பரலோக பரோட்டா !

author
8
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 12 in the series 11 செப்டம்பர் 2016

J.P. தக்சணாமூர்த்தி

porata_126751930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. பசை பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவது தான். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மைதாவில் நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும் மற்றும் செரிமானத்துக்கு பிரச்சனையாக இருக்கும். அதிக அளவு கார்போஹைட்ரேட் ( 100 கிராம் 25% ) இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும், புரதம் ஒரளவு இருக்கிறது மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், போட்டாசியம், மெக்னிஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எனவே இதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்ந்து உண்ணுவது நல்லது ஆனால் குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்த மஞ்சள் நிற மைதாவை வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில் பெராக்சைடு ( BENZORI PER OXIDE ) கலக்கப்படுகிறது.
பென்சாயில் பெராக்சைடு என்றால் என்ன? இது தலைமுடிக்கு அடிக்கும் டையில் பயன்பாடும் ரசாயனம் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்ய பயன்பாடும் பினாயில் மற்றும் பீளிச்சிங் பவுடர்களில் பயன்பாடுகிறது. இந்த ராசாயினம் மாவில் உள்ள புரதம் உடன் சேரந்து நீர்ழிவுக்க காரணியாய் அமைகிறது.
கோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதாவும் கெட்டியாக தான் இருக்கும். கெட்டியாக இருக்கும் மைதாவை மெனமையானதாக மாற்ற அலாக்சான் ( ALLOXAN ) என்ற ரசாயனம் பயன்படுகிறது.
அலாக்சான் என்றால் என்ன? ஆங்கில மருந்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால் விலங்குகளுக்கு அந்நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்து பரிசோதிப்பார்கள். இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை ( β CELLS ) அழித்து விடுகிறது. இவ்வாறு அவற்றுக்கு நோயை வரவழைத்துவிட்டு. சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடீக்கும் ஆய்வு செய்யப்படுகிறது சக்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான். “உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சக்கரை நோய்க்குக் காரணம் என்று நமக்குத் தெரியும் ஆனால் இந்த இன்சுலின் ஏன் குறைந்து போகிறது? இது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை”
மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க டேஸ்ட் மேக்கரிங் என்ற ரசயானம் சேர்க்கப்படுகிறது.
மைதாவில் செய்யும் பரோட்டா வுக்கு சுவை கூட்ட மோனோ சோடியம் குளுட்டோ மேட் (அஜீனா மோட்டோ) சேர்க்கப்படுகிறது. இது முளைத்திசுக்கள் இறக்கவும் பல்வேறு வகை நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகளம் மற்றும் சுவைக்காவும் மணத்திற்காகவும் டால்டா சேர்க்கப்படுகிறது இது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் கொழுப்பாக படியும் பின் ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.
பரேட்டாவுடன் வைக்கப்படும் சேர்வா ( சால்னா ) வுக்கு பயன்படும் கோழி பிராய்லர் கோழி ஆகும். குறிப்பிட்ட நாட்கள் ( 44 முதல் 55 ) மட்டும் உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைத்துள்ள DUQUESNE பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார் ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதன்களுக்கு புற்று நோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன். அதில் 100 கிராம் பிராய்லரில் கோழியில் 23 கிராம் கொழுப்பும் மற்றும் 16 கிராம் புரதம் மட்டும் தான் இருக்கும். பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளனர்.
உடலில் சர்க்கரையை கூட்டும், இருதயக் கோளாறு, கிட்னி பேயிலியர், புற்று நோய், செரிமான கோளாறு, உடல் எடை கூடுதல், மூளைத்திசுக்கள் இறக்கும். இதில் சத்துகள் எதுவும் இல்லை குழுந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டவுக்கு தடை விதித்துள்ளது. இது போன்ற உணவுப் பொருள் உற்பத்தியை அனுமதிக்கக் கூடாது.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்!
J.P. தக்சணாமூர்த்தி

Series Navigationஇயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]சைக்கிள் அங்கிள்
author

Similar Posts

8 Comments

 1. Avatar
  arun says:

  A very good article. But, parota is the number one selling food item in all the hotels that sell parato with other items. To some communities, it is their most preferred food item. Among non-vegetarian eaters, it is the most opted item, if available.Our awareness about some of these dangerous substances is far from satisfaction. Here, in Tamilnadu, everything is getting a colour identity. May be, it is white in colour hence the Tamilians, in general, are very fond of parotas as they are with the white skinned heroines!

 2. Avatar
  meenal devaraajan says:

  பரோட்டா தயாரிக்கும் முறை பலருக்குத் தெரியாது அதனால் ருசிக்காக அதனை விரும்பிச்சாப்பிடுகிறார்கள். தயாரிக்கும் முறை தெரிந்தால் பலர் அதனைச் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள். அத்தனை கொழுப்பு அதற்கு. தாயாரிக்கும் முறை ,1/4 பங்கு எண்ணெய், அல்லது (டால்டா இது எத்துணை கெடுதல் செய்யும் என்பது வேறு விஷயம்) 3/4 பங்கு மாவு சிறிது உப்பு, சீனி சிறிது வேண்டிய அளவு தண்ணீர் அத்துடன் முட்டை ஒன்று நல்லா சாப்பிடலாமா?

 3. Avatar
  smitha says:

  Well researched article.

  Recently even color barotas are being sold. It is cheap & tasty & so is consumed more by lower income groups & college students.

  Pizza is the upper class equivalent of barota.

  1. Avatar
   BSV says:

   சுவை எல்லாரையும் இழுக்கும். பாட்டாளி வர்க்கத்தை மட்டும் என்றில்லாமல். ஆனால், மலிவு விலையோ பாட்டாளி வர்க்கத்தைச் சுண்டி இழுக்கும். நிறமுடைய பரோட்டாவை பார்தத்தில்லை. படம் போடலாமே இங்கே? அப்பரோட்டா மலிவு விலைக்குக் கிடைக்கும் போல. ஆனால் நான் சுட்டிக்காட்டிய விருதுநகர், மதுரை, தூத்துக்குடி (மூன்றிற்கும் சிறிது வேறுபாடுண்டு). தூத்துக்குடியில் கொத்துப்பரோட்டா கிடைப்பதில்லை. இவ்வூர்களில் பரோட்டா ஒரு டெலிகசியே. (அன்றாடம் சாப்பிட முடியாவுணவு). அதாவது பாட்டாளி வர்க்கம் அடிக்கடி போய்ச்சாப்பிடும் அளவுக்கு மலிவன்று.
   இரு பரோட்டாக்கள், அசைவ துணையுணவுடன், உருபா 100. பாட்டாளி வர்க்கத்தில் நாட்கூலி உருபா 300 (அதாவது ஏட்டில்) கையில் கொடுப்பது இருநூற்றுக்குமுள். பெண் உழைப்பாளி என்றால் வெறும் நூறே. உழைப்பு ஒன்றே. கூலி ஆண்-பெண் பேதம் பார்த்தே வழங்கப்படும். இவர்கள் எப்படி அடிக்கடி 100 உருபா கொடுத்துச் சாப்பிட முடியும்? பண்டிகை நாட்களில் இவர்கள் நைட்கள்ப்களில் சாப்பிடுவதைப்பார்க்கலாம். ( எலே இங்கிட்டு வா. காலி கிடக்கு.) நேற்றிரவு பார்த்திருக்கலாமே இசுலாமிய பாட்டாளி வர்க்கம் பரோட்டா அடிப்பதை. பண்டிகை நாளல்லவா! (அடிப்பது = சுவைத்து ஆசையாகச் சாப்பிடுவது. தூத்துக்குடி வட்டார வழக்கு)

   மக்கள் உணவும் ஓர் அரசியலே எனப்தை மணிகண்டன் நம் பொட்டில் அறைந்தாற்போல் ‘காக்கா முட்டை” திரப்படத்தில் காட்டினார். நானும் சுட்டிக்காட்டியிருக்கிறேனல்லவா? அதாவது இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஞ்ஞான உண்மைகள் வெளித்தெரியாதபடி பார்த்துக்கொள்வதே அவ்வரசியலாம்.

   கட்டுரைப்பொருளுக்குப் பொருந்தா செய்தி: மதுரையில் பரோட்டாத் தட்டும் (பரோட்டா மாஸ்டர்) வேலை பார்த்த வீரபாண்டியன், ஓர் அதிசயம் உருவாக்கினார். பரோட்டாக்கடையின் திறப்பு நேரம் நன்கு உதவியது. (அதாவது பகலில் பள்ளி, இரவு 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணிவரை பரோட்டா மாஸ்டர்) மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பூகோளப்பாடத்தில் மாநிலத்தில் முதல்வனாகத் தேர்ச்சி. இதையறிந்த அன்றைய மதுரை ஆட்சியர் வீர்பாண்டியனிடம் இ.ஆ.ப தேர்வு எழுதுவாய் என ஊக்கம் கொடுக்க, வீரபாண்டியன், சென்னை சென்று இலயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவுடன் தமிழக‌ அரசு நடாத்தும் இ.ஆ.ப தேர்வு பயிற்சி பெற்றார். இன்று ஆந்திராவில் இ.ஆ.ப. பரோட்டா நன்மையும் செய்யும் போல :-)

 4. Avatar
  BSV says:

  நல்ல செய்திகளைக்கொண்ட பதிவு.

  தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் பரோட்டா பேசப்படுபவை; வெறும் பரோட்டாவை வைத்து இவை பிரப்லமாக இல்லை. வெறும் சால்னா (plain gravy) கொடுத்தால் மட்டுமே எவரும் சாப்பிடுவதில்லை. இதனுடன் கொடுக்கப்படும் விதவிதமான அசைவ உணவு (சிக்கன், மட்டன்) பரோட்டா உணவை விரும்ப வைக்கிறது. விலை இப்போது அதிகம். இப்பதிவில் சொல்லப்பட்டவைகளைத் தமிழ்நாட்டில் தெரிவொண்ணாதபடி பார்த்துக்கொள்வார்கள். வியாபாரிகளும் அர்சியல்வாதிகளும்.

  எனக்கு இந்தத்தடை விவகாரமே பிடிக்காது. குழந்தைகளாக வந்து சாப்பிடுகின்றன நைட்க்ள்ப்பில்? (தூத்துக்குடியில் பரோட்டாக்கடைகளுக்கு நைட்க்ளப் என்று பெயர். மாலை 6 மணியிலிருந்து இரவு 1 மணிவரையே திறந்திருபதால்)

  இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடலாம். ஆனால் பரோட்டாவைத் தடை செய்யக்கூடாது. கேரளா வரவர அராஜக நாடாக மாறிவருகிறது. தெரிந்தும் குழிக்குள் விழும் பெரியவர்களைத் தடுத்து நேரவிரயம் செய்வதைவிட குழநதைகளுக்குப் பாடநூலில் சொல்லிவிட்டால் போதும்.

  எனினும், இச்செய்திகளை அறிந்த பெற்றோர் சிறுவயதில் குழந்தைகளுக்கு பரோட்டாவை அறிமுகப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளவும். சிறுவயது அறிமுகம் பிடித்துக்கொள்ளும். பரோட்டா வாங்கித்தா வாங்கித்தா என்று கரைச்சல் படுத்துவான்.

  1. Avatar
   பொன்.முத்துக்குமார் says:

   பாட நூலில் சொல்வதையெல்லாம் நம் குழந்தைகள் அப்படியே கடைபிடித்துவிட்டால் … அடடா எப்படி இருக்கும் ?

   1. Avatar
    BSV says:

    மருத்துவர்களுக்கு நோயாளிகள் கிடைக்க மாட்டார்கள். மருத்துவ படிப்பு முடித்த பின், பி பி ஓ வேலை கூட கிடைக்காமல் திண்டாடுவார்கள். மெட்ராசில மிக்சியை வீடுவீடாகக் கொண்டு போய்க் காட்டும் சேல்ஸ் மேன் வேலை செய்து விட்டு, கிராமத்தில் இருக்கும் அப்பா, அம்மாவுக்கு நான் இங்கே ஒரு ஆசுபத்திரியில் வேலை பார்ப்பேன் என்று பொய் சொல்வான். (தற்போது அதைச்செய்துவருவது பொறியாளர்கள் பலர்) வக்கீல்கள் பாடும் திண்டாட்டம். எல்லாரும்தான் அறம் செய விரும்பு என்று பள்ளியில் படித்ததை நம்பி வாழ அறம் பெருக நாட்டில் அரசியல் அழியும். அரசியல் எல்லாருமே மஹாத்மா. காவேரி பிர்ச்சினையில்லை. முல்லைப்பெரியாரில்லை. எல்லாரும் பாதுகாப்பாக பேருந்தில் வீடு போய் நேர்த்தோடு சேர்வார்கள். பயப்படாமல் மாட்டுக்கறி சாலனாவை, தூத்துக்குடி ப்ரோட்டாவில் சேர்த்து அடிப்பார்கள்.

    மொத்தத்தில் எனக்கும் வேலை இல்லை. அதாவது மாரலிஸ்ட் தேவையில்லை அப்புறம் கோயில், மசூதி, சர்செல்லாம் எதற்கு? மூடிப்போடுவார்கள் ஆளில்லை. நாம் குற்றம் செய்யசெய்ய எல்லாச்ச்சாமிக்கும் செம‌ கொண்டாட்டம். கோயிலுக்கு வருவான். உண்டியலில் சேருமல்லவா? எனவே எல்லாருக்குமே வேலை வாய்ப்பு நல்க, பள்ளிப்பாட நூற்களில் சொன்னதை நம்பாமல் வாழ வேண்டும்.

    Be good. Be good. But be not too good.

 5. Avatar
  Dr.G.Johnson says:

  A very well written article on the popular parota which is being consumed by not only Indians but also the various races of South East Asia. If the ingredients of parota is made up of such toxic elements, ( provided it is proved scientifically ) then the health authorities ( including the WHO ) should take steps to educate the public about these harmful effects of consuming parota regularly. Anyway congratulations to J.P.Thakshanaamoorthy for this enlightening article….Dr. G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *