This entry is part 5 of 11 in the series 19 பெப்ருவரி 2023

ச. இராஜ்குமார்

1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி

இறைத்துவிட்டுச் செல்கிறது

மழை ஞாபகத்தை ……!

2) வைரமாய் ஜொலிக்கிறது 

இரவு பனித்துளியில் நனைந்த

தும்பியின் இறக்கைகள்.

3) சுழலும் மின்விசிறி

கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது

தேனீர்க் கோப்பையின் சூடு …!!

ச. இராஜ்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் 

Series Navigationஅந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்மாலை நேரத்து தேநீர்