எஸ்.ஹஸீனா பேகம்
செங்கீரை பருவத்தின்
இறுதிவேளையில் கற்பிக்கத்துவங்கியிருந்தேன்.
எனது ஒருவாரமுயற்சிகளும்
தோல்வியடைய
”அம்மா” சொல்லவைக்கும்
பணியிணை
தற்காலிக ஒத்திவைப்புக்கு
உடன்படுத்தியிருந்தேன்.
ஒரு பேரிரைச்சல் நிறைந்த மதியபொழுதினில்
சமையலறையின் சாம்ராஜ்யங்களை முடித்துவிட்டு
அழுக்குத்துணிகளுடனான
எனது யுத்தக்களத்தை துவங்கியிருந்த சமயத்தில்
படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டிருந்தவள்
மெல்ல தவழ்ந்து
வீட்டின் கொல்லைப்புறம் வந்து
என் ஈர புடவைத்தலைப்பை பிடித்திழுத்து
எதிர்ப்பார்ப்புகற்ற சூழலில்
அழுகையும் பெருமலுமாக
சப்பாணி பருவத்தினில் துவக்கத்தினில்
மொழிந்திருந்தாள் அவள் தனது முதல் ”அம்மா” வை.
—————————— —————————— ———
பற்றிபிடித்து நடைபழகுகையில்
நெகிழி நாற்காலியும்
உயிர்பெற்றெழும்புகிறது.
உணவருந்தும் வேளைகளில்
காக்கைகளும் பங்காளிகளாகி விடுகின்றன.
சிற்றுண்டிப் பொழுதினில்
ஈக்களும் கண்ணாமூச்சி ஆடத்துவங்குகின்றன.
மொத்தத்தில்
அவளுடைய உலகம்
அழகுகள் கோடியால் லயித்துக்கிடக்கிறது.
எஸ்.ஹஸீனா பேகம்.
- நாணம்
- பெற்றால்தான் தந்தையா
- கவிதைகள்
- பார்வையற்றோர் நன்னல அமைப்பு
- பேச்சுரிமை
- சர்வதேச தற்கொலை-எதிர்ப்பு தினம் – செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில.
- ஆத்மாநாம் விருது
- எட்டு நாள் வாரத்தில் !
- தொடுவானம் 187. கடல் பிரயாணம்
- முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.