள்
அவனை நினைவூட்டும் .
வழியில் சந்தித்தவர்கள்
தம் வாழ்நாளில்
நினைவு கூர்வார்கள் .
அவனது உறுதியை
முனைப்பை , வலியைக்
காட்டாது இதழில்
நின்ற புன்னகையை.
வழியில் போகும் நீ
வழிப் போக்கனைக் கண்டு
பொறாமைப் படுவது
தப்பொன்றுமில்லை
வரும் போகும்
எப்போதாவது எட்டிப் பார்த்து
உள்ளே வருகிறது
சந்தோஷம் .
வந்தவுடன் கைகுலுக்க
முயலுமுன்னே
தொடர்ந்து கூடவே இருக்குமா
என்று பயம் .
எப்போதும் இருக்கவேண்டும்
எனும் ஆசை .
போய்விட்டால் ?
என்றொரு கவலை .
தேடி வந்தது
நம்மையா என்று
சந்தேகம் .
எல்லாம் களைந்து கைநீட்ட
வாசல் வழியே போகிறது
வரவேற்பேதும் இல்லையென
வந்திருந்த விருந்தாளி .
——————————————————————————————————————–
T R Natarajan
Bangalore 56077
- அழகுநிலாவின் “ஆறஞ்சு”
- புழுக்களும் மனிதர்களும்
- தொடுவானம் 105. குற்ற உணர்வு
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
- திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு
- காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்
- இரு கவிதைகள்
- திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
- அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
- ‘கலை’ந்தவை
- “கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
- இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
- அடையாளங்களும் அறிகுறிகளும்
- சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்
- கோணங்கள்
- பிரிவின் சொற்கள்
- English translation of Tamil Naaladiyaar
- மகாத்மா காந்தியின் மரணம்