ஓவியா

This entry is part 5 of 13 in the series 24 செப்டம்பர் 2017

 

கிராமங்களின்

கோவில் விழாக்களில்

நடைபெறும் துகிலுரி நடனங்களில்

பார்ப்பவர்கள் தங்கள்

ஆடைகளை களைந்து விட்டு

ஆடுவது போன்ற

ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள்.

இந்த விளிம்பு நிலை தான்

“பாம்பும் தடுக்கப்பட்ட பழமும்

உள்ள ஈடன் காடு”.

இந்த உள்ளவியலின்

உள்ளாடைகளை களைந்து எறிய‌

மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா

கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று

மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற‌

ஹேலுசினேஷன்கள் மூலம்

தங்கள் ஹிட் ரேட்டை உயர்த்திக்கொள்ளும்

ஊடக விளையாட்டு இது.

ஆரவ் ஊட்டிய காதல் ரசம்…

அதில் ஓவியாவுக்கு ஏறிய பித்தம்.. என்று

அந்த நிழல்காட்டுக்குள்

ஆயிரம் நிழல்கள்.

நிழல்கள் காதலித்தன.

நிழல்கள் காமுற்றன.

நிழல்கள் தற்கொலை செய்ய துடித்தன..

மனிதன்

ரத்த சதைகளால் பின்னப்பட்ட போதும்

“போலித்தனங்களால்”

உயிர் பிசைந்து உரு  திரட்டப்பட்டிருக்கிறான்..

யோகா செய்தாலும் சரி!

பதஞ்சலியின் சமாதியை அடைந்தாலும் சரி!

அது வெறும் நிழல்.

அதன் உள்ளடக்கத்தை உரித்தபோதும்

அதுவும் நிழல் இழைகளால் தான்

நெய்யப்பட்டிருக்கிறது என்பது

ஒரு ஆழமான உளவியல் உண்மை.

அந்த நெருப்புக்குழம்பை வைத்து

மத்தாப்பு கொளுத்துவதே

ஓவியாவும் பிக் பாஸ்ஸும்!

நம் நிர்வாணத்தை நாமே ரசிப்பது போல்

“ஓ கல்கத்தா” எனும் நாடகம்

இங்கிலாந்தில் ஆண்டுக்கணக்கில்

அரங்கேறிக்கொண்டிருந்தது நாம் அறிவோம் .

தன் இடுப்பு “டப்பியில்”

என்ன வைத்திருக்கிறேன்

என்று தேடத்தொடங்கிய மனிதனின்

பச்சை ரத்த பானங்களே

இந்த நாடகங்கள்.

ரத்தம் கசியும் வரை

அவன் இப்படியே

பிறாண்டிக்கொண்டிருக்கட்டும்.

லேசர் ஒளிக்காட்டில்

ஆடும் வேட்டை இது.

ஆளும் பொய்.

அம்பும் பொய் .

உணர்சசிகளின் தினவுகளே

இங்கு  இந்த சின்னத்திரைப்படங்கள்.

=======================

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017‘மோகத்தைத் தாண்டி’
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *