வேலூர் மாவட்ட அறிவியல் மையம், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சென்னை, இணைந்து நடத்தும் கோடைக்கால அறிவியல் முகாம் மே’17-2017, அன்று காலை தொடங்கி மே’19-2017 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஸ்ரீ புற்றுமகரிஷி சமூக மருத்துவ சேவா மையத்தின் சார்பில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கோவை அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் அழகர்சாமி ராஜு தொடங்கி வைத்தார். மூலிகை பயன்பாடுகள் குறித்து கிராமப்புற தாவரவியல் வல்லுநர் ப. செல்வம் பேசுகையில் “மாணவர்களுக்கு எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம்” மூலிகை பற்றிய விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ஜி. துரைராஜ் ஞானமுத்து அவர்கள், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய சிறப்புநிலை இயக்குனர் டாக்டர் பி. அய்யம்பெருமாள் அவர்கள், முன்னாள் சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் பி. அன்பு ரோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு இன்றைய நவீன அறிவியல் பற்றி விளக்கிப் பேசினர். மற்றும் டாக்டர். எல். ராஜசேகரன், ஐ. உமாதேவன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். சிறப்பு மூலிகை கண்காட்சி அமைத்து, மாணவர்களுக்கு மூலிகைகளை பற்றிய விளக்கங்களை ஸ்ரீ புற்றுமகரிஷி மைய மருந்து செய் ஆசிரியர் ப. இராஜா விளக்கிக் கூறினார். முத்திரை வைத்தியர் ஆர். மனோகரன், எஸ். ஆனந்த குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் வேலூர் மாவட்ட அறிவியல் மைய உதவி அலுவலர் சி. சதீஷ்குமார் நன்றி கூறினார்.
- நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது
- தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.
- அருணா சுப்ரமணியன் கவிதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
- நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிந்த சாதனையை வானலைகளில் பரவச்செய்த அப்பல்லோ ‘சுந்தா’
- ITHAKA – பாடல் மொழிபெயர்ப்பு
- வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி
- என் உலகத்தில் நீ இல்லை
- கிருஷ்ணா !
- 2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்
- இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]
- Sangam Kalai Vila on Saturday June 10th in Staten Island, NY
- மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்
- மரபிலக்கணங்களில் பெயர்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13