இந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தை பிரிட்டன் திரும்ப கொடுக்க முயற்சித்தால் முழு திவாலாக ஆகும்

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 10 in the series 4 நவம்பர் 2018

உத்ஸா பட்னாயக்

புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி செய்தால் பிரிட்டன் முழுதிவாலாக ஆகிவிடும் என பிரபல பொருளாதார நிபுணர் உத்ஸா பட்நாயக் தெரிவித்தார்.

மூன்று நாள் சாம் மேயோ நினைவு மாநாட்டில் முன்னுரை நிகழ்த்திய உத்ஸா பட்நாயக், 1765இலிருந்து 1938 ஆம் ஆண்டுவரை சுமார் 9.184 டிரில்லியன் பவுண்டுகளை இந்தியாவிலிருந்து உறிஞ்சி உள்ளது என்று சொன்னார். இது தற்போதைய பிரிட்டனின் மொத்த வருட உற்பத்தியைவிட பன்மடங்கு அதிகமானது ஆகும்.

மேலும் இவர் கூறுகையில், 1904-14இல் ஒரு தனிநபருக்கு இருக்கும் உணவு தானியம் கிடைப்பது, வருடத்துக்கு 197.3 கிலோவிலிருந்து 136.8 கிலோவாக 1946இல் குறைந்தது என்று கூறினார்.

ஏனெனில், பிரித்தானியர்கள் உருவாக்கிய அமைப்பு முறை, மக்களது பொருள் வாங்கும் சக்தியை குறைத்து அந்த மக்கள் மேன்மேலும் ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்யவே வைத்தது. இதனால், உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து மக்களின் உணவு கொள்ளளவும் வேகமாக குறைந்தது.

கரீபியன் நாடுகளை போல இந்திய உற்பத்தியாளர்களை காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நாட்டில் விளையாத பொருட்களை விளைவிக்க கட்டாயப்படுத்தினார்கள். அப்படிஉற்பத்தியான பொருட்களை அபகரித்தார்கள்.

இந்தியாவை பொறுத்தமட்டில், இந்திய விவசாயிகளையும் உழைப்பாளர்களையும் உலக ஏற்றுமதி, தங்கம் மற்றும் அன்னிய செலாவணிக்கு ஏற்ற பொருட்களையே உற்பத்தி செய்ய வைத்தனர். “இவ்வாறு உற்பத்தியான பொருட்கள் அப்படியே லண்டனில் உள்ள நிர்வாகத்துக்கு சென்றது. அந்த பொருட்களை விற்று கிடைத்த ஒரு பைசா கூட உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. பிறகு எப்படி உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுத்தார்கள்? ரொம்ப புத்திசாலித்தனம். இந்த இந்திய விவசாயிகள் உழைப்பாளர்கள் கொடுத்த வரிப்பணத்தையே திருப்பி அவர்களுக்கு கூலியாக கொடுத்தார்கள்!” என்று பட்நாயக் கூறினார்.

உபரி பட்ஜட்டுகளே பிரிட்டிஷ் ஆண்ட இந்தியாவில் 200 வருடங்களாக கொண்டு வரப்பட்டன. “மக்கள் மீது வரி விதித்து, அந்த வரியை அந்த நாட்டிலேயே செலவழிக்காமல், அந்த பணத்தை வைத்து மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கினார்கள். இப்படிப்பட்ட வேலை, மக்களது பொது வருமானத்தை மிகவும் வேகமாக அழிக்கிறது. இது விவசாயிகளை ஓட்டாண்டிகளாக ஆக்கியது” என்றார்.

”1946இல் இந்தியாவில் இருந்த உணவு பற்றாக்குறை போல உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை”

இந்தியாவிலிருந்து உறிஞ்சப்பட்ட செல்வத்தை இன்றைய பொருள் ஏற்றுமதி உபரியை வைத்து கணக்கிட முடியும். சுமார் 9.184 டிரில்லியன் பவுண்டுகள் சுமார் 5 சதவீத வட்டி விகிதத்தைமட்டுமே கணக்கிட்டால் அடையலாம். இன்றைய கணக்கில் இது 90 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

ப்ராங்கோ மிலனோவிக் வடக்கு நாடுகள் தெற்கு நாடுகளை சுரண்டியதை பற்றிய ஒழுங்கை பேசுகிறார். “இந்தியாவிலிருந்து சுரண்டிய செல்வத்தை பிரிட்டன் திரும்பி தரவேண்டும் என்கிறார்.. ஆனால் இது நடக்கமுடியாத விஷயம். பிரிட்டன் ஒரே நாளில் திவாலாக ஆகிவிடும். 200 வருடங்களில் இந்தியவிலிருந்து சுரண்டிய பணத்தில் ஒரு சதவீதத்தை கூட பிரிட்டனால் இந்தியாவுக்கு கொடுக்க முடியாது.”

நவ எதேச்சதிகார கொள்கைகள் மக்களது வருமானத்தை குறைக்கும் வகையில் செயல்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாய உற்பத்தியை நவ எதேச்சதிகார கொள்கைகளின் நிதி கொள்கைகள் செயல்படுகின்றன.

உதாரணமாக, இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கிராமப்புறங்களில் செலவிடும் தொகை வருடாவருடம் 1990களிலிருந்து குறைந்துகொண்டே வருகிறது என்று பிரவீண் ஜா காட்டுகிறார்

1990களின் ஆரம்பத்தில் பொது வளர்ச்சிக்கான செலவுகள் அதிகரித்தன. மன்மோகன் சிங் காலத்தில் மக்களின் வருமானத்தை குறைக்கும் திசையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன. 2000-5இல் பொதுவளர்ச்சிக்கான செலவு அதிகரிக்கப்பட்டு வருமானம் உயர்த்தப்பட்டது. ஆனால் இது 1980களை விட குறைவாகவே இருந்தது. பிறகு 2005-6, 2010-11இல் அதிகரித்தது. இதற்கு காரணம் உலக பொருளாதார நெருக்கடியும், உணவு பொருட்களின் விலையேற்றமும் காரணமாக இருந்தது. பிறகு 2010-11, 2014-15இல் சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது மத்திய அரசாங்கம் செலவு செய்வது வேகமாக குறைந்தது. இப்படி மக்களின் வருமானத்தை குறைக்கும் நிதி கொள்கைகள் இருந்தால், மக்கள் தங்கள் உணவு செலவீனத்தை கட்டுப்படுத்துவார்கள். அவர்களது சத்துணவு நிலை கீழிறங்கும்.

Series Navigationஅம்மாவின் முடிவுமுழு மாயன் எழுத்து மொழியையும் அழித்த ஒரு கத்தோலிக்க பாதிரியார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *