அவள் நிற்பதை நோக்கினேன்

This entry is part 5 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

beetles

பதினேழு வயதுப் பாவை அவள்,

புரியுதா நான் சொல்வது !

ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு !

எப்படி வேறொ ருத்தி யோடு

நடனம் ஆடுவேன்,

அங்கவள் நிற்பதைக் காணும் போது ?

இப்போ தவள் பார்ப்ப தென்னை,

நானும் பார்ப்ப தவளை !

கண்டதும் காத லுற்றேன்,

மற்றவ னோடவள் சேர்ந்தினி

நடனம் புரிவாளா ?

அங்கவள் நடனம் ஆடும் போது, அடடா

பொங்கி எழுமென் இதயம்,

பூரித் தோடும் அறை நெடுவே ! அவள்

கரத்தை என் கரம் பற்றி,

இரவு பூராவும் நடனம் ஆடினோம்,

ஒருவரை ஒருவர்

இறுகக் கட்டிக் கொண்டு;

காதல் கொண்டேன், நானவள் மீது

காலம் கடத்தாது !

வேறொ ருத்தி யோடு இனிநான்

ஆடு வேனோ நடனம் ?

+++++++++++++++++

Series Navigationசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடுESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *