This entry is part 11 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

எஸ்.ஹஸீனா பேகம்.

நான் உன்னை வெறுக்கிறேன்.
நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன்.
புரிகின்றதா
உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன்.
உன்னை ,
உன் சுபாவங்களை,
உன் ரசனைகளை,
உன் இயல்புகளை
உந்தன் விருப்புகளை,
மொத்ததில் உன்னுடையதான
நியாபகங்களை மீக்கொணர்துதரும்
அத்துனை அடையாளங்களையும்
வெறுத்து தொலைக்கிறேன்,
அல்லது தொலைத்திட முயற்சிக்கிறேன்.
மீண்டுமொருமுறை நினைவில்கொள்
உன்னை நான் வெறுக்கிறேன்.
இதில் பிரியங்கலந்த நேசமென்பது துளியளவேனும் இருந்திடவில்லை யென்பதை அறிவாயா.

Series Navigationதொல் தமிழன்பிங்கி என்ற பூனை