கேரளாவிலே பேய்மழை

This entry is part 2 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

 

பூகோளச் சூடேற்றம்
ஆகாவென்று எழுந்தது பார் !
ஏராளமான வெள்ளம்
பேய்மழைப்
பூத வடிவில் வாய் பிளந்து
தாகம் தீர்த்து
விழுங்கியது கேரளாவை !
வீடுகள் சரிந்தன !
வீதிகள் நதியாயின !
பாதைகள் மறைந்தன !
பாலங்கள் முறிந்தன !
நாடு, நகரம், வீடு யாவும்
ஓடும் நீரில்
மூழ்கிப் போயின !
சீர்வளச் செல்வம் யாவும்
நீர் வெள்ளம்
அடித்தோடுது !
கண்ணீர் விடுவோம் !
கவலைப் படுவோம்,
நிதி அளிப்போம்,
உதவி தருவோம்,
ஆனால்
ஈர நெஞ்சம் கொண்டு
கேரளா
நீர் விடுமா
நிலமாய்க் காய்ந்து போன
வைகைக்கு ?

+++++++++++++++

https://www.bing.com/images/search?q=kerala+flood&FORM=HDRSC2

Series Navigation2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறதுஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *