கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி

This entry is part 8 of 20 in the series 29 ஜனவரி 2023

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும்

(இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் )

இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை.

இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று இந்த ஓவியக் கண்காட்சியை யூத் ராஜ் ( ஐ ஏ எஸ் பயிற்சியாளர் ) துவக்கி வைத்தார்.

ஓவியர் தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு சி.சுப்ரமணியம் அவர்கள் ” செந்தமிழ் ஓவியக் கலைஞர்” என்ற பட்டத்தினை வழங்கினார்.

இக்கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும்.

நிகழ்ச்சிக்கு வகித்தார் தலைமை வகித்தார் : சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம்

0 புதிய நூல்கள் அறிமுகம் நடந்தது.

0 திருப்பூர் மோகன் ராஜின் “இனிப்பு சாப்பிடுங்க. சர்க்கரை நோயை வெல்லுங்க”

0 சுப்ரபாரதிமணியனின் “ திரைப்படம் என்னும் சுவாசம் “

0 கோவை ஆண்ட்ரூசின் “ பசுமை நினைவுகள் “ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

· கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம் ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Series Navigationஇரவுகள் என்றும் கனவுகள்.இரண்டாம் தொப்பூழ்க் கொடி 
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *