ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்

This entry is part 11 of 14 in the series 26 மார்ச் 2017

 

பொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில் அவரின் உலகக் குடிமகன் அனுபவத்தை 4 நாடுகளின் மீது செலுத்தி இதில் விளக்கியுள்ளார். ஞான சைமன் சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் அவரின் சிறுகதைத் தன்மையின் “பளீர்” தன்மை பளிச்சிடுகிறது. பல இடங்களில் தெரிகிறது, பல தொன்மைக் கதைகளையும் இதில் விளக்கியுள்ளார்.

 

எரிமலையின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் அனுபவம் பற்றி எழுதி இருக்கும் அவர் அப்படி பல முறை அதே அனுபவங்களைப் பெற்று சிரமப்பட்டிருக்கிறார். இது மூக்குக் கண்ணாடியைத் தொலைத்து விடுவதில் துவங்கி விடுகிறது. பிறகு பல இடங்களில் குளிரின் தீவிரம் உடம்பை அல்லாடச் செய்வது. உச்சமாய் கடவுச் சீட்டு தொலைந்து போன அனுபவங்கள் எரிமலை வாயில் உட்கார்ந்தது போல அன்றி வேறென்ன! வெவ்வேறு வகை உணவை ருசிப்பதை சொல்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தநத நாட்டு பாரம்பரிய உடைகளை அணிய அலைவதில் இருக்கும் சுவாரஸ்யமும் சுவையான உணவு போன்றதே இதில் பதிவாகி உள்ளன, சீன அரசு மன்னர் ஒருவர் தச்சராக இருந்ததை விலக்குபவர் அவரும் ஒரு சிற்பியாகி, சிறந்த தச்சனாகி இந்நூலில் தான் செதுக்கிய விஷயங்களை மட்டும் தேர் ஆக்கி உள்ளார். இதெல்லாம் சீனாவில் நான்கு போத்தல்கள் மீது நாற்காலி / அதன் மீது நான்கு போத்தல்கள் அதன் மீது மற்றொரு நாற்காலி வைத்து விளையாடும் சிறுவனின் கலை போலத்தான். நிறம் ஒரு அடையாளம். ஊதா நிறம் அப்படி பெரிய அடையாளமாகி இருப்பது, பெய்ஜிங் நகர மணியில் சப்தம் 10.12 கி.மீ. வரை கேட்பது போன்ற அபூர்வமான பல நூறு தகவல்களை இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது. பெய்ஜிங்கின் 3000 வருட வரலாறு பற்றி சொல்லும் போதே ஆங்காங்கே சமகால வரலாறுகள் பற்றியும் கோடிடுவது சிறப்பானதாகும். வரலாறுகள் துரோகங்களின் தடங்களாக இருப்பதை இதில் உள்ள பல மெழுகு சிலை படங்கள் காட்டுகின்றன.

 

சீனாவிலிருந்து விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன் கடைத் தெருப் பக்கம் பார்த்த ஒரு குழந்தையை எடுத்துக் கொஞ்சும் புகைப்படமொன்று உள்ளது. அக்குழந்தையைக் கொஞ்சுவது போல் அவர் பயணங்களில் பார்க்கும் இயற்கையான சிறு சிறு ரகசியங்கள், புதிய மனிதர்களை கொண்டாடி மகிழ்வது அவரின் இயல்பைக் காட்டிவிடுகிறது. குழந்தையின் மன இயல்போடு சுதந்திரமாயும் வெகுளித்தனமாயும் பயணங்களைக் கொண்டாடும் இயல்புடையவர் ஞான சைமன் என்பதை அவரின் இந்தப் பயண நூலும் தெளிவாக்குகிறது. – சுப்ரபாரதி மணியன்.

Simon Gnamuthu

Jesi Advertising Services,

N0 25, Jalan 52/1,

Taman Desa Jaya,

Kepong, 52100 Kuala Lumpur.

Book – Seena Mannail – Subra Barathi Review 2017.doc

————————————————————————-

 

Series Navigationதமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …சமையல்காரி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *