அன்புமிக்க திண்ணை வாசகர்களே,
எனது வரலாற்று நாடக நூல் “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகக் காட்சிகள் அனைத்தும் திண்ணை வலையில் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்தவை.
வெளியிட்டவர்:
Dharini Padhippagam
32/79 Gandhi Nagar,
4th Main Road
Adayar, CHENNAI : 600020
TAMIL NADU,
INDIA.
Mobile: 99401 20341
பக்கங்கள் : 400
விலை ரூ. 250
எழிலரசி கிளியோபாத்ரா
[பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++
வயது ஏறினும் வாடாது அவள் மேனி
வழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.
வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!
அவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்,
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலை !
வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
கிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம்! கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள்! அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது! ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள்.
ஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்பினேன்.
சீஸர் & கிளியோபாத்ரா நாடகக் காட்சிகள் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து திண்ணை வலையிதழில் வெளியிடப் பட்டன. முதற்கண் திண்ணை வலை ஆசிரியர்கள் ராஜாராம், துக்காராம் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகத்தில் இடையிடையே அரிய வாய்மொழிகள் வருகின்றன. அவற்றைத் தகுந்த படத்துடன் இணைத்த பெருமை பதிப்பாசிரியர் வையவனைச் சாரும். கிளியோபாத்ரா வரலாற்று நாடகத்தைச் சிறப்பாக வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் அவர்களுக்கு அடுத்து என் நன்றி உரித்தாகுக.
+++++++++++++++++++++
- வேண்டாமே அது
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு
- அனுமன் மகாபாரதம் – 1
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்
- மணல்
- மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்
- வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்
- தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.
- நாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது
- தற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு
- 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
- “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்
- சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்
- ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- மரணம்