சி. ஜெயபாரதன், கனடா
புலியோடு வசிப்ப தென்று
இறுதியில்
உலக ஞானிகள்
உறுதி கொடுத்தார் !
வீட்டுக் குள்ளே புலியா ?
ஒரு சில மாதங்கள் உலகத்தார்
கிலியோடு
புலியோடு தூங்குவார் !
மீளாத் தூக்கம் சிலர்
பெறுவார் !
நரக புரி இன்னும்
சொர்க்க புரி ஆகவில்லை !
புலிக்குப் பசித்தால்
புல்லைத் தின்னா தென்பது
எல்லாரும் அறிவர் !
கிலி பிடித்து மாந்தர்
நித்தம் நித்தம்
சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து
தூங்காமல் தூங்கி
சுகம் பெறுவாரா ?
நாடடங்கு, ஊரடங்கு,
வீடடங்குச் சட்ட
விதிகளை
இன்னும் ஏற்போம், மீறோம் !
ஆட்கொல்லி அழிவுக்கு
ஊசி மருந்து
ஒருநாள் கண்டறிவார் !
அதுவரை புலி
உன்னோடு படுத்திருக்கும் !
தொற்றிக் கிருமி உனைப் பற்றி
ஒட்டா திருக்கத்
தூரமாய்
எட்டடி தள்ளி நில் !
மூக்கு வடிகட்டித் தெருவில்
நடமாடு !
செல்வீக மாந்தர் நாட்டில்
இல்லாருக் குதவி
செய்வீர் !
உடல்நலங் கொடுப்போர் தேவை
இப்போது.
விடிவு காலம் வரும் !
++++++++++++++++
- ஆட்கொல்லி வேட்டை ஆடுது
- டகால்டி – சில கேள்விகள்
- தேவையற்றவர்கள்
- அஸ்தி
- நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘
- வீட்டில் இருப்போம்
- எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா
- கொரோனா சொல்லித் தந்த தமிழ்
- இனியாவது சிந்திப்போமா?
- என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக
- குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புலியோடு வசிப்ப தெப்படி ?