பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

This entry is part 4 of 10 in the series 12 ஏப்ரல் 2020
image.png

++++++++++++

+++++++++++++++++

2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார்  என்று ஒப்பிடப் படுகிறது.  இப்போதெல்லாம்  இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், பேய்மழை வெள்ளம், காட்டுத் தீப்பற்று போன்ற பேரிடர்கள்  உலகின் சில பகுதிகளில் நேர்ந்து அடிக்கடி மக்கள் துயர் அடைவதும், புலம்பெயர்வதும், மரணம் அடைவதும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்.  ஆனால் இப்போது நேர்ந்துள்ள கொரோனா ஆட்கொல்லிப் பேரிடரால் உலக மாந்தர் புலம்பெயர முடியாது, உயிர் பிழைக்க, அவரவர் வீட்டுக்குள்ளே, நாட்டுக்குள்ளே அடைபட்டுப் போக அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் மேற்கொண்டது.. 

image.png

ஆட்கொல்லி தொற்றுநோய் மக்கள் மூலம் பரவி விரிவாகிறது என்று அறிந்த பிறகு உலக அரசாங்கத்தார் ஊரடங்குச் சட்டம் போட்டு, மானிட நடமாட்டத்தைக் குறைத்து, தேவையான மருத்துவப் பாதுகாப்புச் சாதனங்கள், மருந்துகள், உணவு வகைகள் தயாரிக்க தீவிர ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் செய்து வருகிறார்.  முதலில் உலக நாடுகள் இத்தகைய பிரம்மாண்டமான பேரிடரைக் கண்காணிக்கவோ, கையாளவோ, தடுத்து நிறுத்தவோ, மக்களைப் பாதுகாக்கவோ, எதிர்பார்க்கவோ இல்லை.  உலகப் பெரும் சாதனங்கள், யந்திர யுகத்தில் இப்போது மலிவாக சைனா செய்து விற்கிறது என்று உலக நாடுகள் அதை ஊக்கத் தமது தொழில் நுணுக்கத்தை விற்று விட்டதால், வலிவிழந்து போன முன்னேற்ற  நாடுகள், தமக்குத் தேவையான பாதுகாப்புச் சாதனங்களைக் கூட தம்மால் செய்ய முடியாமல், கையில் பணத்தை வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டு நிற்கின்றன. ஒன்றுக்கு மூன்று மடங்கு பணத்தைச் செலவு செய்தாலும் சாதனங்கள் கிடைக்கப் பலநாட்கள் ஆயின.  உலகத்தீரே  மலிவான சாதனங்கள் கிடைக்க முன்னேற்ற நாடுகள்  தமது தொழில் நுணுக்கத்தை விற்றதால் ஏற்பட்ட , இழப்புகள் முடக்கத்தைப் பாரீர் !         

உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் நாடு காக்க ராணுவத்துக்குத் தரைப்படை, கடற்படை, வான்படை உள்ளதுபோல், நகரம் காக்க காவல்துறை உள்ளதுபோல், பேரிடர்கள் நேர்ந்தால் நீண்டநாள் கண்காணிக்க, நிரந்தரப் பாதுகாக்க  வழிமுறைகள் அவசியம் அமைக்கப் பட வேண்டும்.     

1.        பேரிடர் பாதுகாப்புத் துறை  அமைப்பு :  அரசாங்க அமைச்சர், நாட்டுத் தொழிற்துறையாளர், பொதுநல ஊழியக் குழுவினர்.  மாணவர் உதவிப்படை.

2.        மாந்தர் புலம்பெயர மையங்கள், உணவு, உடை, உறங்க வசதிகள், குழந்தைப் பராமரிப்பு.  

3.        மருத்துவக் குழுவினர். மருத்துவக் கூடங்கள்.

4.        போக்குவரத்து வாகனங்கள், ஒலி பரப்பு, ஒளிக்காட்சி ஏற்பாடுகள்.

தகவல்:

1.        https://www.axios.com/coronavirus-pandemic-us-preparation-failure-f84e657e-2ba4-4d64-9819-d13a647350f5.html

2.        https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019

3.        https://www.aljazeera.com/news/2020/04/noam-chomsky-coronavirus-pandemic-prevented-200403113823259.html

++++++++++++++4 Attachments

Preview YouTube video How we must respond to the coronavirus pandemic | Bill GatesHow we must respond to the coronavirus pandemic | Bill GatesPreview YouTube video Coronavirus Pandemic Update 47: Searching for Immunity Boosters & Possible Lessons From Spanish FluCoronavirus Pandemic Update 47: Searching for Immunity Boosters & Possible Lessons From Spanish Flu

ReplyReply allForward
Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]ஸிந்துஜா கவிதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *