கோவில்கள் யார் வசம்?

This entry is part 5 of 12 in the series 5 செப்டம்பர் 2021

 

அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்:

 Thiru BSV  கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். த​ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால் நன்றாக நடத்தப்படும் எனபதற்கு என்ன உத்தரவாதம்? Evidence or past experience? வெறும் பக்தி போதுமா? உண்மை என்னவென்றால், எவருக்குமே இக்கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை. அவர்களுக்கு முன் அனுபவமும் இல்லை. முதலில் ஒரு ப்ளூ பிரிண்டை முன் வைத்துக்

கேட்டால் அரசு அதை எப்படி நோக்குகிறது என்ற ஆர்வமாக வரும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் பெரும் பண முதலைகள். ரவுடிகள். அவர்களை அரசே எதிர்த்து நிலத்தை மீட்க முடியும். போலீஸ் அதிகாரம் அரசிடம்தான் இருக்கிறது

இந்த இந்து இயக்கங்கள் எப்படி விரட்டுவார்கள்? மிஞ்சிப்போனால், வழக்கு போடுவார்கள். அதை வெல்ல ஆக்கிரமிததவர்களுக்கு  ஆயிரம் வழிகளைத் தெரியும்

Their purpose is not the temple and God but political advantage. It is their sensational agenda to excite the emotions of Hindus and create a Hindu vote bank.

நண்பர் BSV  அவர்களின் மேற்காணும் எதிர்வினையை மிகத் தாமதமாய்த் திண்ணையில் (நேற்று)  கண்டேன்.  ஆனால் நண்பரின் வினாக்களுக்கு என் பதில்கள் வருமாறு:

 1. தங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும் கொடுத்தால் நன்றாக நடத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? Evidence or past experience? என்று வினவுகிறார் BSV. நன்றாக நடத்துவார்களா இல்லையா என்பது கொடுத்துப் பார்த்த பின் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. வேலை தேடிப் போன இளைஞன் ஒருவன், “அய்யா! முன் அனுபவம் உண்டா என்று நான் போகும் எல்லா அலுவலகங்களிலும் கேட்கிறார்கள். நீங்களும் அதையே கேட்கிறீர்கள். வேலை கொடுங்கள். எனக்கு முன் அனுபவம் கிட்டும். அதை வைத்து நான் உங்களுடையதை விடவும் பெரிய கம்பெனியில் வேலை தேடிக்கொள்ளுவேன்,” என்று காட்டமாய்ச் சொல்லத் துடித்தது பற்றி ஒரு கதையில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது. Experience க்கு வாய்ப்பு அளிக்காமல் அது பற்றியும் அதற்கான evidence பற்றியும் கேட்பது விந்தைதான்.
 2. இப்போது தங்கள் தொழுகைத் தலங்களையும் தேவாலயங்களையும் நிர்வகிப்பவர்களிடம் Blue print கேட்கப்பட்டதா என்ன? கேட்டிருந்திருப்பின், அதே போல், இந்துக்களிடமும் கேட்கவேண்டியதுதானே? சட்டம் என்பது அனைவர்க்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு சலுகையான சட்டம், என் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கடுமையான சட்டம் என்று விதித்தால், என் பக்கத்து வீட்டுக்காரன் அரசைத் தட்டித்தான் கேட்பான். உன் தப்புக்கு மட்டும் பதில் சொல்லு என்று அவனை நிர்ப்பந்திப்பது என்ன நியாயமோ!
 3. கோடிக்காணக்கான ஏக்கர்களில் கோயில் நிலங்கள் அரசின் வசம் அவை இருந்த போதுதானே அபகரிக்கப்பட்டுள்ளன? நிலங்கள் மட்டுமா? லட்சக்கணக்கான சிலைகளும் கடத்தப்பட்டுள்ளனவே! நீங்கள் சொல்லும் அந்தப் பண முதலைகளிலும் ரவுடிகளிலும் இன்னும் ஏன் பலர் பிடிபடவில்லை? அப்படியாயின் அரசு தன் பொறுப்பைச் செயல்படுத்தவில்லை என்றுதானே ஆகிறது? கோர்ட்டுக்குப் போவது தவிர வேறென்ன வழியாம்?
 4. தப்பித்துக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயிரம் வழிகள் தெரியும் என்னும் நிலை கோவில்கள் யார் வசம் இருக்கும் போதும் தானே நிலவும்? அதிலும் அரசு சார்ந்தவர்களே ஆக்கிரமிப்பில் சம்பந்தப்படும் போது அந்த நழுவல் மேலும் தானே சாத்தியமாகும்?
 5. The purpose is not temple or God but political advantage. It is their sensational agenda to excite the emotions of Hindus and a Hindu vote bank –  என்கிறீர்கள்.  முதல் வாக்கியம் இரு சாரார்க்கும் பொருந்துவது தானே? கோவில்களை இயக்குவதற்கு நீங்கள் சொல்லியுள்ளது போல் வெறும் பக்தி மட்டும் போதாதுதான். நாணயமே முக்கியம். ஆனால் இரு சாராரில் யார் பரவாயில்லை என்பது ஒப்படைத்தலுக்குப் பின்னரே தெரியவரும் நிலையாகும்.
 6. உங்களின் இரண்டாம் ஆங்கில வாக்கியம் உண்மையை உள்ளடக்கியதாக இல்லை. அப்படியாயின், நாத்திக வாதம் செய்து வருபவர்களுக்கு வாக்குகள் குவிந்திரா. வாக்கு வங்கி என்பது சிறுபான்மையினர்க்குத்தான் நம் நாட்டில் பொருந்துவதாக உள்ளது. பெரும்பான்மையினர்க்கு அன்று.
 7. சிலைகள் திருட்டுத் தொடர்பான நாற்பத்தோர் ஆவணங்கள் அற நிலையத் துறையிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ மாயமாகி விட்டன என்பதும், உயர்நீதி மன்றம் அரசை அது பற்றிக் கேள்வி கேட்டுள்ளது என்பதும் இன்றைய செய்தி!  இதற்கு என்ன பதில் அல்லது சமாதானம் / சமாளிப்பு? 
   
   
   

மிக்க நன்றி.

ஜோதிர்லதா கிரிஜா

Series Navigationமூன்று பேர்குருட்ஷேத்திரம் 9 (திருதராஷ்டிரனால் காலத்தின் கையில் ஊசலாடிய குருதேசம்)
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *