|
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
வேறொரு வனிதை எனக்கு ! இப்போது
வேறொரு வனிதை !
உனைத் தவிர வேறொருத்தி
எனக்கில்லையென
நானுரைக் கும்படி செய்தவள் நீ !
ஆனால் மெய்யாக
இன்று முதல்
நானொரு புது நங்கை நாடுகிறேன் !
முட்டாள் இல்லை நான்;
இட்ட மில்லா தவளை நானென்றும்
ஏற்றுக் கொள்வ தில்லை !
வேறொரு வனிதை எனக்கு ! இப்போது
வேறொரு வனிதை !
நான் சந்தித்த நாரீ மணிகள் சிலர் !
எல்லாப் பெண்களை விடவும், மிக்க
இனியவள் அவள் !
இவ்வுலகில் எவளும் செய்ய
இயலாததைச் செய்து காட்டினாள் !
நானுரைப்பேன் !
இன்று முதல் நிறுத்திக் கொள் நீ
என்முன் வருவதை !
ஏனெனில் எனக்கி ருக்கிறாள்
வேறொருத்தி; இப்போது
வேறொருத்தி !
மரிக்கும் வரை எனை நேசிக்கும்
வனிதை அவள் !
இன்ப துன்பங்களில் எப்போதும்
என்னுடனே இருப்பவள் !
உன்னுடன் மகிழ்வாய் வாழ வில்லை
என்று நான் கூற வில்லை !
ஆனால் இன்று முதல்
நானொரு புதிய நங்கையை
நாடி விட்டேன் !
இறுதி வரை எனை நேசிக்கும்
ஒரு பெண்ணை !
+++++++++++++++++++++
- சொற்கள் புகழோடு தோன்றுகின்றன
- மாய உலகம்
- காலைப் புகை!
- ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017
- ஓவியா
- ‘மோகத்தைத் தாண்டி’
- புவியீர்ப்பு விசை
- வேறொரு வனிதை
- உலகத்தமிழ் குறுநாவல் போட்டி
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்
- தொடுவானம் 188. திருமண ஓலை
- புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!
- பூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா ?