”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 16 in the series 6 மே 2018
அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே,
வணக்கம்.
தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன்.  மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.  சக மனிதர் மீதான நேயத்தை, அக்கறையைத் தன் வாழ்க்கை மற்றும் இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். நவீன தமிழ் இலக்கியத்துக்கு பாவண்ணனின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக வாசகர்கள் ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” என்ற பொருளில் ஒருநாள் முழுக்க விழா எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அவ்விழாவில், பாவண்ணன் எழுத்துகள் குறித்த பல்வேறு நிகழ்வுகளும் சிறப்புரைகளும் காலை முதல் மாலைவரை நிகழ இருக்கின்றன.  வெளிச்சத்தை விட்டு எப்போதும் விரும்பியே ஒதுங்கி நிற்கிற படைப்பாளியான பாவண்ணனுக்கும் அவர் படைப்புகளுக்கும் மரியாதையும் கவனமும் தர நடத்தப்படும் இந்த விழாவில், தாங்களும், தங்கள் குடும்பமும், நண்பர்களும் கலந்துகொண்டு பாவண்ணனைச் சிறப்பிக்க உதவவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறோம். பாவண்ணனைப் பாராட்ட வாருங்கள்! வாருங்கள்!
விழாவின் அழைப்பிதழ் விவரங்கள் கீழே கொடுத்திருக்கிறோம். வண்ணக் கோப்பாகவும் (jpeg file) அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம்.
விழா தொடர்பான மேலதிக விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
அ. வெற்றிவேல் – +91 96006 51902
பெங்களூர் மகாலிங்கம் – +91 94490 12672

இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும்

“ பாவண்ணனைப் பாராட்டுவோம் “

நாள்: 26.05.2018 சனிக்கிழமை

இடம்: கவிக்கோ அரங்கம்
      6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை
      மைலாப்பூர்
      சென்னை -600 004
நேரம்: 09.45 -10.45
வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன்
வரவேற்புரை:    அ.வெற்றிவேல்
தொடக்கவுரை:   பவா. செல்லத்துரை
அமர்வு:1   நேரம்: 10.45 – 11.45
சிறுகதை
எம்.கோபாலகிருஷ்ணன்
கடற்கரய்
ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்பிரமணியன்
அமர்வு:  நேரம் : 12.00 – 01.30
நாவல்
சித்ரா
திருஞானசம்பந்தம்
சாம்ராஜ்
ஒருங்கிணைப்பாளர் : தி.சிவக்குமார்
உணவு இடைவேளை
அமர்வு: 3  02.30 – 04.00
கட்டுரை:
நரேந்திரகுமார்
மதுமிதா
எஸ்.ஜெயஸ்ரீ
ஒருங்கிணைப்பாளர்: திருஞானசம்பந்தம்
அமர்வு : 4   04.15- 05.45
மொழிபெயர்ப்பு
மா.அண்ணாதுரை
வெளி.ரங்கராஜன்
தி.சிவக்குமார்
ஒருங்கிணைப்பாளர்:  க.நாகராசன்
சிறப்புரைகள் : 06.15 – 08.00
தொடக்கவுரை & நிகழ்ச்சித்தொகுப்பு: ”சந்தியா” நடராஜன்
பாராட்டுபவர்கள்
காவ்யா.சண்முகசுந்தரம்
சா.கந்தசாமி
விட்டல்ராவ்
ஏற்புரை: பாவண்ணன்
நன்றியுரை: பவுத்த அய்யனார்

 

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்சிலம்பு சித்தரிக்கும் அரசியல்
author

Similar Posts

Comments

 1. Avatar
  Prof. Benjamin LE BEAU says:

  பாராட்டப் பெறும் என் மாணாக்க-நண்பர் பாவண்ணன் என்னும் பாஸ்கரன் அவர்களுக்கு அடியேனின் உளங்கனிந்த பாராட்டுகள்.
  அவர் மென்மேலும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற வாழ்த்துகிறேன்.அவர் என் வகுப்பில் அமைதியாக அமர்ந்து இருந்த காலங்களை மகிழ்வுடன் நினைவுகூருகிறேன்.

  அண்மையில் தமிழக அரசு அடியேனுக்கு 2016 ஆம் ஆண்டுக்கு உரிய அயலகத் தமிழறிஞர் இலக்கண விருது அளித்துப் பெருமை படுத்திய செய்தியை அவர்க்கு அறிவிக்க முயன்றும் இயலாமல் போனது. (அவர் மின்னஞ்சல் முகவரி தொலைந்து போனதால் ).

  அவர் புகழ் என்று நீடித்து நிலைக்க வாழ்த்துகிறேன்
  பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *