திருநீலகண்டர்

This entry is part 11 of 13 in the series 10 ஜனவரி 2021

அவன் உணவு மேஜையில்

அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட

விஷ உணவை

அவன்

அடிக்கடி உண்டு தீர்க்கிறான்

அவனைச் சிறைப்படுத்தும்

பிரச்சனைகள் பின்னர்

அவன் காலடியில்

மிதிபடுகின்றன

வெட்டப்பட்ட சிறகுகள்

அவனுக்கு மட்டும்

மீண்டும் வளர்ந்துவிடுகின்றன

அவ்வப்போது 

துயரங்களை உள்வாங்கி

அவன்

சீரழித்து வாழ்கிறான்

கிட்டாதனவற்றின்

பட்டியலை அவன்

உதறிவிட்டு நடக்கிறான்

—- இதோ இன்னும்கூட 

விஷ உணவுகள்

அவன் மேஜையில்

காத்துக் கொண்டிருக்கின்றன.

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *