சி. ஜெயபாரதன், கனடா
கண்காணிப்பு மகளிர் காப்பு வேலிக்குள் அடைப்பு
முதுமை ஊசல் ஆடுது இரவில் !
புதுமைச் சிறையில், புதிய உறவில் !
When will it be Dawn to fly ?
I will see the Swan in the sky.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கணவனும் மனைவியும் ஒரு குடும்பத்தில் சம்பாதித்து வாழ நேர்கிறது. அதனால் பெற்ற பிள்ளைகள் வளர்ப்பில் தாய் தந்தையர் நேரடிக் கண்காணிப்பு குறைகிறது. நோயில் போராடும் வயதான முதிரோரை வீட்டில் வைத்து மருத்துவப் பணி செய்ய நேரமும், வசதியு மின்றி தம்பதிகளைப் புறக்கணிக்கவோ, முதியோர் இல்லத்தில் தள்ளவோ நேரிடுகிறது. இது சரியா, தவறா என்னும் தர்க்க வாதம் செய்வது இக்கட்டுரையின் நோக்கமில்லை. முதியோரை காப்பு இல்லங்களில் சேர்க்க வேண்டிய தருணம் வந்து, அவருக்கு என்னென்ன வசதிகள் பெற ஏற்பாடு செய்வது என்பதே இந்த கட்டுரையின் குறிக்கோள்.
முதியோரில் மாதருக்கு என்ன வசதிகள் தேவை, ஆடவருக்கு என்ன தேவை, தம்பதியர் இருவரும் ஒரே இல்லத்தில் வசிக்க அறைகள் அமைக்க திட்ட மிட வேண்டும். முதியோர் இல்லத்தில் உணவு, மருத்துவம், குளிப்பு, உடுப்பு, களிப்பு, பயிற்சி, படுக்கை,காற்றோட்டம், மூன்று சமையில், அழுக்கணி துவைப்பு, அபாய நிலை சிகிட்சை, மருத்துவர், உதவி, பணி மாதர், கனிவு மகளிர் 24/7 கண்காணிப்பு வசதிகள் அமைக்க வேண்டும்.
ரிப்லி முதியோர் காப்பகத்தில் 20 அல்லது 25 எண்ணிக்கையில் சிஃப்டு முறையில் நால்வகைப் பெண்டிர் வேலை செய்து வருகிறார். அனுதினம் மருத்துவப் பணிக்கு, குளிப்பு, உடுப்பு, துணி துவைப்பு, தரை சுத்திகரிப்பு, சமையல், பாத்திரம் கழுவல், காய்கறி, கோதுமை, அரிசி, பருப்பு வாங்கல், அஞ்சல் அனுப்பல், எடுத்தல் போன்ற வேலைக்கு ஆடவர், பெண்டிர், ஷிஃட் முறையில் வேலை செய்து வருகிறார். பகல் வேளையில் பணி புரியும் மகளிர் பலர். இரவில் பணி புரியும் பெண்டிர் ஒருவர் அல்லது இருவரே.
ஐம்பது முதியோர் வசிக்கும் ரிவில்லா ரிப்லி இல்லத்தில் ஆடவர் எட்டு, மாதர் எண்ணிக்கை அதிகம். ஐம்பது பேரைக் கண்காணிக்கும் மகளிர், குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு சமயங்களில் ஆடவர், பெண்டிரு டன் நெருக்கமாகப் பழகவோ, பணி செய்யவோ நேர்கிறது. அப்போது இரு பாலாருக்கும் கவர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
ஆஷா மேல் ஏற்பட்ட கவர்ச்சி
நடாஷா என்பது அவள் பெயர். பதிவுப் பணி மாது. [Registered Nurse] கனேடிய மாது. புன்னகையுடன் காலை ஏழு மணிக்கு எனக்கு மருந்து கொண்டு வருவாள். நடுத்தர வயது. முகம் முழுவதும் தெரியாது, முகமூடி போட்டிப்பதால். கண்கள் மட்டும் தெரியும். காலை உணவு, பகல் உணவு எனக்கு மேஜையில் மற்றவருடன் பரிமாறுவாள். நல்ல உயரம். அவள் ஒரு சமயம் அறைக்கு மருந்து தர வந்த போது,
“நான் உன்னை ஆஷா என்று அழைக்கலாமா,” என்று கேட்டேன்.
“அழைக்கலாம்” என்று சொல்லிச் சிரித்தாள்
“நடாஷா, என்ற பெயர் நீளமாய் இருக்கு ! இந்தியாவில் ஆஷா என்பது பழக்கமான பெயர். சுருக்கமான பேர். கூப்பிட நல்லா இருக்கு.
“ உனக்குப் பிள்ளைகள் இருக்கா ? “ என்று கேட்டேன்.
“ஏனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை” என்று சிரித்தாள்.
“ கைவிரலில் வைர மோதிரம் மினுக்குதே.”
“ஏங்கேஜ்மெட் மோதிரம் அது. அடுத்த வருடம் திருமணம்.”
“எங்கே வேலை காதலர்க்கு ?
“ எஞ்சினியர். அணுப்பவர் கம்பெனியில். ஜூனியர் எஞ்சினியர்.
“உன்னை காமிராவில் படம் எடுக்கலாமா ?
“ ஓ எடுக்கலாமே” ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டாள்.
“முக மூடியை எடுக்க வேண்டுமே”
முகமூடியை நீக்கினாள். நாலைந்து படங்கள் ஐபோனில் எடுத்தேன். சிரித்த முகத்தில் அழகு பொங்கியது.
“டீனேஜர் போல் இருக்கிறாய்” என்றேன். கொல்லெனச் சிரித்தாள்.
“அப்படியா ? நன்றி. எனக்கு வயது 28.” என்று புன்னகை புரிந்தாள்.
என்னிடம் இருந்த லட்டு காஜூ தின்பண்டங்களைக் காட்டி, எது வேணுமோ அதை எடுத்துக் கொள். காஜூ ஒன்றை எடுத்து, அதன் பெயர் என்ன ? காஜூ என்றேன். முந்திரிப் பருப்பில் செய்தது.
“நல்லா இருக்கு. இன்னொன்று எடுத்துக்கொள்”
அடுத்தொன்று எடுத்துக் கொண்டு பை,பை சொல்லிப் போனாள்.
மறுநாள் காலை 7:30 மணிக்கு சீரியஸ் முகத்துடன் வந்தாள் ஆஷா.
“எடுத்த என் படங்களை அழித்து விடுங்கள். நான் மாட்டிக் கொள்வேன். உடனே எல்லா படத்தையும் நீக்கி விடுங்கள். என் படம் ஒன்று கூட உங்கள் ஐபோனில் இருக்கக் கூடாது. என் வேலை போய்விடும்.”
- சமையலறை கவிதைகள்
- முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3
- விலை
- ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?
- ஓ நந்தலாலா
- நாவல் தினை அத்தியாயம் இருபத்திரண்டு