தேர் வீதியும் பொது வீதியும்…

author
0 minutes, 1 second Read
This entry is part 17 of 20 in the series 29 ஜனவரி 2023

செந்தில்

சந்தைக்குப் பல வழிகள்…

தனியார் கடைப் பொருளுக்கு

 பொது வீதியன்றி…

வேறுவழியில்லை…

சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்?

தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…
சந்தை களைகட்டுகிறது…
கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்…

கடை விரித்தும்
கருத்துளம் கொள்வாரின்றி
சந்தை விட்டு 
சயனக்கிரகம் வீற்றிருக்கும்
உண்மைப் பொருள் ஓங்குயர்
பெருமாள் நோக்கிதான் 

நகரும் எவ்வழியும்..

தனி வழி ஏதும் இல்லை
வைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்
இப்படி பலப்பல பொது வழிகள்…

உண்மைக்கு ஏது ஒரு வழி…
படிகள் இல்லா உலகிற்க்கு
திசைகள் இல்லா உயர்வுக்கு
முதலும் முடிவும் அற்ற  முற்றத்திற்க்கு
பறந்துகூட செல்லமுடியாதே….

பரமபத வாசலுக்கே படிநிலை இல்லாத போது…
அன்ன வாசலுக்கு அற்ப சாதிப்படிகள் எதற்காக?

பெரிய பெருமாள் ஆயினும்
பெத்த பெருமாள் ஆயினும்
சேற்றில் கால் வைக்காமல்
சோற்றில் கை வைக்க முடியாது!

நிலையற்ற நிஜத்திற்க்கும்
நித்ய முதலுக்கும்
இடையில் ஒரே ஒரு திரை ….மனத்திரை…
மனத்திரை விலகினால் மாய உலகம் வழிதிறக்கும்…… 

Series Navigationநித்தியகல்யாணிஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *