Posted inகவிதைகள்
தேடலின் முடிவு
செந்தில் இயற்க்கையின் மடியிலமர்ந்து இடைவிடாமல் விகசிக்கிறான் மனிதன், “முழு முதற் காரணம் ஒன்று” உண்டென்றும் இல்லையென்றும்! உண்டு என்பவன் உரைக்கிறான் “அது இங்கே அங்கே இயற்க்கைக்கும் அப்பால்” என! எதிலும் அது இல்லை, இல்லவே இல்லை என்கிறான் அறுதியிட்டு மற்றவனோ! முடிவில்லாத "சத்தியமோ" இயற்க்கையின் இயக்கமாக, ஒன்றாக! பலவாக! உளனாக! இலனாக! ஒன்றும் அற்றதாக! அனைத்துமாக! அல்லவை அனைத்துமாக! இயற்க்கைக்கு அப்பால் ஒரு கடவுள், அதற்க்கும் அப்பால் மற்றுமோர் கடவுளென முடிவற்ற காரண காரணி இயக்கம் தேடலின் மூலம் கண்டடைய இயலாத....சாத்தியமில்லாத ஒன்று! ஆதலின் கடவுளுக்குள் மனிதன், மனிதனுக்குள் கடவுள் என,மடியிலும் மனதிலும் வசிக்கும் மடியாத அந்த ஒன்று சாத்தியம்தான்!