மேடம் மெடானா !

This entry is part 16 of 16 in the series 6 மே 2018

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

 

பாடகி மெடானாவின்

பாதத்தில் தொழுது கிடக்கும்

பாலர்களே !

சிந்திக்கும் என் மனது !

உமது அனுதின உணவு

சமைப்ப தெப்படி ?

வீட்டு வாடகைப் பணம் கொடுக்க

வேலை செய்வது யார் ?

மேலே வானி லிருந்து

காசு மழை பெய்கிறதா ?

 

வெள்ளிக் கிழமை இரவு  

பெட்டி படுக்கை எரிந்து போகுது !

ஞாயிற்றுக் கிழமை தாதி போல

ஓய்ந்து வருகுது !

திங்களன்று பிறக்கும் சேயானது

காலணி மாட்ட முயலுது !

பால ரெல்லாம்,

பாடகி நோக்கி ஓடுவதைப் பார் !

 

மேடம் மெடானா தனது பேபிக்கு

முலைப்பால்  ஊட்டுவாள் !

மற்ற பிள்ளை கட்கு

எப்படிப் பாலூட்டப் போகிறாள் ?

மேடம் மெடானா

படுக்கையில் விழுந்து கிடக்கிறாள் !

பாடகியின் பாட்டு கேட்கும்

உன் மூளையில் !

 

செவ்வாய்க் கிழமை மாலைப் பொழுது

செல்லாமல்  நீடிக்கும் !

புதன் காலைச் செய்தித் தாள்கள்

இன்னும் வரக் காணோம் !

வியாழன் இரவு கிழிந்து போன

சட்டையை

என்னால் தைக்க முடிய வில்லை !

 

பால ரெல்லாம்,

பாடகி நோக்கி ஓடுவதைப் பார் !

ஆடும் மெடானா

பாதம் தொழுவது பாலர்கள் !

அவருக்கு உணவு

எப்படித் தான்  கிடைக்குமோ ?

 

+++++++++++++

Series Navigationமருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *