கியூபாவின் பொருளாதாரம்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 10 of 23 in the series 27 நவம்பர் 2016

cuba-famineகியூப அமைப்பு சோவியத் மாதிரியில் உருவாக்கப்பட்ட ‘திட்டமிட்ட பொருளாதார’ வகையைச்சேர்ந்தது. அரசாங்கமே எல்லா தொழில்களுக்கும் சொந்தக்காரர். எல்லோரும் அரசாங்கத்துக்கே வேலை செய்கிறார்கள். பெருத்த சீர்குலைவுக்கும் தட்டுப்பாட்டுக்கும் பிறகு, சமீபத்தில் தனியார் மயப் பொருளாதார இயக்கம் ஆரம்பித்துள்ளது.

2006ல் அரசாங்கத்துக்கு வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 78 சதவிகிதமாகவும் தனியார்துறையில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 22 சதவிகிதமாகவும் இருக்கிறது. (1981ல் அரசாங்கத்துக்கு வேலை செய்தவர்கள் எண்ணிக்கை 91.8 சதம். தனியார் 8.2 சதம்).

பொருட்களின் விலை நிர்ணயம் அரசாங்கமேசெய்கிறது. தொழில் முதலீட்டுக்குஅரசாங்கம்அனுமதி அளிக்கவேண்டும். தனியார் நிறுவனம் ஒரு உழைப்பாளரை வேலையில் சேர்க்கவேண்டுமென்றால், அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கவேண்டும். அரசாங்கம் அந்த உழைப்பாளருக்குப் பணம் கொடுக்கும். அரசாங்கத்தின் அனுமதி இன்றி யாரும் வேலை மாறமுடியாது.

2005ல் ஒரு சராசரி உழைப்பாளரின் சம்பளம் 334 பீஸோக்கள். (அதாவது 680 இந்திய ரூபாய்கள்) கியூபாவின் பொருளாதாரம் சோவியத் காலத்தில் வெகுவாக சோவியத் நாட்டையே நம்பி இருந்தது. சோவியத் அரசு கியூபாவுக்கு மானியமாக தானியங்களும் பணமும் அளித்து வந்தது. ஈடாக கியூபாவின் ஏற்றுமதிப் பொருட்களை வாங்கிக்கொண்டது. சோவியத்யூனியன் உடைவதற்கு முன்னரே இந்த மானியங்கள் நின்றுவிட்டன. இது வெகுவேகமாக கியூபாவை பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியது. இந்தக் காலகட்டம் ‘விசேஷ காலகட்டம்’ (special period) என்று அழைக்கப்பட்டது. 1991ல் ஆரம்பித்த இந்தக் காலகட்டத்தில் உற்பத்தி 34 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை 80 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தன. இதனால், பஞ்சம் ஏற்படவில்லை என்றாலும் புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில்கூட இல்லாத தினசரி பட்டினி அதிகரித்தது. ஆனால், இதனை பஞ்சம் என்றும், பட்டினியால் ஏராளமானவர்கள் இறந்தார்கள் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான கியூப மக்கள் பசி தாங்காமல் கியூபாவை விட்டு ஓடினார்கள். கடல் வழியே ஓடுகையில் பலர் மூழ்கியும் சுறாக்களால் கொல்லப்பட்டும் மடிந்தார்கள். தெருக்களில் இருந்த பூனைகள், மிருகக்காட்சி சாலையில் இருந்த விலங்குகள் போன்றவையும் தின்னப்பட்டன. இதனால், பசுக் கொலை தடுப்புச் சட்டத்தை கியூபா உருவாக்கியது. கியூபாவில் மனிதனைக் கொன்றால் கிடைக்கும் தண்டனையைவிட அதிக தண்டனை பசுவைக் கொன்றால் அளிக்கப்படுகிறது. பசுவைக் கொன்று தின்பவர்களுக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மனிதரைக் கொன்றால் 8 வருட சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. இதே நேரத்தில் அமெரிக்கா தனது கட்டுப்பாடுகளை அதிகரித்தது. இதனால், கியூபா சுற்றுலாத்துறை மூலம் அன்னியச் செலாவணி பணத்தைப் பெற ஐரோப்பிய,தென் அமெரிக்க நாடுகளை அணுகியது. சுற்றுலாத்துறையால் கியூபா தப்பித்தது என்றால் மிகையாகாது. சுற்றுலாவுக்காகத் தனி கடற்கரை விடுதிகள் உருவாக்கப்பட்டன. 2008ல் ரவுல் காஸ்ட்ரோ கம்யூனிஸ விவசாய உற்பத்தியைக் கிண்டல்செய்தார்.

இப்போதும் 80 சதவிகித உணவு கியூபாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. பாட்டிஸ்டா காலத்திலும் அதற்கு முன்பும் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாக கியூபா இருந்தது. தற்போது கியூபாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது முதன்மையாக சர்க்கரையும் நிக்கல் உலோகமுமே. பெரும் சர்க்கரை உற்பத்தியாளராக இருந்த கியூபாவில் இன்று ஏராளமான சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.

கியூபாவில் இரண்டு பணம் இருக்கிறது. ஒன்று வெளிநாடுகளுடனான வர்த்தகத்துக்கும் சுற்றுலா பயணிகளுக்குமானது. இது ஒரு கியூப பீஸோ ஒரு அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கிறது. ஆனால், கியூபாவுக்குள்ளேயேஇன்னொருஉள்நாட்டுப்பணம் இருக்கிறது. இது 23 அல்லது 24 பீஸோக்கள் ஒரு அமெரிக்க டாலர் அளவுக்கு மதிப்பு கொண்டது. கியூபா தங்கள் நாட்டில் ஒருவருக்கு எவ்வளவு சம்பளம்என்பதைஇங்கேதெரியப்படுத்துகிறது. இது உள்நாட்டு பீஸோவில்.

http://www.one.cu/aec2007/esp/07_tabla_cuadro.htm

இதன்படி அதிகபட்ச சம்பளம் 500 பீஸோக்கள். ஒரு டாலர் 23 பீஸோ வீதம் என்றால், சுமார் 20 டாலர்கள் அல்லது ஏறத்தாழ 1000 இந்திய ரூபாய்களே மாதவருமானம்.ஆனால், கியூபாவின் per capita GDP (நாட்டு உற்பத்தியின் படி ஒரு நபர் வருமானம்) 4850 டாலர்கள். அதாவது மாத சராசரி வருமானம் 15750 இந்திய ரூபாய்கள் இருக்கவேண்டும்.

(இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தியாவின் per capita GDP 1000 டாலர்கள். அதாவது மாதச் சம்பளம் சராசரியாக 3750 ரூபாய். சென்னையில் கடைநிலை ஊழியர் வாங்கும் சம்பளத்தைவிட இது குறைவு. கிராமப்புறங்களில் சராசரி வருமானத்தைவிட இது அதிகம். ஆகவே, கிராமப்புறங்கள், நகர்ப்புறம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் சராசரியான வருமானமாக இது வரும்.ஆனால் கியூபா கணக்கில்இது வரவில்லை.) ஆகவே அவ்வளவு பணமும் எங்கே சென்றது?

உண்மைஎன்னவென்றால், கியூபாவின் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் அரசாங்கமே கொடுக்கிறது என்பதுதான். இந்தியாவில் சம்பளத்தின் மீது வருமானவரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சராசரியாக ஒரு கியூபக் குடிமகன் பெறவேண்டிய 15750 ரூபாயிலிருந்து எல்லாவற்றையும் பிடித்துக்கொண்டு 1000 ரூபாய் மட்டுமே அவருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதே உண்மை.

கியூப அரசாங்கம் வெளியிடும் செய்திகளிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது என்பது தெரிகிறது. மூன்று சதவிகித வங்கிக்கணக்குகளில் 10000 பீஸோக்களுக்கும் அதிகமாக பணம் இருக்கிறது. ஆனால், 66 சதவிகித வங்கிக்கணக்குகளில்200 பீஸோவுக்கும் குறைவாக பணம் இருக்கிறது.

ஆதாரம்:

Growing Economic and Social Disparities in Cuba: Impact and recommendations for Change

http://ctp.iccas.miami.edu/research_studies/cmesalago.pdf

கியூபா சுமார் 13 பில்லியன் டாலர் அளவுக்கு கடனாளியாக இருக்கிறது. இது அதன் GDPயில் 38 சதவிகிதமாகும். ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் அளவுக்கு இறக்குமதியும் 3 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. இதனால் இதன் வெளிப்புறக் கடன் அளவு அதிகரித்து வருகிறது.

(2009 sep வார்த்தை பத்திரிக்கையிலிருந்து)

Series Navigationஸ்மார்ட் போன் இல்லையென்றாலும், சாதாரண போன் மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்கியூபா சுற்றுலாத்துறை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *