This entry is part 13 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா

சேர்த்து வைத்திருக்கிறேன்

மூன்று வருடங்களாக

தீபாவளிக்கு

பொங்கலுக்கு

உன் பிறந்த நாளுக்கு

என் பிறந்த நாளுக்கு

நமது மணநாளுக்கு

எப்போதும் போல்

நம்மிருவருக்கும்

உடைகள் வாங்கித் 

தனித் தனி பெட்டிகளில்

அவை நிரம்புவதற்குள்

வந்து விடுவாய் 

நீ

எனக்குத் தெரியும் 

நிரம்பாவிட்டாலும்…

சொல்லி விடுகிறேன்

இப்போதே..

முடிந்து வைத்துக் கொள்

வீர வணக்கம் செலுத்திய பின் 

உன் தேகத்திலிருந்த உரித்தெடுக்கப் பட்ட

உன் சீருடைக்கு

இவற்றில்

இடமில்லை

Series Navigationவீட்டுச் சிறைகாலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023