மொழிப்போர்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 4 of 8 in the series 30 ஜூன் 2019


கௌசல்யா ரங்கநாதன்
     ………
-1-
இப்போதெல்லாம் என் நினைவுத்திறன் மங்கிக் கொண்டு வருவது நன்றாய் பு¡¢கிறது எனக்கு..அகவை 80+ கடந்ததால் இருக்குமோ!
சமீபத்தில் வீடு மாறிய நான்,  கை தவறுதலாய் என் ATM  கார்டை எங்கேயோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாய்..
இன்று வங்கியில் என் கணக்கில் என் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்பதாலும்,  கைச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதாலும் ,ATM  கார்ட் இல்லாமல் என்ன செய்ய முடியும்?
வங்கியோ வீட்டிலிருந்து 5 கி.மீ.. தொலைவில் இருப்பதால், நோ¢ல் சென்று பணம் எடுப்பதும் சிரமமாய் இருக்கிறது..என்னுடன் சேர்ந்து என் மனைவியும் ஒரு இண்டு, இடுக்கு விடாமல் தேடியும்
ஊஹூம்..”ஏனோ தெய்வம் சதி செய்தது ” என்றே பாடத்தோன்றியது..வங்கி மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரோ “ஒண்ணும் பிரச்சினை இல்லை..நீங்க ஒரு
விண்ணப்பத்துடன் வங்கிக்கு, அதுவும் காலை 12 மணியளவில் (அப்பத்தான் கூட்டம் கொஞ்சம் குறைவாய் இருக்கும்), வந்து என்னைப் பாருங்க..நான் உங்களை காக்க வைக்காமல் புது கார்ட்
கொடுத்து அனுப்பிடறேன்..ஆனா நீங்க நோ¢ல் வங்கிக்கு வந்தேயாகணும்” என்றார்..
உடனே ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வங்கி சென்று மானேஜரை பார்க்க விழைந்த போது, அவர் காபினில் இரண்டு பேர்கள் அமர்ந்து ஏதோ
பேசிக் கொண்டிருந்ததால், அன்னார் அறை வாயிலில், அவர் பார்வை என் மீது படும்படி, குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தேன்..கண்ணாடி அறைக்குள்ளிருந்து என்னை ஏதேச்சையாய் பார்த்துவிட்ட
மேலாளர், வெளியே வந்து என்னை தன் அறைக்கு அழைத்துச்சென்று, அமரச்செய்து, குளிர்ந்த தண்ணீர் கொடுத்து என்னவென கேட்ட போது, நான் காலையில் அவருடன் செல்லில் பேசியதை நினைவூட்டிட, அவரும், NO PROBLEM” அதாவது,
 “ஒண்ணும் பிரச்சினையில்லை..எங்கே உங்க விண்ணப்பம்?” என்றவர், நான் தமிழில் எழுதிக்கொண்டு போயிருந்த விண்ணப்பத்தை படித்து பச்சை இங்கால் “உடனடியாய்
ஆவன செய்யவும்” என்று எழுதி கையொப்பமிட்டு என்னிடமே கொடுத்து எந்த கவுன்டர் குமாஸ்தாவை பார்க்க வேண்டுமென்பதையும் சொல்லி அனுப்பினார்..குறிப்பிட்ட அந்த கவுன்டா¢ல் இருந்தது
ஒரு பெண் குமாஸ்தா..அவர் மெதுவாய் செயல் பட்டார்..எனக்கு முன் 4/5 பேர்கள் பொறுமையாய் நின்று கொண்டிருந்த போதும், அந்த குமாஸ்தா அவ்வப்போது வேலையை நிறுத்திவிட்டு பக்கத்து
இருக்கை ஊழியருடன் சி¡¢த்து, சி¡¢த்து பேசியவண்ணமே இருந்தார்..அதுவும் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலுமாய், மாற்றி, மாற்றி, தன் புலமையை காட்டிக்கொள்ள, என்றே நினைக்கத் தோன்றியது….தமிழ் வழி பாட திட்டத்தில்தான், 1950களில் படித்தவன் நான்.. பிறகு பள்ளிகளில் ஹிந்தி
மொழியை  optional subject என்றும், அந்த மொழி பா£ட்க்ஷையில் வாங்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..அதனால் நான் அந்த மொழி பயில்வதில் அதிக அக்கறை காட்டவில்லை மேலும் படிப்பு சுமையை ஏற்றிக் கொள்ள
விரும்பாததால்.”தமிழுக்கும் அமுதென்று பேர்..” என்ற பாடல் வா¢கள் நினைவுக்கு வந்தது..வட இந்தியா பக்கம் போனால், அங்குள்ளவர்கள், மற்றவர்களுக்கு பு¡¢கிறதோ இல்லையோ, ஹிந்தியில் மட்டுமே “போல்த்தாதா”..
உருது மொழி மெஜா¡¢டியாய் இருக்கும் பிரதேசத்தில் உருதுவில் மட்டுமே அளவளாவுகிறார்கள்..ஒரு கேரள மாநிலத்தவர் தன் மாநிலத்தவரை  இமைய மலையில் சந்திக்க நேர்ந்தால்கூட, மலையாளத்தில் மட்டுமே அவர்களுடன், மகிழ்ச்சியுடன் “பறைகிறார்கள்”.நட்பும் பாராட்டுகிறார்கள்.
“அதுபோல தெலுங்கு தேசத்தவர் தெலுங்கில் மட்டுமே “மாட்டலாடுகின்றனர்”. நம் தமிழ் நாட்டில் தன் சகா தமிழன் என்று தொ¢ந்தால்கூட ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று பு¡¢யவில்லை ..அந்தக் கால மொழி போராட்டம் என் நினைவில் வந்து,வந்து போனது..
ஆங்கிலமாவது உலகப் பொதுமொழி..தமிழ் பு¡¢யாதவர்களிடம் பேசிட ஆங்கிலத்தை மட்டுமே,அதுவும் அவர்கள் “ஆங்கிலத்தில் பேசுங்களேன்”.
எனக்கு தமிழ் தொ¢யாது என்று கேட்டுக்கொண்டால் மட்டுமே, உடைந்த ஆங்கிலத்திலாவது, பேசி பு¡¢ய வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சில வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்விக்கூடங்களில் தானே படிக்க வைக்கின்றனர்..அது அவரவர் விருப்பம்..
ஆனால்,வீட்டில்  குழந்தைகளுடனும், மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் பேசும் போதாவது, அவரவர்கள் தாய் மொழியில் ஏன் பேசக்கூடாது என்று எனக்கு தோன்றும்..நான் இங்கு எந்த மொழி பற்றியும் விவாதிக்க விரும்பவில்லை..இவ்வளவு ஏன்! நம் மகாகவி கூட “பிற மொழி
காப்பியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டும்” என்றுதானே சொல்லியிருக்கிறார்.. வெளி நாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் பெயரை
“வீரமாமுனிவர்” என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டதுடன் தமிழ் தொண்டாற்ற வில்லையா என்ன!ஒரு “கால்டுவெல்”போன்றவர்களையும்
இங்கு உதாரணமாய் சொல்ல முடியுமே..ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி தன்னை பெற்றெடுத்த தாய் ஒசத்தியோ, அப்படித்தான் தாய்
மொழியும் என்பதை அறியாதவர்களா நாம். ஒருவன் பல மொழிகளை கற்றுக் கொள்வது அவசியம்தான்..படித்து,முடித்து ,வேலை தேடி, பிற
மாநிலங்களில் பணியாற்ற வேண்டிய சூழலுக்கு  ஒருவன் தள்ளப்படும்போது, அந்த மாநிலத்தவருடன் ஒன்றிப்பழகிட, அந்த மாநில
மொழி அறிவு அவசியம்தானே!இன்றும் மாநில/மைய அரசுப் பணியில், IAS, படித்தவர்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாய், எந்த மொழி பேசு
பவர்களாக இருப்பினும், இன்னொரு மொழி தொ¢யாத மாநிலத்துக்கு பணியாற்றிட போனாலும், அந்த மாநில மொழியை கற்றுகொள்ள
வில்லையா என்ன! அது மட்டுமல்ல…இன்றும் பல தனியார் கல்விக்கூடங்களில், இந்திய மொழிகளைத் தவிர, “ஜெர்மன்”, ஃபிரென்ச்,போன்ற
மொழிகளை கற்றுக் கொள்ள விழையவில்லையா என்ன, அதுவும் அவர்களுக்கு பயன்படுகிறதோ, இல்லையோ என்றான போதும்..  
இவ்வளவு ஏன்? ஸ்டேட்சில் இருக்கும் எங்கள் ஒரே பையனை தமிழ் வழி கல்வியில்தான் பள்ளியிலும், கல்லூ¡¢யிலும்  படிக்க வைத்தோம்.
 -2-
சா¢..”வீண் மொழி அரசியல்” ஏன் இப்போது? நான் தமிழ் பற்றாளன்தான்..அதனால்தான் கூடிய மட்டில் (அலுவலகத்தில் வேலை செய்யும் போது மட்டுமே ஆங்கிலம் பயன் படுத்துவேன், அதுவும் தமிழ் தொ¢யாதவர்களிடம்) மற்றவருடன்,
பேசுவதோ, விண்ணப்பங்கள் எழுதுவதோ எல்லாமே தமிழ்..தமிழ்..தமிழ்தான்…”யாமறிந்த மொழிகளிலே….”  இப்படி எதை, எதையோ எண்ணியவாறு இருந்த போது “Yes, Gentleman.. what can I do for you?என்ற குரல் கவுன்டா¢லிருந்து கேட்கவே,நான்
 அந்த குமாஸ்தாவிடம் என் விண்ணப்பத்தை கொடுத்தேன்..அவர் அதை வாங்கி மேலும், கீழுமாய், .பார்த்தார்..பார்த்துக் கொண்டே இருந்தார்..
அப்போது பார்த்து அவர் செல்போனில் ஒரு அழைப்பு வர, அந்த பெண்மணி அழுதவாறே செல்போனுடன் வெளியில் சென்றார்..நான் கவுன்டா¢ல் 15 நிமிஷத்துக்கும் மேலாய் காத்துக்கொண்டிருந்தேன்..
இதுவே என் இளமை பருவமாய் இருந்தால் காத்திருப்பதை ஒரு சுமையாய் நினைக்கப்போவதில்லை..”காத்திருந்து, காத்திருந்து.,” என்ற சினிமா பாடல் வா¢கள் நினைவுக்கு வந்தது.. ஆனால்,இப்போது முதுமை காரணமாய் எனக்கு ஒரு படபடப்பு ஆயாசம்,நடுக்கம்,தவிர, கண்களும் வேறு
 இருட்டிக் கொண்டு வருகிறது..எனக்கு பின்னால், யாரும் இல்லை..அருகில் உள்ள இருக்கையில் அமரலாம்தான்..ஆனால் வேறு யாராவது வந்து கவுன்டா¢ல்
நின்றுவிட்டால்..அதனால் பல்லை கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த போது, அந்த பெண்மணி இறுக்கமான முகத்துடன் தன் இருக்கைக்கு திரும்பி வந்து, மறுபடி என் விண்ணப்பத்தை  மேலும், கீழுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது,திரும்பவும்,
 அவரை மேலாளர் அழைப்பதாக ஒரு உதவியாளர் சொல்ல, அவர் விருட்டென எழுந்து மேலாளர் அறைக்கு போனவர், பிறகு திரும்பவே இல்லை தன் இருக்கைக்கு….பக்கத்து இருக்கை
குமாஸ்தாவிடம் விசா¡¢த்த போது “இந்தம்மாவுக்கா காத்துக்கிட்டிருக்கீங்க?அவங்கம்மாவுக்கு உடம்பு சா¢யல்லைனு  வீட்டுக்கு போயிட்டாங்க மானேஜராண்ட சொல்லி பெர்மிஷன்
வாங்கிக்கிட்டு..பொ¢யவரே ஒண்ணு செய்யுங்களேன்..நாளைக்கு வாங்களேன்..நானும் அவங்க வந்ததும் சொல்லி வைக்கிறேன்..” என்ற போது என் விதியை நொந்து கொண்டு வீடு திரும்பினேன்..
இந்த குமாஸ்தா நினைத்திருந்தால், ஒரு சில நொடிகளிலேயே எனக்கு ஒரு புது ஏ.டி.எம்.கார்டை வழங்கியிருக்கலாம்..இதற்குமுன் நான் கார்ட் வாங்கும்போது அப்போதிருந்த குமாஸ்தா கண் மூடி,
கண் திறப்பதற்குள் என்பார்களே அப்படி ஒரு சில நொடிகளில் என் ஏ.டி.எம்.கார்டை பெற்றுத் தந்தது என் நினைவுக்கு வந்தது இப்போது..
மறுநாள், மறுபடி, ஆட்டோ பிடித்து வங்கிக்கு சற்று முன்னதாகவே சென்ற போது அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்..அந்த குமாஸ்தா தன் இருக்கையில் இருந்ததாலும், யாருமே  அப்போது கவுன்டா¢ல் இல்லாமல் இருந்ததாலும்..என்னை பார்த்ததும் அந்தப் பெண் குமாஸ்தா, ஒரு புன்சி¡¢ப்புடன், என் விண்ணப்பத்தை வாங்கி மறுபடி நேற்று போலவே மேலும், கீழுமாய் பார்த்தார்,பார்த்தார்,
பார்த்துக்கொண்டே இருந்தார்..என் கோபம் எல்லை மீறியது..”நேத்து பார்த்தீங்க..பார்த்துக்கிட்டே இருந்தீங்க..நேத்தே நீங்க நினைச்சிருந்தா என் வேலையை முடிச்சு அனுப்பியிருக்கலாம் ஒரு சில நொடிகளில்..ஆனா
இப்பவும் அதே விண்ணப்பத்தை பார்த்துக்கிட்டே இருக்கீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்று நான் கத்திவிட, கூட்டம் சேர்ந்துவிட, அந்த பெண் ஊழியர் மெல்ல விசும்ப ஆரம்பித்து,
பெரும் குரலில் அழ ஆரம்பிக்க “என்னாச்சு? என்னாச்சு?” என்று அங்கு குழுமியிருந்தவர்கள் கேட்க ஆரம்பிக்க, அந்த பெண் ஊழியர் என்னை பார்த்து “மாப் கீஜியே சாப்..முஜே தமில் நை மாலும்..
அங்கிரேஜி ஆர் ஹிந்தி மே போலீயே, நைதோ லிகிதியே..”  என்ற ஊழியரை பார்த்து சொன்னேன், ஆங்கிலத்தில் என் தேவை என்னவென்று..
பிறகு அந்தப் பெண்மணியே என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னதை இங்கு தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறேன்…”தப்பு என் மேல்தான் ஐயா..
நான் எப்ப தமிழ் நாட்டில் பணி பு¡¢ய வந்தேனோ, அப்பவே தமிழ் கத்துக்கிட்டிருக்கணும்..அப்பத்தான் தமிழ் மட்டுமே தொ¢ந்த இந்த மாநில
மக்களுக்கு என்னால் இயன்ற சேவையை செய்ய முடியும்..அது மட்டுமில்லை..என் பணி நிமித்தம் பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எனக்கு
மாற்றல் கிடைச்சா, அப்ப அந்தந்த மாநில மொழியை  உடனே கத்துப்பேன்” என்ற பெண்மணியிடம் நான் “மாப் கீஜியே” அதாவது என்னை
மன்னிச்சிரும்மா..எனக்கு வயசுதான் 80 ஆச்சேயொழிய உங்க பிரச்சினை என்னனு பு¡¢ஞ்சுக்கலை..” என்றேன்..
அந்தப் பெண் எழுந்து நின்று என்னைப் பார்த்து கைகள் கூப்பி “பொ¢யவங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது..என் வீட்டிலும் என்னை வழி
நடத்தி செல்ல யாருமில்லாமலேயே வளர்ந்தவ நான்” என்று ஆங்கிலத்தில் சொன்ன போது “இந்தக் கால இளைஞர்கள் கெட்டிக்காரர்கள்தான்..
ஸ்வாமி விவேகானந்தர் சொன்னாராமே “துடிப்பும், இளமையும் மிக்க 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள்..நான் இந்நாட்டின் தலை
விதியையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று.. அப்படித்தானே உலகமயமாக்கலுக்கு பிறகு இன்று, வேலை தேடி பாரதத்தின் மூலை,
முடுக்குகளிலிருந்தெல்லாம், அடிப்படை கல்வியறிவு கூட பெறாதவர்கள் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பு தேடிப் போய்
அந்த மாநில மொழி தொ¢யாவிட்டாலும், கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டிருப்பதை, பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்..
-3-
அப்போது என் நினைவுகள் பின்நோக்கி செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை.. 1960 களில் என் தாய் மாமன், ராணுவப்பணியில்
இருந்தவருக்கு, தஞ்சை மாவட்ட குக்கிராமம் ஒன்றில், அங்கு மொத்தமே 40 வீடுகள் மட்டுமே..நல்ல வீதிகள் கிடையாது..செம்மண் பூமி..
ஒரேயொரு மளிகை கடை..அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்.. அங்கு கிடைக்காத பொருள்களை வாங்க
வேண்டுமென்றால், 8 கல் தொலைவில் உள்ள ஒரு டவுனுக்குத்தான் போய் வர வேண்டும், அதுவும் கால் நடையாய்..ஊ¡¢ல் மின்சாரம்
பயன்பாட்டுக்கு வரவில்லை அப்போது..ஆரம்ப பள்ளி, 8 வகுப்புக்களை உள்ளடக்கிய, தமிழ் வழி கல்வி மட்டுமே உண்டு..வசதி படைத்த
சிலர் மட்டும் பக்கத்து டவுனுக்கு , இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் சென்று படித்து வருவார்கள்..அப்படிப்பட்ட குக்கிராமத்து
பெண்ணை, என் மாமாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்..ராணுவப்பணி என்பதோ, 3/4 வருடங்களுக்கொருமுறை பாரதத்தின் மூலை,
முடுக்குகளில் எல்லாம் சென்று பணி பு¡¢ய வேண்டியதொன்று..கிராமத்தை விட்டு வெளியிடங்கள் எங்குமே சென்றிராத என் மாமி எப்படி
வேற்று மாநிலங்களில், மொழி தொ¢யாமல், குடித்தனம் நடத்தப்போகிறாரோ என்றே நினைத்திருந்த எங்களுக்கு, 2 வருடங்களுக்கு பிறகு தன் தாய் வீட்டுக்கு வந்த மாமி படபடவென ஹிந்தியில் பேசியதைக் கேட்டு அக,மகிழ்ந்து போனோம்..இதிலிருந்து என்ன பு¡¢கிறது..ஒரு
இக்கட்டான நிலை,தேவை, வரும்போது, நாம் எப்படியோ அதை கடந்து விட முடிகிறது..ஆனால், கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கிறது..
 -4-
இப்படி எதை,எதையோ எண்ணியவாறு ஒரு ஆட்டோ பிடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் அந்த ஆட்டோக்காரர் சொன்னது என்னை
 மேலும் பிரமிப்புக்குள்ளாக்கியது..”ஐயா, உங்களை இங்கே 2 நாட்களாய் நான் பார்த்துக்கிட்டிருக்கேன்..விஷயமும் தொ¢ஞ்சுக்கிட்டேன் ஐயா!
“ஐயா..நான் படிப்பறிவும்,பட்டறிவும் இல்லாத வேற மாநிலத்தை சேர்ந்தவன்தான்.. மூணு தலைமுறைகளா வறுமைதான்..ஆனாலும் வயிறுனு
ஒண்ணு இருக்குதே, என்ன செய்யச்சொல்றீங்க? பொழப்பு தேடி, ஆந்திராவிலிருந்து இங்கே வந்து கிடைச்ச கூலி வேலையெல்லாம் செஞ்சு,
பிறகு ஒரு நல்ல உள்ளம் படைச்சவர் உதவியால் ஒரு ஆட்டோவை, வாங்கி இப்ப பசி,பட்டினி இல்லாம வண்டி ஓடிக்கிட்டிருக்கு..”என்றவா¢டம்,
“இவ்வளவு நல்லா, தமிழ் பேசறீங்களே, உங்களைப் பார்த்தா ஆந்திராவிலிருந்து வந்தவர்னு சொல்ல முடியவில்லையே” என்ற என்னிடம், அவர்” எப்ப ஆட்டோ ஓட்டறது என் தொழில்னு ஆயிருச்சோ, அதுக்கு நான் என்னை தயார் பண்ணிக்கணும்ல..அப்பத்தானே காலம் தள்ளமுடியும்..
இங்கே பல மொழி பேசறவங்களும் என் ஆட்டோவைத் தேடி வராங்க..அப்பல்லாம்,  நான் அவங்க மொழி என்னனு பு¡¢ஞ்சுக்கிட்டு,
பேசினாத்தானே ஐயா என் பிழைப்பு நடக்கும்..எனக்கு தெலுங்கு தாய் மொழினாலும், மலையாளம், கன்னடம், கொஞ்சம் பட்லர் இங்கிலிஷ்,
கொஞ்சம் ஹிந்தி மொழியெல்லாம் தொ¢யும்..இன்னம் பல மொழிகளை, ஓய்வு நேரத்தில் கத்துக்கிட்டும் இருக்கேன் ஐயா..இப்ப பா¡¢ஸ் கார்னர்
பக்கமா போனா, அங்கே உள்ள தெருக்களில் எல்லாம், ஹிந்தி,மார்வா¡¢,பஞ்சாபி மொழியை தாய் மொழியாய் கொண்டவங்கதானே வியாபாரம்
செய்யறாங்க, அதுவும், வர கஸ்டமர்கள் பேசற மொழியில்..கடைசியாய் ஒண்ணு ஐயா! தப்பா நினைக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.. எந்தவொரு
மொழியையும் வலுக்கட்டமாய் யார் மீதும் திணிக்க கூடாதுன்றது என் அபிப்பிராயம்.. கருத்து சொல்ல நான் ஒண்ணும் மெத்த படிச்சவன்
இல்லைதான்.. ஆனா,அப்படி திணிச்சா, யாருக்குமே அந்த மொழி மேலே ஒரு வெறுப்புணர்ச்சி தான் மேலோங்கி நிற்கும்ன்றதை நாம் அனுபவ
பூர்வமாய் உணர்ந்திருக்கோம்..” என்றவனை பார்த்து வியந்து நின்றேன்..
                                                                               ———

Series Navigationஅருங் காட்சியகத்தில்கானல் நீர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *