This entry is part 7 of 13 in the series 13 மே 2018

சு. இராமகோபால்
 

நகராத மேகம்
நகைக்காத பல்
புகாத புகை
பொருந்தாத நேரம்

ஆடாத இலை
அணைக்காத பிறவி
கூடாத கூந்தல்
கத்தாத ஆந்தை

அருகாத பூ
அப்பாத மை
வருந்தாத நா
வருடாத கை

விரியாத சிறகு
வியாசனின் சிந்தை
வரிக்காத தேசம்
வசந்தாவின் மோகம்

அசையாத நாணல்
சிலிர்க்காத ஆணவம்
வசையாத தலை
வாய்க்காத எல்லை

முளைக்காத விதை
முதிராத காய்
மலைக்காத மன்னன்
மருளாத எறும்பு

அலையாத பட்டம்
அடுக்காத சட்டம்
குலையாத புகழ்
குமுராத விதவை

பதிக்காத கருத்து
பகிராத இறப்பு
உதிக்காத பரிதி
ஊதாத குருதி

Series Navigationபுலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்கவிதைகள்