ஆத்மா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 12 in the series 11 செப்டம்பர் 2016

சேலம் எஸ். சிவகுமார்

காலையின் அமைதி –
வெள்ளை மனதில்
நீல மலர்களாய்
நினைவின் சாரலாய்ப்
பொங்கித் ததும்பும்
இன்ப அலைகளாய் !

மாலைச் சூரியன்
மறையும் வரையில்
மாசில் இதயக் கூட்டில்
ஆத்மா
மயங்கிக் கிடக்கும்
பிரிவை நோக்கி !

இரவுத் தாய்மடிக்
குழந்தை நிலவின்
இனிமைச் சிரிப்பு
இருளைக் கிழிக்கும் ;
வளர்ந்த சிரிப்பால்
வானமும் தாரகைக்
கண்கள் சிமிட்டிப்
பூமியைத் தழுவும் !

புன்னகை விரியும்
பொன்னுலகதிலே
புதுப்புதுக் கனவுடன்
இதயம் உறங்கும் ;
புரியாப் பிரிவின்
இடைவெளியதனில்
பிரியினும்,
நாளை இணையும்
ஆத்மா !

Series Navigationதில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்புமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *