அறுபது வயது ஆச்சு !

This entry is part 11 of 14 in the series 29 ஏப்ரல் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++

 

வழுக்கை விழுந்து தலை நரைத்து

வயதாகும் போது நீ எனக்கு

வாலன்டைன் காதல் தின வாழ்த்து

மறவாது அனுப்பு வாயா ?

இரவு மணி மூன்றாகி நான்

இல்லம் வராது போனால்,

கதவுத் தாழ்ப்பாள் இடுவாயா ?

உனக்கு தேவைப் படுவேனா ?

உணவு ஆக்கி ஊட்டுவாயா ?

எனக்கு அறுபது ஆகும் போது

உனக்கும் வயது ஏறிடும் !

 

உன்னோடு நான் இருப்பது உறுதி

ஒரு வார்த்தை உரைத்து விட்டால் !

உதவி செய்ய ஓடி வருவேன்

ஒளி விளக்கு அணைந்தால் !

சூட்டு அடுப் பருகில் அமர்ந்து

சுவட்டர் பின்னித் தருவாயா ?

காலைப் பொழுதில் கதிர் ஒளியில்

கால் நடைக்கு வருவாயா ?

தோட்டச் செடி தோண்டி வைப்பாயா ?

களை எடுக்கக் குனிவாயா ?

இவை தவிர வேறு எதற்கு ?

அறுபது வயது எனக்கும் ஆச்சு !

நான் உனக்கு வேணுமா ?

நீ எனக்கு ஊட்டு வாயா ?

 

+++++++++++++++++

Series Navigationமருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )கவிதைகள் 4
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *