மௌனம் பேசுமா !

This entry is part 9 of 17 in the series 13 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன்.

மூடிக் கிடக்கும் வனங்களில்தான்
எத்தனை உண்மைகள் !
அமைதியாக நெளிந்து செல்லும்
செம்மண் பாம்புகள்
பெரிய குடத்தை ஏந்தி செல்லும்
அக்காமார் நத்தைகள்
பலவண்ண படமாய் நெளியும்
சின்ன அட்டை பூச்சிகள்
வெளவால் குருவிகள்
கொளசிக பட்சிகள்
மூக்கு திரிஞ்சான்கள்
தலைகீழ் விகிதங்களாய்
வெளவால் குடும்பங்கள்1
செவந்தி மலரில்
கால் பதிக்கும்
வண்ணத்து பூச்சிகள்!
பாடித் திரியும்
தேனீக்கள்.

ஊர்வலமாய் பாடித் திரியும்
ஊசித் தும்பிகள்!

செவ்வாய் நாரைகள்
ஓடையில் நீந்தும் களவாய் மீன்கள்
சுகித்து மகிழும் மணிப்புறா குடும்பங்கள்!

மனித வாடை படமால்
கொட்டிக்கிடக்கும்
தேன் மலர் குவியல்கள்.

எங்கும் அமைதி !
எங்கும் அமைதி!
புத்தம் சரணம்,
புத்தம் சரணம் !

இரா. ஜெயானந்தன்.

Series NavigationA Lecture in Remembrance of MSS Pandian 10th November 2016ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *