வெளிச்சளிச்சம்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 7 of 15 in the series 23 அக்டோபர் 2016

நந்தாகுமாரன்

வெளிச்சளிச்சம் (lighght)velich1

 

அரம் சரோயன் (Aram Saroyan) என்ற அமெரிக்க கவிஞரின் மேற்படி கவிதை (ஆமாம் இது கவிதை தான் … எந்த எழுத்துப் பிழையும் இல்லை … நம்புங்கள்) 1965-இல் அமெரிக்க இலக்கிய திரட்டு (The American Literary Anthology) எனும் நூலில் வெளியானதும், காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சிகள் ஒன்றாகப் பூசல் பூத்தனர். காரணம் அதற்கு 750 டாலர்கள் சரோயனுக்குக் கொடுக்கப்பட்டது (இக்கவிதை முதலில் வெளியான சிக்காகோ ரெவ்யூ 250 டாலர்களை எடுத்துக் கொண்டு மீதியை சரோயனுக்குக் கொடுத்தது). அன்றைய மதிப்பின்படி ஏறக்குறைய 5000 ரூபாய் (ஒரு எழுத்துக்கு 750 ரூபாய்). ஏன்யா வரியைக் (tax) குறைக்கச் சொன்னா குறைக்க மாட்டீங்க, ஆனால் இம்மாதிரி ஒரு அபத்தத்தை கவிதைன்னு சொல்லி பணம் தருவீங்களா என ஆரம்பித்தது சண்டை. அந்தத் திரட்டை வெளியிட்ட ‘கலைகளுக்கான தேசிய மானிய மசோதா’ எனும் அரசாங்க அமைப்பு (National Endowment for the Arts) நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது.

 

இப்படிப்பட்ட கவிதைகளை (அட ஆமாங்க கவிதை தான்) படிக்கக்கூடாது பார்க்க வேண்டும் என்றார் சரயோன். இதற்கு என்று ஒரு வாசிப்பு முறை கிடையாது, இதைக் கவிதையாக அல்லாமல் ஒரு ஒளிப்படமாக அணுகிப் பாருங்கள் என்றார். ‘போய்யா பம்மாத்து’, என்றார்கள் பலர். சரோயன் கவலைப்படாமல் தன் அடுத்த கவிதையை எழுதினார் …

 

eyeye

 

இதை விடப் பிரமாதமான இன்னொரு கவிதையும் உண்டு … அதை எழுதக் கூட முடியாது வரையத்தான் வேண்டும் …

velich

 

இது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. ‘ம்’ என்று தமிழாக்கம் செய்யலாம். இவரின் முழுமையான குறைந்தபட்ச கவிதைகள் (Complete Minimal Poems) எனும் கவிதைத் திரட்டு ஆயிரம் ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது.

 

 – நந்தாகுமாரன்

Series Navigationதொடுவானம் 141.நான் கொன்ற காதல் …சோப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *