எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்

This entry is part 7 of 12 in the series 1 ஜனவரி 2023

வெங்கடேஷ் நாராயணன்

காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் தனது மகனை கரையில் விட்டுவிட்டு காவிரியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டான்.  இவ்வளவு நாள் வீட்டில் குளிப்பதற்கும் இப்போது காவிரியில் குளிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது சின்ன காவிரி தான் வாய்க்கால் என்று கூறுவர் .அகண்ட காவேரி சற்று தொலைவில் உள்ளது.  எப்படியும் இந்த பத்து நாட்களுக்குள் மூன்று முறையாவது அங்கு சென்று குளித்து விட வேண்டும். கரையில் தனது மகன் சுரேஷ் குவளையில் தண்ணீர் எடுத்து குளித்தான்.  இருவரும் குளித்து முடித்து வீடு நோக்கி நடந்தனர் .

வாய்க்காலை ஒட்டி கணபதிக்கும் முருகனுக்கும் தனித்தனியாக கோயில் .அதனை கடந்து சென்றால் பெரிய சிவன் கோயில். இதுவே ஒரு தனி சிறப்பு .சிவன் கோவிலுக்கு எதிரில் சுடுகாடு .இரண்டுக்கும் ஒரே காவலர். என்ன ஒரு விந்தை !

கோவிலை கடந்து சென்றால் ரயில் தண்டவாளம், திருச்சி கரூரை இணைக்கும் ரயில் பாதை.அதனருகில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை. அதை கடந்து சென்றால் தனது வீட்டின் கொல்லைப்புறம் வரும். என்ன ஒரு அழகிய கிராமம் வாழை, தென்னை ,வெற்றிலை ,நெல் வயல்கள் நிறைந்த அந்த கிராமம் ஒரு பூஞ்சோலையாக இருந்தது.

வீட்டின் தோட்டத்து வழியாக உள்ளே வந்தனர். தனது மனைவியும், அம்மாவும் சமைத்து முடித்து விட்டனர் .

ருக்கு என்ன சமையல் என்று கேட்டான்.

தேங்காய் துவையல், மிளகு ரசம் ,வாழைப்பூ பருப்பு உசிலி ,அவியல் என்றாள்.

 சரி பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி நாராயணன் பூக்களை எடுத்து சுவாமிக்கு வைத்துக் கொண்டிருந்தான். வெள்ளை நந்தியாவட்டை, பவழமல்லி, துளசி, அருகம்புல் எல்லாம் தனது அப்பா சரியாக எடுத்து வைத்திருந்தார். நேற்று ஊருக்கு வரும்போது, லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் வாங்கிய ரஸ்தாலி வாழை பழத்தை எடுத்து சுவாமிக்கு நிவேதனம் செய்தான்.

பூஜை முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

பத்து நாள்ல எங்கெங்கெல்லாம் போகலாம்னு இருக்கே என்று அப்பா ஆரம்பித்தார் .

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ,தான்தோன்றி மலை கோவில் ,உள்ளூர் கோயில்கள் போகவேண்டும் சுரேஷுக்கு ஒருநாள்  முக்கொம்பு, மாயனூர் நீர்தேக்கம் போகவேண்டும். அக்கம்பக்கம் வீட்ல போய் பாக்கணும் ,மத்த நேர எல்லாம் இங்க தான் இருப்பேன். எப்படியாவது ஆபீஸ்ல இருந்து போன் வரும். அங்கு என்ன நடக்கிறது என்று பேசி விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்.

இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போது தனது அலுவலகத்தில் இருந்து மொபைலில் அழைப்பு வந்தது.  தலைமை பொறியாளர் பேசினார் .  ஒரு பழைய மெஷின்ல ஒரு உதிரி பாகம் பழுதாகிவிட்டது.   அந்த உதிரி பாகம் அங்கே கிடைக்கல, அது கிடைத்தால் தான் உற்பத்தி தொடங்க முடியும்.

பத்து நிமிடம் கழித்து பேசுவதாக மொபைலை துண்டித்தான் நாராயணன்.

அப்போது அம்மா கமலா தனது கணவரிடம் நேத்துதான் ஊருக்கு  வந்தான். அதுக்குள்ள போன் வந்திடுச்சு என்று அங்கலாய்த்துக் கொண்டார். 

அதற்கு மகன் அம்மா நான் என் கம்பெனியில் உதவி தலைமை பொறியாளர் .  கிட்டத்தட்ட இரண்டாயிரம் தொழிலாளிகள் வேலை செய்றாங்க 24 மணி நேரமும், மூன்று ஷிப்ட் இயக்கம் கம்பெனி.  ஒரு சில மணி நேரங்கள் உற்பத்தி நிறுத்தினாலும் அது பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றான். 

இப்போது உதிரி பாகத்தை வாங்க வேண்டும். அதை ஒரு நம்பிக்கையான பொறியாளர் மூலம் பெங்களூருக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அந்த பொறியாளர் அதை மெஷினில் பொருத்தி அதை இயக்க வேண்டும் . இப்படி செய்தால் தான் இந்த பிரச்சனை சரியாகும். என்ன பண்ணலாம் என்று யோசித்தான் . அப்போது தனது நண்பன் மூர்த்தி சென்னையில் உதிரிபாகம் விற்கும் தொழில் செய்து வந்தது நினைவுக்கு வந்தது . நாராயணன் தனது மொபைலை எடுத்தான்.  மூர்த்தி நம்பரைஅழைத்தான்.

 ஹலோ எப்படி இருக்க என்று ஆரம்பித்தான் மூர்த்தி

ஹலோ நான் நல்லா இருக்கேன் .நேற்றுதான் பெங்களூரில் இருந்து ஊருக்கு பத்து நாள் லீவுல வந்தேன் என்றான் நாராயணன்.

அப்படியா ரொம்ப சந்தோஷம்

நாராயணன் மெதுவாக ஆரம்பித்தான் …………..எனக்கு ஒரு உதவி வேண்டும் .

என்ன சொல்லுடா ………….என்றான் மூர்த்தி

எங்கள் தொழிற்சாலையில் ஒரு பழைய மெஷின்ல ஒரு உதிரி பாகம்  பழுதாகிவிட்டது .அதை மாற்ற வேண்டும். முதல்ல அதை வாங்க வேண்டும். எனக்கு தெரிஞ்சு அது பாரிசில் கிடைக்கும். அதை வாங்கிய பிறகு அதை விட முக்கியமான விஷயம், அதை ஒரு நல்ல பொறியாளரிடம் கொடுத்து பெங்களூருக்கு அனுப்பி வைத்து, அதை மெஷினில் பொருத்தி மெஷினை இயக்க வேண்டும் .

சரி அந்த உதிரிபாக ம் பற்றிய மாடல்,ஸ்பெசிஃபிகேஷன் , போட்டோ எல்லாம் எனக்கு வாட்ஸ்அப் அனுப்பு. நான் வாங்கி வைக்கிறேன் .

இவ்ளோ சீக்கிரமா நாம இத கொடுக்கிறோமோ அவ்வளவு நல்லது. உற்பத்தியை நிறுத்தினால் அது கடைசியில் லாபத்தில் அடிவாங்கும் .

புரிகிறது  என்றான் மூர்த்தி.

 நாராயணன் தலைமை பொறியாளரிடம் தொடர்பு கொண்டா ன்.  அவரிடம் உதிரிபாகம் மாடல் , ஸ்பெசிஃபிகேஷன் ,போட்டோ எல்லாம் தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப சொன்னா ன் .  மேலும் தான் உடனே சென்னைக்கு சென்று இன்று இரவுக்குள் அதை சென்னையிலிருந்து வாங்கி ஒரு பொறியாளரிடம் கொடுத்து அனுப்புகிறேன் என்றான்.

 நானா உடனே சென்னை போக வேண்டும்.  தனது குடும்பத்திடம் விஷயத்தை சொன்னா ன் .  ஒரு நாளைக்கு தேவையான துணிகளை ஒரு பேக்கில் எடுத்து வைத்து சென்னைக்கு புறப்பட்டா ன் . 

ஒரு காரை ஓட்டுநர் உடன் வாடகைக்கு எடுத்து சென்னைக்கு கிளம்பினா ன் .  நேரம் இப்போது காலை பதினோரு மணி.  சென்னை செல்வதற்கு எப்படியும் நான்கு மணி ஆகிவிடும்.   ஒரு மணி நேர பயணத்தில் திருச்சி அடைந்தனர்.  ஒருபக்கம் காவிரிக்கரை,  மறுபக்கம் ரயில் தண்டவாளம்,  இரண்டுக்கும் நடுவில் தார் சாலையில் தனது கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது .  வண்டி உச்சி பிள்ளையார்  கோவிலை கடந்தது .  என்ன ஒரு அனல் காற்று உச்சிப்பிள்ளையார் மலையில் இருந்து வெப்பம் reflection ஆகும் என்று தனது அப்பா கூறியது நினைவுக்கு வந்தது .

மூர்த்திக்கு வாட்ஸப்பில் தகவலை அனுப்பினா ன் .  அவனிடம் தொடர்பு கொண்டு பேசினான்.

 நீ கவலைப்படாதே எல்லாம் நான் பாத்துக்குறேன் என்றால் மூர்த்தி .

வண்டி வேகமாக சென்று கொண்டிருந்தது.   சுமார் மூன்று மணிக்கு ஒரு கடையில் நிறுத்தி ஓட்டுனரும் அவனும்காபி குடித்தனர் .

மூர்த்திக்கு போன் செய்தான்.  எல்லா ரெடியா இருக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல பையன் சென்னைக்கு கிளம்பிடுவான்.

வண்டி பெருங்களத்தூர் வரை விரைவாக வந்தது .  பெருங்களத்தூர் தாம்பரம் பக்கம் சற்று நெரிசல் காணப்பட்டது .  வண்டி மீனம்பாக்கம் விமான நிலையம் கடந்த போது,  தலைமை பொறியாளர் அழைத்தார் .  இன்னும் அரை மணி நேரத்தில் நான் என் நண்பன் அலுவலகத்தில் சென்று விடுவேன் அங்கிருந்த இன்று இரவு ஒரு கைதேர்ந்த பொறியாளர் மூலம் ரயிலில் பெங்களூருக்கு அனுப்புகிறேன்.  அவரே அதை பொருத்தி மெஷினை இயக்குவார் .  நாளை காலை 4 மணிக்கு ஆபீஸிலிருந்து ரயில் நிலையத்திற்கு வண்டி அனுப்புங்கள் என்று சொல்லி முடித்தான் நாராயணன்.

 வண்டி கத்திப்பாரா மேம்பாலம் தாண்டி கொண்டு இருந்தது . ஒரு பட்டாம்பூச்சியை கவிழ்த்து போட்டது போல் இருந்தது.  அதன் நடுவில் குழந்தைகள் விளையாட சறுக்கு மரம் போன்ற உபகரணங்கள் இடையில் ஒரு உணவகமும் இருந்தது. சென்னைக்கு ஒரு புதிய அடையாளத்தை இந்த கத்திபாரா தந்திருக்கிறது.

வண்டி சைதாப்பேட்டை சின்ன மலை தாண்டி வலதுபுறம் திரும்பி முதல் இடது பக்க சாலையில் திரும்பியது.   அங்கிருந்து மூன்றாவது கட்டிடத்தில் தரைதளத்தில் மூர்த்தி அண்ட் கோ என்ற தனது நண்பனின் அலுவலகம் இருந்தது .  சுமார் 1000 சதுரடி அலுவலகம் பின்னால் 3 ஆயிரம் சதுரடி கோடவுன் என்று ஆபீஸ் மிகவும் அழகாக இருந்தது.

 நாராயணன் மூர்த்தியின் அறைக்கு சென்றான். 

மூர்த்தி அவனை வரவேற்று என்ன சாப்பிடுகிறாய் என்றான்.

நாராயணன் முதலில் உதிரிபாகம் ரெடியா? நான் பார்க்கலாமா என்றாரன். 

 இதோ என்று எதிரே இருந்த அட்டைப் பெட்டியை திறந்தான்.  உதிரி பாகத்தை எடுத்து நாராயணனுக்கு காண்பித்தான் . 

இதுதான் அது.  யார் எடுத்துக் கொண்டு போவாங்க என்று கேட்டான் .

மூர்த்தி இன்டர்காமில் தனது செகரட்டரியஅழைத்தான். ராஜா வந்தாச்சா? அவனை உள்ளே அனுப்ப சொன்னான்.

 சிறிது நேரத்தில் வாட்டசாட்டமான ஒரு ஆள், ஒரு கால் மட்டும் சற்று ஊனமாக உள்ளே வந்தான். 

நானா இவர்தான் ராஜசேகர், எங்க ஆபீஸ்ல பெஸ்ட் இன்ஜினியர்.  எல்லாமே நான் இவருக்கு சொல்லிட்டேன்.  நாளை காலை ஐந்து முப்பது மணிக்கு ரெடியாயிடும் . ஆறு மணிக்கு மணிக்கு உற்பத்தியை தொடங்கலாம் . 

ராஜசேகர் நாராயணனிடம் ஒரு புன்னகை பூத்தான்.  கவலைப்படாதீங்க சார் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.

 நானா அவரிடம் தனது விசிட்டிங் கார்ட்,  தலைமை பொறியாளர் நம்பர் எல்லாம் கொடுத்தான்.  நாளை காலை 4 மணிக்கு ஸ்டேஷனில் வண்டி ரெடியாக இருக்கும்.   அதிலிருந்து நீங்க ஆபீஸ்க்கு  போய் வேலையை முடித்துவிட்டு திரும்பி ஸ்டேஷனுக்கு வந்து விடலாம்.

நானா மூர்த்தியிடம் இந்த உதிரி பாகத்திற்கான செலவு, ராஜசேகருக்கு போக்குவரத்து செலவு , 2 நாள் சம்பளம் எல்லாம் பில் போட்டு குடுங்க உடனே உங்களுக்கு நான் கொடுத்துவிடுகிறேன் என்றான்.

அது ஒன்றும் அவசரமில்லை பொறுமையா பண்ணுங்க என்றான் மூர்த்தி.

 ராஜசேகர் இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பார்சலுடன் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டான்.

பியூன் இரண்டு காப்பி கோப்பைகள் மற்றும் பிஸ்கெட் உடன் உள்ளே வந்தான்.  இருவரும் காபி சப்பிட்டனர் .  நானா மூர்த்தியிடம் ராஜசேகரை பற்றி விசாரித்தான்.  மூர்த்தி அவனிடம் ராஜசேகரை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

இந்த ராஜசேகர் எங்க ஆபிசில் பத்து வருஷமா வேலை பார்க்கிறான் அவன் வீடு இங்கே பக்கத்தில் பெருங்குடியில் தான் இருக்கு .  ரொம்ப நல்லா வேலை செய்வான் .  எந்த ஒரு அவசர நிலையிலும் அவன் தான் கை கொடுப்பான் . 

அவங்க அப்பா பட்டாளத்தில் வேலை செஞ்சாரு.  ராஜாவோட அஞ்சாவது வயசுல அவங்க அம்மா நோய் வாய் பட்டு இறந்துட்டாங்க.  அவங்க அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தை மும்பையில் குடிபெயர்ந்தார் . ராஜா தனது பாட்டி தாத்தா வீட்டில் வளர்ந்தான்.  அவங்க அப்பா இவர் செலவுக்கு பணம் கொடுத்தார்.  அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பார். சின்ன வயசுலயே போலியோ அட்டாக் வந்தது.  ஒரு காலில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. ராஜா அதை பொருட்படுத்தாமல்  தன்னம்பிக்கையோடு வளர்ந்தான்.  பொறியியல் படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்தான். 

 மூணு வருஷத்துக்கு முன்னாடி பட்டாளத்தில் அவங்க அப்பா இறந்துட்டாரு. அவனுக்கு தந்தி வந்தது. தனது அப்பாவுக்கு எல்லா காரியமும் செஞ்சா ன். பட்டாளத்தில் கொடுத்த பணத்தில் பாதியை சித்தி குடும்பத்துக்காக கொடுத்துட்டான் .  ரொம்ப நேர்மையான மனிதன் . 

 எப்படியும் நாளைக்கு காலையில எல்லாம் சரி ஆயிடும் .  ஆறு மணிக்கு உற்பத்தி தொடங்கியாச்சு உனக்கு போன் வரும் பாரு என்று மூர்த்தி சொன்னா ன்.

 நாராயணனுக்கு இப்போது ராஜசேகர் மேல நம்பிக்கை வந்தது. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு .

“ராஜா ராஜாதான் “என்று சொல்லி முடித்தான் நாராயணன்.

Series Navigationபுத்தாண்டு பிறந்ததுஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1   
author

வெங்கடேஷ் நாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *