This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா

முழுமையாக

நைந்துப் போன

துணியை 

விடாமல் இழுத்துப் பிடிக்கும் 

தையல் நூல் 

கடைசியில் 

சோர்ந்து போய்

தன்னை மட்டுமாவது 

காப்பாற்றிக் கொள்ள விழைவது போல 

நான் 

என் பாசம் நிறைந்த 

ஒரு பக்கத் தொடர்பை 

கண்டித்துத் 

துண்டித்துக் கொண்டு விட்டேன் 

வலி தெரியவில்லை    

பாச  நரம்புகள் 

முன்பே 

நைந்துப் போய்விட்டதால்

வெகுகாலம் கழித்து ரசிக்கிறேன் 

இப்போது

உனை நினையாமல் 

நிலத்தின் நீலப் பூக்களை  

கடலின் அலைகளை

நீல வானின்  நட்சத்திரங்களை

Series Navigationஅடுத்த முறை