குடைவிரித்தல்

This entry is part 11 of 14 in the series 5 மார்ச் 2017
நிலாரவி
ஒரு மழை நாளில்
அவனும் குடை விரித்து நிற்கின்றான்
கருப்பு நிறத்தில்
குடைகளுக்கான எல்லா அடையாளங்களுடன் தானிருந்தது அவனதுகுடை
அதன் முனை
உச்சியை நோக்கி
உயர்ந்து நின்ற மாதிரி இருந்தது
குடைவிரித்த வண்ணமே நிற்கின்றான் அவன்
கடந்து சென்ற
பாதசாரிகளின் கவனம்
சில நொடிகள் களவாடப்பட்டு மீட்க்ப்படுகிறது
அவன் நின்று கொண்டிருந்த
சாலையை கூட நிராகரித்து
செல்கின்றன
சில வாகனங்கள்
சில சந்தேகங்களும்
தயக்கங்களும்
சில கைவிரிப்புக்ளும்
அவனை
நனையவிட்டு நகர்ந்தன
சாலையோரம் குடைபிடித்த
சில கருப்புக் காளான்கள்
நகைத்தன
அப்போது தான்
அது நிகழ்ந்தது
கைளில் கவர்ச்சியாய் மடிக்கபட்ட சில குடைகளுடன்
அவர்  வந்தார்
குடைக்காரன் என்று அவர்
அடையாளம் கற்பிக்ப்பட்டிருந்தார்
அவருக்காக காத்திருந்தவர்கள்
குடைகளை விரித்தபடி
அகல்கிறார்கள்
அவரது கைகளில் எஞ்சியிருந்த
கருப்புக் கைக்குட்டையை
குடையா என்று
விசாரித்தனர் சிலர்
அவனோ அகலாமல்
குடைவிரித்த வண்ணமே காத்துக்கொண்டிருக்கிறான்
தனிமை அவனை முழுவதுமாக நனைத்துக் கொண்டிருந்தது.
நிலாரவி.
Series Navigationஅட கல்யாணமே !அருணகிரிநாதரும் அந்தகனும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *