விரக்தியின் விசும்பல்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 11 in the series 20 ஜூன் 2021

ரோகிணி

 

வான வெளியில்
இறக்கைகள் நீட்டி
பறக்கும் ஆசைப் பறவையின்
இறக்கைகள் வெட்டப்பட்டு
கீழே விழுந்த போது
ஆரம்பித்தது அந்த
மெல்லிய விசும்பல்கள்… 
 
கனவுகளை கழுவிலேற்றி
கழுவேற்றியவர்கள்
கைதட்டி சிரித்தபோது
அது ஓ வென்று அலறியது.. 
 
தாயின் மரணத்தின் போதும்
தவிக்க விட்டுப்போன
காதலியின் வெறுப்பின் போதும், பிரம்மாண்டமாய்
படமெடுத்து ஆடியது… 
 
அது ஓடும் பாதையை
முழுங்கிக்கொண்டு
வேகமாய் ஓடியது, 
ஒலிம்பிக் பந்தயத்தில்
ஓடும் வீரனைப் போல…. 
 
அதன் பாதையில் 
ஒரு ஆறோ  குளமோ
இருக்கக்கூடும்… 
அதில் தன்விசும்பல்களை
தள்ளி படுகொலை
செயதுவிட்டு நம்பிக்கையோடு
திரும்பிவரும் விரக்தி…. 
________________________________
 
தண்டவாளம்
________________
இரும்புச் சக்கரங்களின்
உரசலால்  உண்டான
முதுகு வலியைப்
பொறுத்துக்கொண்டு
ரயிலுடன் பயணிக்கிறது
பயணிகளின் பாதுகாப்பிற்காக… 
_____________________________
 
 
Series Navigationயோகம் தரும் யோகாநானின்றி வேறில்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *