This entry is part 19 of 22 in the series 19 ஏப்ரல் 2020

வைரஸ் தீ…

விட்டில் மக்கள்….

இது காட்டுத் தீ அல்ல

வீட்டுத் தீ

என்ன செய்வது?

விறகாகி எரிவதா?

விலகி அணைப்பதா?

சாம்பலாவதா?

சரித்திரமாவதா?

அடுத்த தலைமுறைக்கு

நாம் விதையா?

சிதையா?

இதோ….

நாடு கேட்கிறது

பொருள் கேட்கவில்லை

‘புரிந்துகொள்’ என்கிறது

விலை கேட்கவில்லை

‘விலகி இரு’ என்கிறது

கட்டியதைக் காப்பாற்ற

‘வீட்டிலிரு’ என்கிறது

எல்லார் கையிலும்

குவளைப் பால்

குடம் நிரப்புவோம்

ஒரு கிண்ணம் விஷமானால்

குடம் பாலும் கொடு விஷம்

என்ன செய்யப்போகிறோம்?

முடிவெடுக்கும் தருணம் இது

நாம் ….

பாலைவனத்தில்

துளிர்த்தவர்கள்

புயல்களைப் பார்த்து

புன்னகைத்தவர்கள்

சாம்பலில்

உயிர்த்தவர்கள்

விலங்குகளை

வேலியாக்கியவர்கள்

அம்புகளிடம்

அன்பைத் தேடியவர்கள்

தண்ணீரற்ற கிணற்றில்

தங்கள் கண்டவர்கள்

முடிவெடுப்போம்

சிங்கைக்கு

முடிசூட்டுவோம்

அமீதாம்மாள்

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்ஜீவ அம்சம்