மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு, துருக்கி நாடு.
++++++++++++++++++
[முன் பதிப்புத் தொடர்ச்சி]
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
அங்கம் –1 காட்சி –2 பாகம் : 8
இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.
டியூக்: நீ செய்ய வேண்டியதை நான் சொல்கிறேன். அது இளம் காதலருக்கு சிறிது உதவி அளிக்கும், உனக்கும் ஆதரவாக.
[பாடுகிறார்]
தீர்வில்லா பிரச்சனைக்கு, மன த்துயர் தான் முடிவு.
துயர் மிகுந்து ஒருவனை பாரம் மூழ்க்கும் போது
கடந்து போன ஆறாத காயத்துக்கு நொந்து கொள்வது
புதிய துயர்கள் ஒருவனைப் பின் தொடருமாம்
துரதிஷ்டம் பற்றும் போது, எது கைக்குள் அடங்காது
பொறுமையே அப்போது ஒருவன் புண்ணை ஆற்றும்.
சிசாரோ: [பாடுகிறார்] சரி
இப்போ துருக்கியர் தோற்க நாம் சிறிது சூழ்ச்சி செய்வோம்.
புன்னகை யோடு போர் புரிந்தால் தோல்வி ஏது நமக்கு
தண்டனை பணி்வோடு ஏற்பவன், எதையும் தாங்குவன்.
[முணுமுணுத்து] ஆனால் சொற்கள் வெறும் சொற்கள் தான்.
கேட்ட தில்லை நான், காதில் விழுந்த சொற்கள்
புண்பட்ட நெஞ்சை பூரணமாய் ஆற்றும் என்று.
டியூக்: பேராற்றல் கொண்ட துருக்கியர் சேனைப் படகுகள் இப்போது சைப்பிரசை நோக்கி விரைவாய்ச் செல்கின்றன. ஒத்தல்லோ நீ போர்த் தளங்களை நன்கு அறிந்தவன். நமது பிரதிநிதி ஒருவன் தற்போது அங்கு இருந்தாலும், நீ தான் தக்க தளபதி என்பது என் தீர்மானம். நீ அதை ஏற்றுக் கொண்டு உன் திருமண நாள் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்து, அமைதி இல்லா அபாய உலகில் நுழைய வேண்டும்.
ஒத்தல்லோ: மேன்மை தங்கிய செனட்டர் கோமான்கள் இட்ட கோரக் கட்டளை, என் பஞ்சு மெத்தையை , முட்கள் நிரம்பிய ஒரு இரும்பு படுக்கையாய் மாற்றி யுள்ளது. இம்மாதிரிப் போர்த் தளபதியாய் பேரிடரோடு போரிட எனக்கு பல்லாண்டு அனுபவம் உள்ளது. இப்போது துருக்கியரோடு போரிடத் துணிகிறேன். நெருக்கடியான இத்தருணத்தில் நான் எனது இளமனைவிக்கு வாழச் சில வசதிகள் ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். தங்க வீடு, பணச் செலவு, நோய் நொடி மருத்துவக் கண்காணிப்பு, உதவிப் பணிப் பெண்கள் போன்றவை.
டியூக்: என் தீர்ப்பு ஒத்தல்லோ ஒப்புக் கொண்டால், ஐயமின்றி மோனிகாவின் தந்தைதான் மகளுக்கு அனைத்தும் தர வேண்டும்.
சிசாரோ: [ஆவேசமாய் சினத்துடன்] நான் மறுக்கிறேன். மோனிகா என் மகள் இல்லை. அவளை நான் குடும்பத்திலிருந்து நீக்கி விட்டேன். என்றைக்கு என்னை மதிக்காது, கள்ளத் தனமாய் அனுமதி இன்றி கருமூர்க்கனை மணந்து அவன் பின் சென்றாளோ அன்று முதல் அவள் என் ஏக புதல்வி இல்லை.
ஒத்தல்லோ: [வருத்தமுடன்] நான் உதவக் கூடிய நிலையில் வருமானம் இல்லாதவன்.
மோனிகா: [மனம் வெகுண்டு] நான் என் தந்தையோடு இனி வாழ முடியாது, தினம் அவருடைய அவச்சொல்லை தாங்கிக் கொண்டு. வேதனை தரும் எனக்கும், அவருக்கும். பேரன்பு மிக்க டியூக் நீங்கள்தான் எனக்கு ஒரு பாதுகாப்பு அமைத்து தரவேண்டும்.
டியூக்: நீ வேண்டுவது என்ன மோனிகா ?
[தொடரும்]
- அகழ்நானூறு 15
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
- வரிதான் நாட்டின் வருமானம்
- அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
- ஹைக்கூக்கள்
- மாலை நேரத்து தேநீர்
- கடவுளின் வடிவம் யாது ?
- பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
- பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
- நாவல் தினை – அத்தியாயம் மூன்று
- எலுமிச்சை ஆர்ஸோ