Posted in

கற்றுத் தரல்  

This entry is part 9 of 19 in the series 25 ஜூன் 2023

வளவ. துரையன்

வண்டியில் பூட்டப்பட்ட காளை

அடுத்த பயணத்திற்குத் 

தயாராக இழுக்கிறது.

சுமை சற்று அதிகம்தான்.

நுகத்தடியைத் தாங்கும் 

இடத்திற்கு மேலே கழுத்தில்

இருக்கிறது சிறு புண். 

கவனமாக அதைப் பார்த்துக்

காக்கை கொத்துகிறது.

காளையின் கவலை 

காகம் அறியாது.

வாலால் அடிக்க இயலாமல்

முடிந்தமட்டும் தலையை

ஆட்டிப் பார்க்கிறது காளை.

விலகி விலகிப் போனாலும் 

மீண்டும் மீண்டும் வந்து  

கொத்தி வாழ்க்கையைக் 

கற்றுத் தருகிறது காக்கை. 

Series Navigationஉள்மன ஆழம் காற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *