வலி

author
0 minutes, 5 seconds Read
This entry is part 14 of 19 in the series 25 ஜூன் 2023

ஆர் வத்ஸலா

அலுத்து தான் போய் விட்டது 

எனக்கு

ஆண்டுகள் ஆகியும் 

தினமும்  

ஞாபகக் குப்பையை கிளறி 

என் மனம்

அவன் தொடர்பான 

ஏதாவது ஒரு  சோக

சம்பவத்தை நினைவு கூறுவது

என் செய்வேன்?

அதை தடுக்க முடியவில்லையே!

இன்றும் அப்படித்தான் 

பல் ஒன்று சற்று வலித்ததும்

நினைவுக்கு வந்து விட்டது 

இன்னொரு குப்பை

சம்பவம்

அவனுடன் வாழ்ந்த  நாட்களில் ஒரு முறை

பல் வலி பொறுக்க முடியாமல் 

நான் அழுத சப்தம் கேட்டு 

பக்கத்து வீட்டு பாட்டி

வந்து விசாரிக்கவே

வேறு வழியின்றி 

அழைத்துச் சென்றான்

அதிக கட்டணம் வாங்காத 

பல் மருத்துவரிடம் 

சிகிச்சைக்குப் பிறகு

வலி போய் விட்டது

ஆனால் 

மறுநாள் 

காலையில் போன அவன்‌ வழக்கம் போல்

நள்ளிரவு திரும்பி

அழைப்பு மணியை

அலற விட்டதும்

சுரீரென திரும்பியது

பல் வலி

அதன் பிறகு 

ஒவ்வொரு வீடு திரும்பல் போதும்

Series Navigationபல்லியை நம்பிடைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *