சொந்த நாட்டுக்கு வா ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

This entry is part 7 of 7 in the series 17 ஜூன் 2018

தேன்குழலி ! நீ

வேலை செய்த இனம் !

வேலை இல்லா திருந்தாய் !

வட இங்கி லாந்தில் பிறந்தவள் !

இப்போது நீ ஒளிவீசும்

தாரகை

வட அமெரிக்கத் திரைவானில் !

இப்போது

உன் செவி கேட்கும்

என் வார்த்தை இதுதான்:

தேன்குழலி !

பித்தனாக் கினாய் நீ என்னை !

நேசிப்பது நான் உன்னை

ஆனால் நானோர்

சோம்பேறி !

நீ சொந்த நாட்டுக்கு மீண்டும்

வர வேண்டும் !

நிலைமை மோசமாய் உள்ளது

எனக்கு !

வா கண்மணி வா ! வந்திங்கு

ஹாலிவுட்

மோகனக் கீதங்கள் பாடு !

திரைவானில் ஒளிவீசும்

தாரகை நீ !

நேரில் உன்னைக் காண

அஞ்சி

முறியுதென் முழங்கால் !

தேன்குழலி !

என்னைப் பாடு படுத்துகிறாய் !

அட்லாண்டிக்

கடல் கடந் தென்னை

அணைத்திட வா !

உன் சொந்த நாட்டுக்கு வா !

காற்றே !

படகில் தள்ளிச் சென்றாய் அவளை !

மீண்டும் அப்படகில்

அவளை

என்னிடம் கொண்டு வந்து சேர் !

தேன்குழலி !

பித்தனாய் ஆக்கி விட்டாய் என்னை !

நேசிக்கிறேன் உன்னை !

ஆனால் நானோர்

சோம்பேறி !

சொந்த நாட்டுக்கு

நீதான்

மீண்டும் வர வேண்டும்

என் காதலியாய் !

+++++++++++++

Series Navigation2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *