கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் எழுத்தாளர்களின் இவ்வாண்டுத் தொகுப்பு “ டாலர் நகரம் “ நூலை வெளியீட கலாமணி கணேசன் ( தலைவர், சக்தி மகளிர் அறக்கட்டளை ) பெற்றுக்கொண்டார். நாவலாசிரியர் செந்தமிழ்வாணன், பேச்சாளர் பவானி வேலுச்சாமி, பட்டு நடராசு, விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலை வெளியிட்ட சுப்ரபாரதிமணியன் பேச்சில்:
” கனவு இலக்கிய வட்டத்” தின் இத்தொகுப்பு திருப்பூர் நகரின் நிகழ்வுகளையும் சமூக சூழலையும் வெளிப்படுத்தும் விதமாய் படைப்புகளை உண்மையில்தான் அழகு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எந்த வகையான நுகர்வு சூழலாக இருந்தாலும் உண்மை படைப்புகள் என்பது நிகழ்கால தரிசனங்கள் என்பதை உணர்த்தும் படைப்புகள் எப்போதும் வெற்றி பெறும். .ஒவ்வொரு எழுத்தாளனும் சமூகத்தின் அங்கமே.சமூக விளை பொருளே அவன் படைப்புகளும்..அவை சமூக தாக்கத்தால் வந்தவையே. ..மானுட விழுமியங்களுக்கு எதிரான விசயங்களே இன்று நம்மை ஆள்கின்றன. கல்வி என்பது அறிவியலைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. வாழக்கையின் அறவியலைக் கற்றுக் கொடுப்பதும், கடை பிடிக்கச் செய்வதுவுமாகும். பகுத்தறிவு சார்ந்த , தாய்மொழி சார்ந்த கல்வியே ஒரு மனிதனை சமூக அக்கறை கொண்டவனாக்கும். அதற்கு இலக்கியப் படைப்புகளும், இது போன்ற உள்ளூர் படைப்பாளிகளின் அனுபவங்களும் பயன்படும்.
” கனவு இலக்கிய வட்டம் “ ஆண்டுதோறும் திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டுகளில் பருத்திக்காடு, பருத்தி நகரம், பனியன் நகரம் ஆகியத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது கனவு இலக்கிய வட்டம். இவ்வாண்டில் அவ்வாறே ” டாலர் நகரம் “ தொகுப்பு அமைந்திருக்கிறது. இத்தொகுப்பில் சுப்ரபாரதிமணியன், சு.மூர்த்தி,, வழக்கறிஞர் குணசேகரன், ஜோதிஜி, உதயம் பக்தவச்சலம், ஆ. அருணாசலம், கவிஞர் ஜோதி, வெங்குட்டுவன் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன . விலை ரூ70. தற்போது நடந்து வரும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் முக்கிய அரங்குகளில் கிடைக்கும். ( ” டாலர் நகரம் “ தொகுப்பு : திருப்பூர் கனவு இலக்கிய வட்டம் வெளியீடு , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. )
செய்தி : கவிஞர் ஜோதி ( கனவு இலக்கிய வட்டம் )
- அழகுநிலாவின் “ஆறஞ்சு”
- புழுக்களும் மனிதர்களும்
- தொடுவானம் 105. குற்ற உணர்வு
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
- திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு
- காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்
- இரு கவிதைகள்
- திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
- அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
- ‘கலை’ந்தவை
- “கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
- இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
- அடையாளங்களும் அறிகுறிகளும்
- சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்
- கோணங்கள்
- பிரிவின் சொற்கள்
- English translation of Tamil Naaladiyaar
- மகாத்மா காந்தியின் மரணம்